கனடா பாதுகாப்பு அமைச்சராக இந்திய வம்சாவளியை சேர்ந்த தமிழ் பெண் நியமனம்

Updated : அக் 27, 2021 | Added : அக் 27, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
டோரண்டோ: கனடாவில் அமைக்கப்பட்டுள்ள புதிய அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராக இந்திய வம்சாவளியை சேர்ந்த தமிழ் பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.கனடா பார்லிமென்டிற்கு கடந்த செப்டம்பரில் நடந்த தேர்தலில், ஆளும்கட்சியான லிபரல் கட்சி பெருவாரியான ஓட்டுகள் பெற்று வெற்றிப்பெற்றது. இதனையடுத்து 3வது முறையாக ஜஸ்டின் ட்ரூடோ பிரதமராக பதவியேற்றார். இந்நிலையில் புதிய அமைச்சரவை
Anita Anand, Second Woman, Canada, Defence Minister, அனிதா ஆனந்த், கனடா, பாதுகாப்பு அமைச்சர்

டோரண்டோ: கனடாவில் அமைக்கப்பட்டுள்ள புதிய அமைச்சரவையில் பாதுகாப்பு அமைச்சராக இந்திய வம்சாவளியை சேர்ந்த தமிழ் பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.

கனடா பார்லிமென்டிற்கு கடந்த செப்டம்பரில் நடந்த தேர்தலில், ஆளும்கட்சியான லிபரல் கட்சி பெருவாரியான ஓட்டுகள் பெற்று வெற்றிப்பெற்றது. இதனையடுத்து 3வது முறையாக ஜஸ்டின் ட்ரூடோ பிரதமராக பதவியேற்றார். இந்நிலையில் புதிய அமைச்சரவை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்த புதிய அமைச்சரவையின் பாதுகாப்பு துறை அமைச்சராக இந்திய வம்சாவளியை சேர்ந்த அனிதா ஆனந்த் (வயது 54) நியமிக்கப்பட்டுள்ளார். இவரது தந்தை எஸ்.வி.ஆனந்த் தமிழகத்தை சேர்ந்தவர், தாயார் பஞ்சாப் மாநிலத்த சேர்ந்தவர்.


latest tamil news


லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்ட அனிதா ஆனந்த், 14,511 ஓட்டுகள் பெற்று வெற்றி அடைந்திருந்தார். மேலும் பொது சேவைகள் மற்றும் கொள்முதல் துறையில் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். இதற்கு முன்னதாக முன்னாள் பிரதமர் கிம் கேம்ப்பெல் என்னும் ஒரே பெண்மணியே கனடாவின் பாதுகாப்பு அமைச்சராக பதவி வகித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaranarayanan - Chennai-Tamilnadu,இந்தியா
28-அக்-202101:16:12 IST Report Abuse
sankaranarayanan இந்தியாவிலிருந்து - தமிழ் நாட்டிலிருந்தும் பலவிதங்களில் - ஜாதி வெறி - இடஒதிக்கிடு - இனவெறி - பெண்களுக்கு பாதுகாப்பின்மை - இவைகளுக்கு ஆளாகி அவதிப்பட்டு வெளிநாடு சென்று கஷ்டப்பட்டு உழைத்து வாழ முற்படுத்தப்பட்டவர்களை - பிற்படுத்தப்பட்டவர் - மொழிவெறி - இவைகளுக்கெல்லாம் ஆளாகி வெளிநாடு சென்று, உழைப்பால் முன்னுக்கு வந்தால், பிறகு இங்குள்ளவர்கள் அவர்களை தமிழன் என்பார்கள் - தமிழ்க்குடி மக்கள் என்பார்கள் - பூர்விக்கம் பார்ப்பார்கள் - பிறந்தவூர் , கோயில் வீடு இவைகளை புதுப்பிப்பார்கள். இதுதான் நடை முறை. இப்படிப்பட்டவர்கள் இங்கு இருக்குபோது தமிழ்நாட்டிலேயே இருக்கும்போது அவர்களை - வந்தேறிகள் - ஆரியன் - அந்தணன்- பாப்பான் - இன்னும்பல ஏளன வார்த்தைகளை உபயோகித்து, இப்போது அவர்களையே சொந்தம் கொண்டாடி அவர்கள் அருகில் சென்று ஏதாவது ஆதாயம் தேடுவார்கள் இதுதான் தமிழ்நாட்டில் நடப்பு ஊடகங்களும் அப்படித்தான் செய்கின்றன அறிவிற்கு - ஆற்றலுக்கு - முன்னேற்றத்திற்கு - ஊக்கத்திற்கு இங்கு மதிப்பில்லை உதவியும் இல்லை
Rate this:
Cancel
Rajagopal - Los Angeles,யூ.எஸ்.ஏ
27-அக்-202119:39:09 IST Report Abuse
Rajagopal வெளிநாட்டில் தமிழ் பெயர் இருந்தால் தமிழன். தமிழ் தெரியாவிட்டால் பரவாயில்லை. தமிழகத்தில் தமிழ் பெயர் இல்லாவிட்டாலும் தமிழன். தமிழ் தெரியாவிட்டாலும் பரவாயில்லை.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
27-அக்-202118:21:37 IST Report Abuse
Natarajan Ramanathan இவரது தந்தையும் .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X