ஹிந்து பாரம்பரியத்துக்கு அமெரிக்காவில் அங்கீகாரம்

Updated : அக் 27, 2021 | Added : அக் 27, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
வாஷிங்டன் : அமெரிக்கா முழுதும் அக்டோபர் மாதம் ஹிந்து பாரம்பரிய மாதமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக 20க்கும் மேற்பட்ட மாகாணங்கள் 40க்கும் மேற்பட்ட நகரங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.உலகம் முழுதும் உள்ள ஹிந்துக்கள் தசராதுர்கா பூஜை நவராத்திரி தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளை அக்டோபரில் கொண்டாடுகின்றனர். அமெரிக்காவில் வசிக்கும் ஹிந்துக்களின்
Hindu Heritage Month, America, October, celebrate, Hindu Festivals, Hindu, US

வாஷிங்டன் : அமெரிக்கா முழுதும் அக்டோபர் மாதம் ஹிந்து பாரம்பரிய மாதமாக கொண்டாடப்படுகிறது. இதற்காக 20க்கும் மேற்பட்ட மாகாணங்கள் 40க்கும் மேற்பட்ட நகரங்களில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

உலகம் முழுதும் உள்ள ஹிந்துக்கள் தசராதுர்கா பூஜை நவராத்திரி தீபாவளி உள்ளிட்ட பண்டிகைகளை அக்டோபரில் கொண்டாடுகின்றனர். அமெரிக்காவில் வசிக்கும் ஹிந்துக்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக அக்டோபர் மாதத்தை ஹிந்து பாரம்பரிய மாதமாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

மொத்தமுள்ள 50 மாகாணங்களில் டெக்சாஸ் நியூ ஜெர்சி ஜார்ஜியா புளோரிடா மிச்சிகன் உட்பட 20க்கும் மேற்பட்ட மாகாணங்கள் 40க்கும் மேற்பட்ட நகரங்களில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமெரிக்க அரசு வெளியிட்டு உள்ளது.


latest tamil news



அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: யோகாவில் இருந்து உணவு வரை பண்டிகைகளில் இருந்து தொண்டு வரை நடனம் இசை அஹிம்சை தத்துவங்கள் என அமெரிக்கர்களின் வாழ்வில் ஹிந்து கலாசாரம் இன்றியமையாத பங்கு வகித்துள்ளது.எனவே ஹிந்துக்களின் பங்களிப்புக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் இந்த மாதத்தை ஹிந்து பாரம்பரிய மாதமாக கொண்டாட முடிவுசெய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நவ. 4ல் கொண்டாடப்படுவதால் இந்த பாரம்பரிய மாத கொண்டாட்டத்தை மேலும் சில வாரங்கள் நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
27-அக்-202119:37:30 IST Report Abuse
Rajagopal அமெரிக்காவில் Afro-Dalit என்கிற இயக்கம் இருக்கிறது. அதாவது, அமெரிக்காவில் ஒடுக்கப்பட்ட கறுப்பர்களும், இந்தியாவில் ஒடுக்கப்பட்ட தலித்துக்களும் ஒன்று சேர்ந்து சமூக நீதிக்காகப் போராடும் இயக்கம். இது கிறித்துவ மிஷநரிகளால் நடத்தப்படுகிறது. அவர்களும், இதே போல அரசு அங்கீகாரம் பெற்று பெரியார்-அம்பேத்கர்-மார்ட்டின் லூதர் கிங் விழாவை அமெரிக்கா முழுதும் கொண்டாட வகை செய்வார்கள். இந்துக்கள் எது செய்தாலும், அதை எதிர்த்து இன்னொன்று செய்வதற்கு, மிஷநரி, இஸ்லாமிய, இடதுசாரி, காலிஸ்தான் இயக்கங்கள் உடனே தயாராக இருக்கின்றன.
Rate this:
Cancel
naadodi - Plano,யூ.எஸ்.ஏ
27-அக்-202119:27:22 IST Report Abuse
naadodi ஓட்டு வங்கி மட்டுமல்ல, அமெரிக்க கலாசாரம், பல்கலை, மருத்துவம், பொருளாதாரம், பொறியியல். ஊடகம், சாப்ட்வேர் முதலான பல துறைகளிலும் இந்தியர்கள் மேலோங்கியுள்ளதால் தான் இந்த recognition.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
27-அக்-202112:41:39 IST Report Abuse
Ramesh Sargam மிக்க நன்றி அமெரிக்க அரசுக்கு மற்றும் அமெரிக்க மக்களுக்கு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X