அரசியல் செய்தி

தமிழ்நாடு

தேர்தல் செலவு கணக்கு: தி.மு.க.,வில் பாதிதான் அ.தி.மு.க.,!

Updated : அக் 27, 2021 | Added : அக் 27, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
கடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., செலவழித்ததில், சரி பாதியே அ.தி.மு.க, செலவழித்துள்ளதாக தேர்தல் கமிஷனில் கணக்குக் காண்பிக்கப்பட்டுள்ளது.கடந்த ஏப்ரலில் நடந்த சட்டசபை தேர்தலின்போது, விளம்பரங்கள் வெளியிடுவதில் அ.தி.மு.க., - தி.மு.க., கட்சிகளுக்கும் இடையே மிகக்கடுமையான போட்டி இருந்தது. இந்த இரண்டு கட்சிகளும், செலவு செய்த விபரங்களை, தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்துள்ளன. அந்த
ADMK, DMK, Election,

கடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., செலவழித்ததில், சரி பாதியே அ.தி.மு.க, செலவழித்துள்ளதாக தேர்தல் கமிஷனில் கணக்குக் காண்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரலில் நடந்த சட்டசபை தேர்தலின்போது, விளம்பரங்கள் வெளியிடுவதில் அ.தி.மு.க., - தி.மு.க., கட்சிகளுக்கும் இடையே மிகக்கடுமையான போட்டி இருந்தது. இந்த இரண்டு கட்சிகளும், செலவு செய்த விபரங்களை, தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்துள்ளன. அந்த விபரங்கள், தேர்தல் கமிஷன் இணையப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளன.


ஐபேக்குக்கு ஐந்து கோடி!


இந்த தேர்தலில், தி.மு.க.,வின் தேர்தல் வியூகத்தை வகுத்த, 'ஐபேக்' நிறுவனத்துக்கு, மிகப்பெரிய தொகை கொடுத்ததாகத் தகவல் பரவியிருந்தது. ஆனால் தேர்தல் கமிஷனில் தி.மு.க., தாக்கல் செய்துள்ள கணக்கில், 'இண்டியன் பேக்' என்ற அந்த நிறுவனத்துக்கு ஐந்து கோடி ரூபாய் மட்டுமே கொடுத்துள்ளதாகக் கணக்குக் காண்பிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்களுக்கு மட்டும் 48 கோடியே 75 லட்ச ரூபாய் நிதி, தி.மு.க., தலைமையால் தரப்பட்டுள்ளது.நாளிதழ், 'டிவி' மற்றும் சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்ததற்கு, 39 கோடியே 78 லட்ச ரூபாய் செலவிட்டுள்ளதாக தி.மு.க., கணக்குக் காண்பித்துள்ளது.


latest tamil news


'ஸ்டாலின்தான் வாராரு' விளம்பரம் வருவதற்காக கூகுள் இந்தியா நிறுவனத்துக்கு 2கோடியே 28 லட்ச ரூபாயை தி.மு.க., கட்டணமாகச் செலுத்தியுள்ளது.ஸ்டாலினின் ஹெலிகாப்டர் செலவு மட்டுமே, இரண்டே கால் கோடி ரூபாயாகியுள்ளது. போஸ்டர், பேனர், கட் அவுட், விளம்பரப் பலகைகள், பல்க் எஸ்.எம்.எஸ் போன்றவற்றுக்காக 12 கோடியே 34 லட்ச ரூபாய் செலவு செய்துள்ளது தி.மு.க., தலைமை. மொத்தத்தில் 114 கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாக தேர்தல் கமிஷனில் தி.மு.க., தாக்கல் செய்துள்ள செலவினப் பட்டியலில் விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


latest tamil news



எல்லாமே சொந்தச் செலவு!


தி.மு.க., செய்துள்ள செலவில், சரி பாதி அதாவது 57 கோடி ரூபாய் மட்டுமே செலவு செய்துள்ளதாக அ.தி.மு.க., கணக்குக் காண்பித்துள்ளது. இதில் விளம்பரத்துக்காக மட்டுமே, 56 கோடியே 65 லட்ச ரூபாய் செலவிட்டுள்ளது அ.தி.மு.க., தலைமை.அதிலும் அதிகபட்சமாக சமூக ஊடகங்களுக்காகத்தான், 11 கோடியே 84 லட்ச ரூபாய் செலவு செய்துள்ளதாக அதில் விபரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க., தலைவர்கள் மற்றும் நட்சத்திரப் பேச்சாளர்கள் அனைவரும் தங்களுடைய சொந்தச் செலவில், பிரசாரத்துக்குச் சென்றதாகக் கூறப்பட்டுள்ளது. ஒரே ஒரு நாள் பழனிசாமி, ஹெலிகாப்டரில் சென்றதற்கு ரூ.13 லட்சத்து 23 ஆயிரம் செலவிடப்பட்டுள்ளது. செலவைப் போலவே தி.மு.க., வெற்றி பெற்றதில் பாதித் தொகுதிகளில்தான் அ.தி.மு.க., வெற்றி பெற்றுள்ளது.
-நமது சிறப்பு நிருபர்-

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vaithilingam Ahilathirunayagam - london,யுனைடெட் கிங்டம்
27-அக்-202123:43:27 IST Report Abuse
Vaithilingam Ahilathirunayagam அதிமுகவுக்கு எம்ஜிஆர், ஜெயலலிதா போன்றவர்கள் தேவை. தொண்டர்கள் முக்கிய பொறுப்புக்கு வரவேண்டும். கட்சியைக் காப்பாற்ற வேண்டும்.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
27-அக்-202120:02:27 IST Report Abuse
Bhaskaran வருமான வரித்துரையும் தேர்தல்கமிஷனும் ஆமாம் போடும்
Rate this:
Cancel
பச்சையப்பன் கோபால் புரம். ஆக ஆக ஆஹா!! தளபதி தாயுள்ளத்துடன் அள்ளி குடூத்துள்ளார். அடிமைகள் பிசுநாறிகள், உலகமாக கஞ்சர்கள். மரத் லமிழ் நாட்டில் பாலாறும் தேனாறும் ஓட வைக்க தளபதி செய்யும் சிறு முயற்சி இது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X