பொது செய்தி

இந்தியா

போலி வங்கி வலைதளம்; வாடிக்கையாளர் பணம் சுருட்டல் அதிகரிப்பு

Added : அக் 27, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
பெங்களுரு: பெரிய வங்கிகளின் வலைதளம் போல போலியாக உருவாக்கி வாடிக்கையாளர்களின் பணத்தை சுருட்டுவது அதிகரித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த நார்டன் லேப்ஸ் நிறுவனம், மின்னணு பிரிவில் நுகர்வோரின் பாதுகாப்பு குறித்து, ஜூலை-செப்., வரை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அதிகரிப்புஅதில் கூறப்பட்டுள்ளதாவது: முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள், வங்கிகள் ஆகியவற்றை போல
போலி வங்கி வலைதளம்; வாடிக்கையாளர் பணம் சுருட்டல் அதிகரிப்பு

பெங்களுரு: பெரிய வங்கிகளின் வலைதளம் போல போலியாக உருவாக்கி வாடிக்கையாளர்களின் பணத்தை சுருட்டுவது அதிகரித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த நார்டன் லேப்ஸ் நிறுவனம், மின்னணு பிரிவில் நுகர்வோரின் பாதுகாப்பு குறித்து, ஜூலை-செப்., வரை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட்டுள்ளது.


அதிகரிப்பு

அதில் கூறப்பட்டுள்ளதாவது: முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள், வங்கிகள் ஆகியவற்றை போல போலி வலைதளங்களை உருவாக்கி, வாடிக்கையாளர்களிடம் பண மோசடி செய்வது அதிகரித்துள்ளது. மக்களிடம் விழிப்புணர்வு இருந்தால் இத்தகைய மோசடிகளை தடுக்கலாம். 'தொழில்நுட்ப உதவிக்கு' என கண் சிமிட்டும் 'பாப்-அப்' விளம்பரங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். அதை 'கிளிக்' செய்து நுழைவோரின் வங்கி விபரங்கள் திருடப்பட வாய்ப்பு உள்ளது.


latest tamil newsஅதனால், பாப்-அப் விளம்பரங்களைகிளிக் செய்வதை விட, உரிய நிறுவனத்தின் அதிகாரபூர்வ வலைதளத்திற்கு சென்று தேவையான விபரங்களை பெறுவதே சிறந்தது. ஆய்வில், பெரிய வங்கி களைப் போல போலி வங்கிகளின் வலைதளத்தில் வாடிக்கையாளர்களை ஏமாற்றி விபரங்களை திருடுவது அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.


வலைதளங்கள் முடக்கம்

குறிப்பாக வங்கிகள் வழங்கும் 'கிப்ட் கார்டு' எனும் அன்பளிப்பு அட்டைகளில் தான் அதிக மோசடி நடக்கிறது. ஒரே நிறுவனம் பல கிப்ட் கார்டுகளை தயாரிப்பது தான் இதற்கு காரணம். உலகளவில் ஜூலை-செப்., வரை 1.23 கோடி போலி வலைதள முகவரிகள் முடக்கப்பட்டுள்ளன. சந்தேகத்திற்கிடமான, 86 கோடி வலைதளங்களின் செயல்பாடுகள் தடுக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் அச்சுறுத்தலான 1.72 கோடி வலைதளங்கள் முடக்கப்பட்டு உள்ளன.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh - chennai,இந்தியா
28-அக்-202112:20:08 IST Report Abuse
Ramesh பல விளம்பரங்கள் உண்மை போல Google advertisements il வருகின்றன. பிறகு PayU India பணத்தைப் பெற்று விடுகிறது. பின் வியாபாரியிடம் இருந்து ஒன்றும் வர வில்லை என்று complaint செய்தால் PayU தெரியாது என்கிறது. அதைப் பற்றி PM cell kku எழுதினால் 10 நாள் கழித்து case disposed என்று பதில் வருகிறது. ஆக fake merchants, Google, payUIndia, RBI, PM cell எல்லாம் கூட்டு. இந்தியாவில் பாமர மக்கள் ஏமாந்து தான் ஆகனும்
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
28-அக்-202107:58:26 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் உஷாரய்யா, உஷாரு பிஎம் கேர்ஸ் உஷாருன்னு அதுக்கும் இப்படி செய்தி போட்டு மக்களை அந்த கந்துவட்டி கும்பல் கிட்டேருந்து காப்பாத்தியிருக்கலாம்...
Rate this:
Cancel
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
28-அக்-202100:48:16 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் தன்னோட படத்தை கட்சிக் கமிஷனுக்கு, விளம்பரத்துக்கு, காசுக்கு வித்து டுபாக்கூர் போன் கம்பெனிக்காரன் ஏமாத்தின லட்சக்கணக்கான இந்தியர்கள். பிஎம் கேர்ஸ் ன்னு போட்டு, அரசாங்கத்துக்கு பணம் கொடுக்குறோமுன்னு நினைச்சி, ஏமாந்து குஜராத்தி கந்துவட்டிக்காரனுக்கு பணத்தை கொடுத்து ஏமாந்த கோடிக்கணக்கான ஏமாளி இந்தியர்கள்.. அவர்களுக்கு இதெல்லாம் பெரிய விஷயம் இல்லை.. ஏமாந்து போகவே பிறப்பெடுத்த ஏமாளிகள்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X