சர்ச்சை விளம்பரம்: நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டது 'டாபர்'

Updated : அக் 27, 2021 | Added : அக் 27, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி: 'கர்வா சவுத்' பண்டிகையை ஒட்டி 'டாபர்' நிறுவனம் வெளியிட்ட சர்ச்சைக்குரிய விளம்பரத்தை அந்நிறுவனம் திரும்ப பெற்றதுடன், நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது.கார்த்திகை மாத பவுர்ணமி தினத்தின் நான்காவது நாளை வட மாநில பெண்கள், 'கர்வா சவுத்' என்ற பெயரில் பண்டிகையாக கொண்டாடுகின்றனர். இந்த நாளில் கணவருக்கு மரியாதை செய்து, இருவரும் சேர்ந்து இரவில் நிலவை
Dabur, advertisement, Karwa Chauth

புதுடில்லி: 'கர்வா சவுத்' பண்டிகையை ஒட்டி 'டாபர்' நிறுவனம் வெளியிட்ட சர்ச்சைக்குரிய விளம்பரத்தை அந்நிறுவனம் திரும்ப பெற்றதுடன், நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது.

கார்த்திகை மாத பவுர்ணமி தினத்தின் நான்காவது நாளை வட மாநில பெண்கள், 'கர்வா சவுத்' என்ற பெயரில் பண்டிகையாக கொண்டாடுகின்றனர். இந்த நாளில் கணவருக்கு மரியாதை செய்து, இருவரும் சேர்ந்து இரவில் நிலவை பார்த்து வழிபடுவது வழக்கம். கணவரின் உடல்நலன் மற்றும் திருமண உறவு வலுப்பெற வேண்டி இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி 'டாபர்' நிறுவன தயாரிப்பான 'பெம் கிரீம்' என்ற சிகப்பழகு கிரீம் விளம்பரம் சமீபத்தில் வெளியானது. அதில் இரண்டு பெண்கள், கணவன் - மனைவியாக சித்தரிக்கப்பட்டனர். இது பல்வேறு தரப்பிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இந்த விளம்பரம் ஹிந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்தது.


latest tamil news



'விளம்பரத்தை திரும்ப பெறவில்லை எனில் சட்ட நடவடிக்கை பாயும்' என, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா எச்சரிக்கை விடுத்தார். இதையடுத்து சர்ச்சைக்குரிய விளம்பரத்தை 'டாபர்' நிறுவனம் திரும்ப பெற்றதுடன், நிபந்தனையற்ற மன்னிப்பும் கோரியது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
27-அக்-202112:45:38 IST Report Abuse
Ramesh Sargam ஹிந்துக்களின் உணர்வை சீண்டிப்பார்ப்பதே ஒரு சில நிறுவனங்களின் நோக்கமாகி விட்டது.
Rate this:
Cancel
Natchimuthu Chithiraisamy - TIRUPUR,இந்தியா
27-அக்-202110:58:24 IST Report Abuse
Natchimuthu Chithiraisamy இது போல் பல விளம்பரம் உள்ளது கவனியுங்கள்
Rate this:
Cancel
Ramakrishnan Sitaraman - Chennai,இந்தியா
27-அக்-202110:39:01 IST Report Abuse
Ramakrishnan Sitaraman ஹிந்து கலாச்சாரத்தை தவறாக சித்திகரிக்கும் எந்த விளம்பரமோ வியாபார யுக்தியோ அல்லது யாராவது மனம் புண் படும் படி பேசினாலோ எல்லா ஹிந்துக்களும் ஒன்றாக இணைந்து போராட வேண்டும். நமது சயமத்தைப் பாதுகாக்கும் கடமை நம் அனைவருக்கும் உள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X