ஏலத்துக்கு வருகிறது 181 ஆண்டு பழமையான உலகின் முதல் தபால் தலை

Updated : அக் 27, 2021 | Added : அக் 27, 2021
Share
Advertisement
லண்டன்: உலகில் முதன் முதலில் பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் 181 ஆண்டு பழமையான 'ஸ்டாம்ப்' எனப்படும் தபால் தலை, ஏலத்துக்கு வருகிறது; இது, 61.82 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த 'சோத்பை' என்ற ஏல நிறுவனம், டிச., 7ல் உலகின் மிகப் பழமையான ஸ்டாம்பை ஏலத்துக்கு விட உள்ளது.'பென்னி பிளாக்' எனப்படும், பிரிட்டன்
First Stamp, Penny Black, Auction

லண்டன்: உலகில் முதன் முதலில் பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் 181 ஆண்டு பழமையான 'ஸ்டாம்ப்' எனப்படும் தபால் தலை, ஏலத்துக்கு வருகிறது; இது, 61.82 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த 'சோத்பை' என்ற ஏல நிறுவனம், டிச., 7ல் உலகின் மிகப் பழமையான ஸ்டாம்பை ஏலத்துக்கு விட உள்ளது.'பென்னி பிளாக்' எனப்படும், பிரிட்டன் நாணயமான ஒரு பென்னிக்கு விற்கப்பட்ட மூன்று ஸ்டாம்ப் தொகுப்பில், இரண்டு ஏற்கனவே அருங்காட்சியகத்தில் உள்ளன.


latest tamil news



மூன்றாவது ஸ்டாம்பை, ஸ்காட்லாந்தைச் சேர்ந்த அரசியல்வாதியான, ஸ்டாம்ப் சேகரிப்பாளர் ராபர்ட் வாலஸ் வைத்துள்ளார்.கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் அந்த ஸ்டாம்பை வாங்கிய அவர் ஆய்வுகளுக்குப் பின், அது, உலகின் முதல் ஸ்டாம்ப்களில் ஒன்று என்பதை உறுதி செய்துள்ளார்.

கடந்த 1840, ஏப்.,10ல் ஒருவர் எழுதிய கடிதத்தில் இந்த ஸ்டாம்ப் இடம்பெற்றுள்ளது. பிரிட்டன் ராணி விக்டோரியாவின் உருவம் உள்ள அந்த ஸ்டாம்ப், தற்போது ஏலத்துக்கு விடப்பட உள்ளது. இது, 61.82 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X