பொது செய்தி

தமிழ்நாடு

மோடி அரசில் பொருளாதாரம் தான் சரியில்லை என கூறி வந்தீர்கள். இப்போது வௌியுறவும் சரியில்லையா...?

Updated : அக் 27, 2021 | Added : அக் 27, 2021 | கருத்துகள் (25)
Share
Advertisement
பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி அறிக்கை:லடாக் மற்றும் அருணாச்சல பிரதேசத்தின் சில பகுதிகளை சீனாவிடம் மோடி அரசு இழந்து வருகிறது. மற்றொரு புறம் சீனா உட்பட அண்டை நாடுகளின் நட்புறவையும் இழக்கிறது. பாகிஸ்தானும், ஆப்கனும் சேர்ந்து, காஷ்மீர் விவகாரத்தில் பயங்கரவாத போர் நடத்த தயாராகி வருகின்றன.மோடி அரசில் பொருளாதாரம் தான் சரியில்லை என கூறி வந்தீர்கள். இப்போது
பேச்சு_பேட்டி_அறிக்கை, சுப்பிரமணியசாமி

பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி அறிக்கை:
லடாக் மற்றும் அருணாச்சல பிரதேசத்தின் சில பகுதிகளை சீனாவிடம் மோடி அரசு இழந்து வருகிறது. மற்றொரு புறம் சீனா உட்பட அண்டை நாடுகளின் நட்புறவையும் இழக்கிறது. பாகிஸ்தானும், ஆப்கனும் சேர்ந்து, காஷ்மீர் விவகாரத்தில் பயங்கரவாத போர் நடத்த தயாராகி வருகின்றன.


மோடி அரசில் பொருளாதாரம் தான் சரியில்லை என கூறி வந்தீர்கள். இப்போது வௌியுறவும் சரியில்லையா... அப்போ, எது தான் சரியாக இருக்கிறது என சொன்னால் நன்றாக இருக்கும்!


தமிழக காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம் பேட்டி:
ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி சிறப்பாக நடக்கிறது. தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றி இருக்கிறார்; வெள்ளை அறிக்கை வெளியிட்டிருக்கிறார். இன்றைக்குத் தேர்தல் நடந்தால் கூட கடந்த தேர்தலை விட, 5 - 10 சதவீதம் ஓட்டுகள் கூடுதலாக பெறுவார்.


காங்கிரஸ் தலைவர் அழகிரியை, இந்த, 'ஜிங்சாக்' விஷயத்தில் மிஞ்சி விடுவீர்கள் போலிருக்கிறதே!


தி.மு.க., பொதுச் செயலர் துரைமுருகன் பேச்சு:
அப்பா செய்த தொழிலை தான் மகன் செய்ய வேண்டும் என்று இருந்த நிலையை மாற்றியதற்கு திராவிடமும் ஒரு காரணம். திராவிடம் மற்றும் ஈ.வெ.ரா.,வை இன்றைய இளம் தலைமுறையினருக்கு கொண்டு சேர்க்காதது நம் தவறு தான்.


ஆட்சி, அதிகாரம், சொத்து சேர்ப்பதில் கவனம் செலுத்தியதால், இந்த இரண்டையும் கண்டுகொள்ளாமல் விட்டு விட்டீர்களோ?


latest tamil news


விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அறிக்கை:
சமூக நீதி கண்காணிப்புக் குழுவில் பெண் உறுப்பினர் மற்றும் பழங்குடி உறுப்பினர் நியமனம் இல்லை. தலித் மற்றும் தலித் அல்லாத சமூகங்களிலிருந்து பெண் உறுப்பினர்களை நியமிக்குமாறு முதல்வர் ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்.


நியாயம் தான். பெண்களுக்கு எல்லா குழுக்களிலும் இடமளிக்க வேண்டும்.


தமிழக சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு:
தாலிக்கு 8 கிராம் தங்கம் திட்டத்தை அறிவித்த முந்தைய, அ.தி.மு.க., அரசு அதற்கான நிதியை ஒதுக்காமல் விட்டு விட்டது. சமூக நலத்திட்டங்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக நாங்கள், 762 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து செயல்படுத்தி வருகிறோம்.


ஓ... அதனால் தான், நான்கைந்து மாதங்களாக, தாலிக்கு தங்கம் வழங்கப்படாமல் இருந்ததா... 762 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதால், ஏழை பெண்களுக்கு தங்கம் கிடைக்கும் என நம்பலாமா?


திராவிடர் கழகத் தலைவர் வீரமணி அறிக்கை:
சமூக நீதி கண்காணிப்பு குழுவை அமைத்து, தமிழக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பாராட்டுகள். இதுபோல, இந்தியாவின் 75 ஆண்டு கால வரலாற்றில் எந்த மாநில அரசும் செய்யவில்லை. அத்தகைய உயரிய செயலை ஸ்டாலின் செய்துள்ளார்.


அப்போ, ஜெயலலிதாவுக்கு சில ஆண்டுகளுக்கு முன், 'சமூகநீதி காத்த வீராங்கனை' என பட்டம் வழங்கினீர்களே... அவர் ஏதும் செய்யவில்லை என்கிறீர்களா?

Advertisement
வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அத்வைத் ராமன் - கலைஞர் கருணாநிதி நகர் ,இந்தியா
27-அக்-202120:30:39 IST Report Abuse
 அத்வைத் ராமன் 2017 செப்டம்பரில் கோரக்பூரில் BRD மருத்துவ கல்லூரியில் ஆயிரத்து ஐநூறுக்கும் மேற்பட்ட குழந்தைகள் இறந்தது, 2018 ல் உ.பி.Bahraich. பகுதியில் அரசு மாவட்ட மருத்துவமனையில் 45 நாட்களில் 71 குழந்தைகள் இறந்தது, லேட்டஸ்டாக 2021 மே ஜூன் மாதங்களில் மீரட் நகரில் ஒரு நாளைக்கு 25 ல் இருந்து 30 குழந்தைகள் வரை தனியார் மருத்துவ மனையில் இறந்தது போன்றவையெல்லாம் எந்த ஆட்சியில் நடந்தது. மீண்டும் மீண்டும் கடந்த கால ஆட்சியையே குறை சொல்லி கொண்டிருக்கும் பழக்கம் என்றைக்குத்தான் மாறுமோ.
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
27-அக்-202119:44:06 IST Report Abuse
Rajagopal சுசு எப்போதும் தனது சைடு பக்கமே கோல் போடக்கூடியவர். எப்போது இதை செய்வார் என்று அவருக்கே தெரியாது. அவரை பாஜக அரசில் ஒரு பெரிய மந்திரியாக ஆக்கி இருந்தால் இஷ்டத்திற்கு செயல் பட்டிருப்பார். பிரதம மந்திரிக்கு கட்டுப்பட்டு நடக்க மாட்டார். அதனால் அவருக்கு ஒரு பதவியும் கொடுக்காமல் கழட்டி விட்டார்கள். இப்போது பாஜக அரசுக்கு எதிராகக் கிளம்பி விட்டார். எண்பது வயதாகிறது. பேசாமல் வேறு ஏதாவது செய்யலாம். இந்து கோயில்களை அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கும் போராட்டத்தை நடத்தலாம். இல்லை ஈஸி சேரில் அமர்ந்துகொண்டு செய்தித்தாள் படிக்கலாம்.
Rate this:
Cancel
Davamani Arumuga Gounder - Namakkal,இந்தியா
27-அக்-202119:43:52 IST Report Abuse
Davamani Arumuga Gounder திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் தமிழ்நாட்டில் உதயமாகும் முன்பே .. அண்ணாதுரையும், கருணாநிதியும் பரம்பரை வேலையை விட்டு, நாடக நடிகர்களாகி - அதாவது சிலரின் பாஷையில் கூத்தாடிகளாகி, பின்னர மக்களுக்கு எடுத்துரைத்து, அதன் மூலம் அரிய திராவிட சித்தாந்தத்தை மக்களுக்கு புகட்டி,. அரசியல்வாதிகளாகவும், ஆட்சியாளர்களாகவும் மாறிவிட்டார்கள். ஆனால்.. திராவிட சிந்தாந்தம் நாட்டில் காலூன்றிய பின்னர்.. கட்சித்தலைவரின் மகன் கட்சித்தலைவர், பிரதம மந்திரியின் மகள், மகன், பேரன் பிரதம மந்திரி... இளைஞர் அணிச் செயலாளராக இருந்தவரின் மகன் இளைஞரணி செயலாளர், எம்.எல்.ஏ. வின் மகன் பேரன் எம்.எல்.ஏ.. மந்திரியின் மகன், பேரன் மந்திரி .. டாக்டரின் மகன் டாக்டர்.. என்று வாரிசுகள் தங்களின் பரம்பரையான குலத்தொழிலை மட்டுமே செய்யவேண்டும் என்ற எழுதப்படாத சட்டம்.. பாரத திருநாட்டில் நேரு குடும்பத்தில் தொடங்கி, பின்னர் தமிழ்நாட்டில் தீவிரமாக அமல் செய்யப்பட்டு, இப்பொழுது இந்தியா முழுவதும் பரவிவிட்டது.. இடையில், மகாத்மா காந்தி, சர்தார் வல்லபபாய் படேல், லால்பகதூர் சாஸ்திரி, மொரார்ஜி தேசாய், நிஜலிங்கப்பா உள்ளிட்ட நேர்மையான அரசியல்வாதிகளும்.. அந்த நேர்மையாளர்களில் மணிமகுடமாக திகழ்ந்த தமிழகத்தின் காமராசர் நேரடி வாரிசு இல்லாதவர்..மற்றும் நேரடி மகன், மகள்கள் இல்லாத எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதா தவிர.... இப்பொழுதுதான் பரம்பரை குலத்தொழில்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X