மேற்கு வங்க மாநிலத்தில் பான் மசாலாவுக்கு தடை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

மேற்கு வங்க மாநிலத்தில் பான் மசாலாவுக்கு தடை

Updated : அக் 27, 2021 | Added : அக் 27, 2021 | கருத்துகள் (4)
Share
கோல்கட்டா: உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் தயாரிக்கவும், விற்கவும், மேற்கு வங்க மாநில அரசு தடை விதித்துள்ளது.மேற்கு வங்க மாநில உணவுப் பாதுகாப்பு துறை ஆணையர் தபான் கே ருத்ரா வெளியிட்டுள்ள உத்தரவு: மக்களின் ஆரோக்கியத்தை கருத்தில் வைத்து குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் தயாரிக்கவும், விற்கவும்
West Bengal, Bans, Gutkha, Pan Masala, மேற்குவங்கம், பான்மசாலா, குட்கா, தடை

கோல்கட்டா: உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கும் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் தயாரிக்கவும், விற்கவும், மேற்கு வங்க மாநில அரசு தடை விதித்துள்ளது.

மேற்கு வங்க மாநில உணவுப் பாதுகாப்பு துறை ஆணையர் தபான் கே ருத்ரா வெளியிட்டுள்ள உத்தரவு: மக்களின் ஆரோக்கியத்தை கருத்தில் வைத்து குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள் தயாரிக்கவும், விற்கவும் ஓராண்டுக்கு தடை விதிக்கப்படுகிறது.


latest tamil news


புகையிலை மற்றும் நிகோடின் ஆகியவை குட்கா, பான்மசாலாவில் பயன்படுத்தப்படுகின்றன. இந்தப் பொருட்களின் விற்பனையால் மாநில அரசுக்கு கணிசமான அளவில் வரி வருமானம் கிடைக்கிறது. இருப்பினும் மக்களின் உடல் நலனை கருத்தில் வைத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X