சாமானியரை மணந்த இளவரசி: காதலுக்காக பட்டத்தை துறந்தார்

Updated : அக் 27, 2021 | Added : அக் 27, 2021 | கருத்துகள் (9)
Share
Advertisement
டோக்கியோ : கிழக்காசிய நாடான ஜப்பான் இளவரசி மகோ, சாதாரண குடிமகனான தன் காதலர் கெய் கொமுரோவை மணந்ததை அடுத்து, தன் இளவரசி பட்டத்தை துறந்தார். ஜப்பான் மன்னர் நருஹிட்டோ. இவரது மருமகள் மகோ. இவர் டோக்கியோ சர்வதேச கிறிஸ்துவ பல்கலைக்கழகத்தில் படித்தார்.வெளியேறினார்அப்போது இவருடன் படித்த சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த கெய் கொமுரோ என்ற இளைஞரை காதலித்தார். இருவரும்

டோக்கியோ : கிழக்காசிய நாடான ஜப்பான் இளவரசி மகோ, சாதாரண குடிமகனான தன் காதலர் கெய் கொமுரோவை மணந்ததை அடுத்து, தன் இளவரசி பட்டத்தை துறந்தார்.



latest tamil news



ஜப்பான் மன்னர் நருஹிட்டோ. இவரது மருமகள் மகோ. இவர் டோக்கியோ சர்வதேச கிறிஸ்துவ பல்கலைக்கழகத்தில் படித்தார்.


வெளியேறினார்


அப்போது இவருடன் படித்த சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த கெய் கொமுரோ என்ற இளைஞரை காதலித்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ள போவதாக 2017ல் அறிவித்தனர். சாமானியரை திருமணம் செய்வதால் அரச குடும்பத்தை விட்டு வெளியேறி, இளவரசி பட்டத்தையும் துறக்க வேண்டிய நிலை மகோவுக்கு ஏற்பட்டது, அதற்கு அவர் மனப்பூர்வமாக சம்மதித்தார்.

இதற்கிடையே கொமுரோவின் தாய் மீது பண மோசடி புகார் சுமத்தப்பட்டது. இதனால் திருமணம் தடைபட்டது. இதையடுத்து கெய் கொமுரோ அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சட்டம் படிக்க சென்றார். படிப்பை முடித்து கடந்த மாதம் ஜப்பான் திரும்பினார்.


latest tamil news



இந்நிலையில் பாரம்பரிய முறையில் இல்லாமல் வழக்கமான கொண்டாட்டங்களைத் தவிர்த்து சாதாரண மக்களைப் போல் திருமணம் செய்து கொள்ள காதலர்கள் முடிவு செய்தனர். இவர்கள் திருமணம் நேற்று காலை டோக்கியோவில் நடந்தது. அரண்மனையிலிருந்து நேற்று அதிகாலை மகோ வெளியேறினார்.


latest tamil news



9 கோடி ரூபாய்


முன்னதாக அவர் தன் பெற்றோர், இளவரசர் அகிஷினோ, இளவரசி கிகோ மற்றும் தங்கை ககோ ஆகியோரை ஆரத்தழுவி உணர்ச்சி பொங்க பிரியாவிடை பெற்றார். அப்போது அவர் மிகவும் எளிமையான ஆடை அணிந்திருந்தார். வெளிர் நீல நிற ஆடையில் தந்தை, தாய், சகோதர, சகோதரிகளை ஆரத்தழுவி விடை பெற்றார். பின் எளிமையான முறையில், கொமுரோ - மகோ திருமணம் நடந்தது.

இந்த திருமணத்தின் வாயிலாக இளவரசி பட்டத்தை மகோ துறந்தார். மேலும், 'அரச குடும்பத்தின் பெயரையும், தன் பெயருக்குப் பின்னால் அவர் பயன்படுத்த மாட்டார். அவரது கணவரின் குடும்பப் பெயரையே மகோ இனி பயன்படுத்துவார்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news



அரச குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள், சாமானியரை திருமணம் செய்து கொள்ளும் போது, 9 கோடி ரூபாய் சீதனமாக வழங்குவது வழக்கம். 'அந்த தொகை எனக்கு வேண்டாம்' என, மகோ நிராகரித்துள்ளார். புதுமண தம்பதியர், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் தங்கள் வாழ்க்கையை துவங்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தனர்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kumar - Madurai,இந்தியா
27-அக்-202116:06:48 IST Report Abuse
Kumar காதலுக்காக நான் என் காதலியையே துறந்துவிட்டேன். வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Cancel
R Ravikumar - chennai ,இந்தியா
27-அக்-202112:27:41 IST Report Abuse
R Ravikumar அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் . சற்று பொறாமையாக தான் இருக்கிறது . நாட்டின் ஹில் படம் பார்த்தது போன்ற உணர்வு ஏற்பட்டது . வாழ்த்துக்கள் .
Rate this:
Cancel
S. Bharani - singapore,சிங்கப்பூர்
27-அக்-202108:26:23 IST Report Abuse
S. Bharani நீடூழி வாழ வாழ்த்துகிறேன்... வாழ்க வளமுடன் பல்லாண்டு காலம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X