பாகிஸ்தான் வெற்றியை கொண்டாடிய ஆசிரியை பணி நீக்கம்

Added : அக் 27, 2021 | கருத்துகள் (59)
Share
Advertisement
ஜெய்பூர்: கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் வெற்றி பெற்றதை கொண்டாடிய, ராஜஸ்தான் ஆசிரியை பணி நீக்கம் செய்யப்பட்டார்.ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயில், 'டி 20' உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. சமீபத்தில் நடந்த போட்டியில், இந்தியாவை பாகிஸ்தான் வென்றது. இதன் வாயிலாக, உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவுக்கு

ஜெய்பூர்: கிரிக்கெட் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் வெற்றி பெற்றதை கொண்டாடிய, ராஜஸ்தான் ஆசிரியை பணி நீக்கம் செய்யப்பட்டார்.latest tamil news


ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாயில், 'டி 20' உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடந்து வருகின்றன. சமீபத்தில் நடந்த போட்டியில், இந்தியாவை பாகிஸ்தான் வென்றது. இதன் வாயிலாக, உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்தியாவுக்கு எதிரான தன் முதல் வெற்றியை பாகிஸ்தான் பதிவு செய்தது.

ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில், தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் நபீசா அட்டாரி. கிரிக்கெட்டில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதும், 'வாட்ஸ் ஆப்'பில், 'நாம் வெற்றி பெற்றுவிட்டோம்' என பதிவு செய்து, மற்றவர்களுக்கு பகிர்ந்தார்.


latest tamil news


மேலும், வாட்ஸ் ஆப்பில் தன் 'ஸ்டேடஸ்' ஆக, பாக்., வீரர்களின் வெற்றிக் கொண்டாட்ட புகைப்படத்தையும் வைத்திருந்தார்; இது, பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, நபீசா அட்டாரியை பணி நீக்கம் செய்து பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மேலும், அவர் மீது போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து நபீசா கூறியுள்ளதாவது: நான் இந்தியர்; இந்தியா மீது பெரும் பற்று வைத்து உள்ளேன். ஜாலிக்காக பதிவிட்ட விஷயம், விவகாரமாகி விட்டது, யார் மனதையும் புண்படுத்தும் எண்ணம் எனக்கு இல்லை. நடந்த தவறுக்கு மன்னிப்பு கேட்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, பாகிஸ்தான் வெற்றி பெற்றதை கொண்டாடிய, ஜம்மு - காஷ்மீரைச் சேர்ந்த மருத்துவ கல்லுாரி மாணவ - மாணவியர் மீது, பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (59)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
28-அக்-202103:12:11 IST Report Abuse
மலரின் மகள் தங்கள் மீது நடவடிக்கை எடுக்கமாட்டார்கள். சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிவிடலாம் ஏனென்றால் நாம் செய்யும் தவறுகளை சட்டத்தின் முன் யாரும் எடுத்து செல்லமாட்டார்கள் அப்படியே எடுத்து செல்வோர் இருந்தாலும் அரசு பெரிது படுத்தாமல் இருந்துவிடும் என்ற தைரியத்தில் நிறைய பேர் இந்தியாவிற்கு எதிராக சகட்டு மேனிக்கு பகர்ந்தார்கள். தெளிவாக சொல்வதானால் நம்முடன் நெருங்கி பழகும் முஸ்லிம்களும், இந்துக்களுக்கு எதிரான திராவிட கட்சியின் கிறிஸ்துவ உறுப்பினர்களும். தமிழகத்தில் கிறிஸ்துவ நண்பர்களும் வடநாட்டில் முஸ்லிம்களும் இந்தியாவிற்கு எதிராக நிறைய பொய் பிரச்சாரங்களை செய்து அவர்கள் அகமகிழ்வார்கள். எதற்காக இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டல் நேரடி பதிலிருக்காது. காரணம் சொல்லத்தெரியாது, அல்லது அதை வெளிப்படுத்தவதற்கு விருப்பமிருக்காது. ஏனென்று புரிந்து கொள்ளலாம் அல்லது தெளிவாக இதுதானே என்று கேட்டு அறிந்து கொள்ளலாம். அதாவது இந்தியாவில் இருக்கும் அனைவரும் குறிப்பாக முதலில் இந்துக்கள் அனைவரும் முஸ்லிம் மதத்திற்கு மாறிவிடவேண்டும். பெயரை மாற்றிக்கொண்டு அவர்களின் குறிப்பை புத்தகங்களில் எழுதி வைத்து கொண்டால் போதுமானது. மற்றபடி ஜாதியை தொடர்ந்து அரசின் சலுகைகளை பெற்றுக்கொள்ளலாம் என்று நினைப்பவர்களாகவும் சொல்பவர்களாகவும் இருப்பார்கள். பாக்கித்தான் பிடித்ததென்றால் நீங்கள் ஏன் அங்கு சென்று செட்டில் ஆகிவிட கூடாது. அல்லது மலேசிய துருக்கி போன்ற தேசங்களுக்கு செல்லலாமே. பாஸ்போர்ட் வாங்கி வைத்திருக்கிறீர்கள் நீங்கள் திரும்ப வேண்டிய அவசியமில்லையல்லவா. அதுவும் இப்போதெல்லாம் அணைவருமே பத்து வருட பாஸ்போர்ட் வைத்த்திருக்கிறார்கள். என்று கேட்டால் ஒதுங்கி கொள்வார்கள். ஆழ் மனதில் அவர்களுக்கு எரிச்சல் இருந்து கொண்டிருக்கிறது. ஒருவித மனதிருப்தியற்ற நிலை இருந்துகொண்டே இருக்கிறது. எப்படியாவது தங்களுக்கு தாங்களாகவே வளர்த்து கொண்ட மற்றவர்களை ஒருவரையாவது தங்கள் மதத்திற்கு மாற்றிவிடவேண்டும் என்ற எண்ணம் நிறைவேற வழியில்லையே என்று என்று பரிதவிக்கும் மனநிலையில் இருக்கிறார்கள். புத்தகத்தில் சொல்லப்பட்டிற்குக்கிறது என்று அவர்களாகவே பலவற்றை கற்பனையும் செய்து கொள்கிறார்கள். சங்கிகள் என்று சொல்லி திட்டவேண்டும். கோமியம் குடிப்பவர்கள் என்று சொல்லி அடி மனதின் இயலாமையை வெளிப்படுத்துவதன் மூலம் சுயமாக ஆறுதல் அடைய முயற்சிக்கிறார்கள். இந்துக்களுக்கு எதிராக தமிழக கிருத்துவர்களும் முஸ்லிம்களும் இணைந்து கொண்டிருப்பார்கள் சோசியல் மீடியாக்களில் திட்டுவதில். இந்துக்கள் யாரும் அவர்களிடம் பிரச்சினைக்கு செல்வதில்லை, முன்பு ஒதுங்கி சென்றவர்கள் இன்று ஒதுக்கி வைத்துவிட்டு செல்கிறார்கள் என்று சொல்லலாம். உலகம் முன்னேற்றம் என்பதையும், நல்வாழ்வையும் நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஏழ்மை நிலையில் இருப்போர் நல்லெண்ணம் இல்லாததால் மதத்தின் பெயரால் அந்த மதத்திற்கு தவறிழைப்பவர்களாக மற்றவர்களுக்கு தீமை செய்கிறார்கள். மதம் தோன்றிய பூமியான சவூதி அரபியர்கள் குறிப்பாக ஆள்வோர் இந்துமதத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கவில்லை. மாறாக இப்போதெல்லாம் அவர்கள் இந்து மதத்தை ஆதரிக்கவும் செய்கிறார்கள். நமது அரசின் முயற்சியால் சவுதியின் பள்ளி படிப்பில் இராமாயண மகாபாரத இதிகாசங்கள் இடம் பெற்றிருக்கின்றன. அதையும் விட முக்கியமாக நமது பண்டிகை தினங்களில் கல்வி நிறுவங்கினாளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. அதை நேரிடையாக சொல்லாமல் வழக்கம் போல சொல்லாமல் விடுமுறை தினங்களை அவர்கள் நோடிபை செய்திருக்கிறார்கள் . சரஸ்வதி பூஜை விஜயதசமிக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது. வரும் தீபாவளி அன்று விடுமுறை அளிக்கப்படுகிறது. பொங்கல் மகர சங்கராந்தி தினத்திற்கு விடுமுறை அளிக்கப்படுகிறது இந்த வருடத்தின் துவக்கத்திலிருந்து. இதுவரை வெள்ளி சனி கிழமைகள் தவிர்த்து எந்த நாட்களிலும் விடுமுறை அளிக்கப்பட்டது இல்லை. இந்த வருடத்தின் பாடத்திட்டத்தில் அழைக்கப்படும் விடுமுறைகள் நிறைய அனைத்தும் நமது பண்டிகைக்கு விடுமுறைகளாக. சோதித்து அறிந்த கொள்ளலாம். துருக்கி மற்றும் ஈரானை விட்டு விலகி இஸ்ரேலுடன் அவர்கள் நேரிடையாக தொடர்பை ஏற்படுத்தி கொண்டிருக்கிறார்கள், பஹ்ரைன், அமீரகம் இணைத்து அவர்கள் இணைந்திருக்கிறார்கள். சவுதியின் பள்ளிகளில் இஸ்ரேலியர்களை பற்றிய முந்தைய பாடத்திட்டங்கள் நீக்கப்பட்டிருக்கிறது. இந்திய இஸ்ரேல் அமீரகம் உடன் சவூதி மிகவும் இணைய ஆசைகொண்டிருக்கிறது மற்றும் இணைந்திருக்கிறது இந்த பிராந்தியங்களில் இந்தியாவின் ராணுவ பாதுகாப்பின் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கிறது. பாகிஸ்தான் ஈரான் துருக்கி இன்று ப்ரொதேர்ஹூட் என்று அழைக்கப்படும் தீவிரவாத சவுதிக்கு அச்சுறுத்தல் தரும் நாடுகளாக அறியப்படுகின்றன. கத்தர் அதிலிருந்து விலகி சவுதியுடன் நட்பு பாராட்டுகிறது இப்போது. இந்து மத நூல்களை எடுத்து கொண்டு சவுதிக்கு செல்லலாம். சவுதியர்கள் தங்களை தகவமைத்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் நமதுநாட்டில் இருக்கும் இஸ்லாமியர்களுக்கு அது தெரியவில்லை. இப்போதெல்லாம் நமது மதத்திற்கு எதிராக யாரவது தாரக முயற்சித்தாலோ அல்லது தேசத்திற்கு களங்கம் விளைவித்தலோ சட்டம் உடனடியாக தனது கடமையை செய்கிறது. ஆகையால் தான் முஸ்லிம்கள் எனக்கு தெரிந்த நிறையபேர் காங்கிரஸ் ஆட்சி தான் வேண்டும் என்று சொல்கிறார்கள். குறிப்பாக தமிழக பீகார் உ பி முஸ்லிம்கள். காங்கிரசை ஒப்புக்கு சப்பாணியாக கூட அங்கே உள்ள கட்சிகள் தேர்தலில் கூட்டணிக்கு சேர்த்து கொள்ளமாட்டார்கள். அவர்களுக்கு தெரியும் காங்கிரசின் ஓட்டுக்களை தான் அவர்கள் கபளீகரம் எளிதில் செய்யலாம் என்பதால். சோசியல் மீடியாக்களில் பகிரும்போது மிகவும் கவனமாக பகிருங்கள் என்று முன்னாள் பிரதமர் திரு மன்மோகன் சிங் அறிவுரை வழங்கினார். அதை கேட்காதவர்கள் பணியிலக்கிறார்கள். நிறைய அரசு அலுவலர்கள் தமிழகத்தில் உண்டு. அவர்கள் அதிக கவனம் கொள்ளவேண்டும். கடந்த தேர்தலின் பொது ஒரு ஆசிரியை தபால் ஒட்டு இட்டு அதை படம் எடுத்து வாட்சப்பில் நிறைய பேருக்கு பகிர்ந்தார். பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அதன் பிறகு அவர்களின் சங்கம் தலையிட்டு பாணியிடை நீக்கத்தை ரத்து செய்யவைத்தது. அதற்காக சென்னையிலிருந்து சங்க ஊழியர்கள் பத்து பேருக்கு மேலிருக்கும் விமானம் மூலம் மதுரைக்கு வந்து காரில் மாவட்ட கல்வியாளுவரி சந்தித்து காரியம் செய்தார்களாம் அதையும் பகிரப்பட்ட நாங்கள் கூட சொன்னோம் எதோ அறியாமல் தவறு செய்துவிட்டு வருந்தி திருந்தியிருக்கிறீர்கள், அதை அப்படியே விட்டு விடுங்கள் மீண்டும் சங்கத்தினரை பாராட்டுவதாக நினைத்து திரைமறைவில் செய்த வேலையை பகிரங்கா படுத்தி மீண்டும் வேலையை இழந்துவிடாதீர்கள் என்று. வந்து சென்றோருக்கு விமான டிக்கெட் கார் செலாவது அது இது என்று லட்சத்திற்கு மேல் செலவு ஆகியிருக்கும். தேவையா ? அனைத்து மதங்களும் நல்லதையே போதிக்கின்றன. ஆகவே தான் அவைகள் அனைத்துமே புனித நூல்கள். அல்குரான் என்றால் பரிசுத்தமானதும் புனிதமானதுமான நூல். சாந்தியும் சமாதானமும் அதில் பிரதானமாக சொல்லப்பட்டிருக்கின்றன. இறைவனின் குணாதிசங்களாக அத்துணை சிறப்புக்களும் கருணையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. புனிதத்தைபாராயணம் செய்து புண்ணியமாக வாழக்கற்றுக்கொள்ளவேண்டும்.
Rate this:
Cancel
RaajaRaja Cholan - Montpellier,பிரான்ஸ்
27-அக்-202120:08:51 IST Report Abuse
RaajaRaja Cholan இருபத்து ஐந்து வருடத்திற்கு முன்பே , பாக்கிஸ்தான் வெற்றி பெற்ற ஒரு நிகழ்விற்கு நாகர்கோயிலில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி ஒரு சமூகத்தினர் கொண்டாடினர் , அதை விட இது பெரிய நிகழவில்லை , அப்பொழுதே அந்த வெறி , சமூக வலைத்தளங்கள் அதிகம் இல்லாத காரணத்தினால் வெளிய அதிகம் தெரியவில்லை
Rate this:
Cancel
அன்பு - தஞ்சை,கனடா
27-அக்-202118:44:54 IST Report Abuse
அன்பு இவருக்கு வேறு யாரும் குறைந்தது ஐந்து வருடங்களுக்கு வேலை கொடுக்க கூடாது
Rate this:
பெரிய ராசு - தென்காசி ,இந்தியா
27-அக்-202120:27:17 IST Report Abuse
பெரிய ராசு வாழ் நாள் முழுக்க செருப்படி கொடுக்க வேண்டும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X