பொது செய்தி

தமிழ்நாடு

பெட்ரோல், டீசல் விலை; குறைக்குமா தமிழக அரசு?

Updated : அக் 27, 2021 | Added : அக் 27, 2021 | கருத்துகள் (37)
Share
Advertisement
சென்னை: பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா 100 ரூபாயை தாண்டியதால், தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், அவற்றின் விலைகளை குறைக்குமாறு, தமிழக அரசுக்கு வாகன உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்கின்றன. இதனால், எப்போது
Petrol, Diesel, Price, Reduce, Tamilnadu, Govt, பெட்ரோல், டீசல், விலை, குறைப்பு, தமிழக அரசு

சென்னை: பெட்ரோல், டீசல் விலை லிட்டருக்கு தலா 100 ரூபாயை தாண்டியதால், தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், அவற்றின் விலைகளை குறைக்குமாறு, தமிழக அரசுக்கு வாகன உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்கின்றன. இதனால், எப்போது இல்லாத வகையில் அவற்றின் விலைகள் உயர்ந்து வருகின்றன.சட்டசபை தேர்தலின் போது, 'நாங்கள் ஆட்சிக்கு வந்தால், அனைத்து தரப்பு மக்களின் நலத்தையும் கருத்தில் கொண்டு பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 ரூபாயும்; டீசல் லிட்டருக்கு 4 ரூபாயும் குறைக்கப்படும்' என்று தி.மு.க., தேர்தல் வாக்குறுதி அளித்தது.


latest tamil news


அக்கட்சி ஆட்சி அமைத்ததும், ஜூலையில் பெட்ரோல் விலை லிட்டர் 100 ரூபாயை தாண்டியது. இதனால் சிரமப்பட்ட வாகன உரிமையாளர்கள், பெட்ரோல் விலையை குறைக்குமாறு, தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.அதன்படி, ஆக., 13ம் தேதி நள்ளிரவு முதல் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்து, தமிழக அரசு உத்தரவிட்டது. தற்போது, பெட்ரோல் விலை மட்டுமின்றி டீசல் விலையும், 100 ரூபாயை தாண்டி தினமும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.


latest tamil news


பண்டிகை காலத்தில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், அவற்றுக்காகவே வாகன உரிமையாளர்கள் அதிகம் செலவிடுகின்றனர். இதனால், மற்ற செலவுகளும் அதிகரித்து, பலரும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் டீசல் விலையை குறைக்குமாறு, வாகன உரிமையாளர்கள், அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், பெட்ரோல் விலையை மேலும் 2 ரூபாய் குறைக்கும்படியும் வலியுறுத்தியுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bala - chennai,இந்தியா
27-அக்-202118:06:06 IST Report Abuse
Bala ஸ்டேட் கவர்ண்மெண்ட ட பெட்ரோல் விளைய குறைக்க சொல்லுது என்ன ஸ்டாலின்னா இப்ப பிரதம மந்திரி .
Rate this:
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
27-அக்-202123:57:39 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம்நடுத்தர, ஏழை மக்களை பத்தி கவலைப்படாத ஊர் சுத்தி பிரதமர் இருக்கும் போது இப்படித் தான் இருக்கும்.. சங்கிகளுக்கே மறந்து போயிடிச்சு.. குன்றிய அரசை கேட்கவேண்டிய கேள்வியை எல்லாம் இங்கே வந்து கே(க)க்குறாங்க ....
Rate this:
Cancel
Gopinathan S - chennai,இந்தியா
27-அக்-202116:57:02 IST Report Abuse
Gopinathan S முதலில் ஒன்றிய அரசு குறைக்கட்டும், அப்போதுதான் மாநில அரசை கேள்வி கேக்கும் தகுதி வரும்...
Rate this:
Cancel
mohan - chennai,இந்தியா
27-அக்-202116:49:49 IST Report Abuse
mohan பெட்ரோலை பிரைவேட் பண்ணி விட்டால் எல்லாம் சரியாகி விடும்...
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
27-அக்-202121:49:34 IST Report Abuse
Mirthika Sathiamoorthiஅப்பால எங்களுக்கு கிடைக்குற CHESS வரி யார்கொடுக்குறது? ஓசியில ஊசிபோடுறியே நன்றிவிசுவாசம் வேணாம்? தூரத்தில ராமர்கோவில் கோபுரம் தெரியுதா? கன்னத்துல போட்டுக்கோ.. இந்தியாவில எந்த இடத்திலிருந்துபாத்தாலும் கோபுரம் தெரியுற மாதிரி காட்டுறோம்..பணத்தை தண்ணியாட்டம் செலவுபண்ணி... இதுக்கெல்லாம் காசு? நாளைக்கு டெய்லி பூஜ முடிஞ்சவுடனே இந்தியாவில் உள்ள அதைனை குடும்பங்களுக்கும் விபூதியும் குங்குமமும் வீடுதோறும் அதான்ப்பா டோர்டெலிவரி வழங்கும் ட்ரோன்கள் தயாரிக்கப்படவுள்ளன இதுக்கு எவன் செலவு பண்ணுவது? வந்துட்டன் பிரைவேட் பண்ண சொல்ல.......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X