பெகாசஸ் ஒட்டு கேட்பு வழக்கு: 3 பேர் கொண்ட நிபுணர் குழு விசாரணைக்கு உத்தரவு

Updated : அக் 27, 2021 | Added : அக் 27, 2021 | கருத்துகள் (28+ 2)
Share
Advertisement
புதுடில்லி: :'பெகாசஸ்' போன் ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம், இதற்காக, முன்னாள் நீதிபதி ரவீந்திரன் தலைமையில் 3 பேர் கொண்ட சிறப்பு நிபுணர் குழுவை அமைத்துள்ளது.மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலின் என்.எஸ்.ஓ., நிறுவனம் தயாரித்த, பெகாசஸ் என்ற உளவு மென்பொருள் வாயிலாக பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட
பெகாசஸ், உச்சநீதிமன்றம், சுப்ரீம்கோர்ட், Pegasus, supremecourt,

புதுடில்லி: :'பெகாசஸ்' போன் ஒட்டுக் கேட்பு விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள உச்சநீதிமன்றம், இதற்காக, முன்னாள் நீதிபதி ரவீந்திரன் தலைமையில் 3 பேர் கொண்ட சிறப்பு நிபுணர் குழுவை அமைத்துள்ளது.

மத்திய கிழக்கு நாடான இஸ்ரேலின் என்.எஸ்.ஓ., நிறுவனம் தயாரித்த, பெகாசஸ் என்ற உளவு மென்பொருள் வாயிலாக பத்திரிகையாளர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் உட்பட 300க்கும் மேற்பட்ட பிரபலங்களின் போன் உரையாடல்களை மத்திய அரசு ஒட்டுக் கேட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டது. 'இந்த விவகாரத்தை தனி அதிகாரம் படைத்த அமைப்பின் வாயிலாக விசாரிக்க உத்தரவிட வேண்டும்' என, உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரும் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், ஒட்டுக் கேட்பு விவகாரத்தில், பெகாசஸ் மென்பொருளை சட்ட விரோதமாக மத்திய அரசு பயன்படுத்தியதா, இல்லையா என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது.

இதற்கு பதில் அளித்த மத்திய அரசு, 'இந்த விவகாரத்தில் மறைப்பதற்கு ஒன்றுமில்லை. விரிவான அறிக்கை தாக்கல் செய்வது தேச நலனுக்கு நன்மை அளிக்காது. 'எனவே அறிக்கை தாக்கல் செய்ய விரும்பவில்லை. நிபுணர் குழு அமைத்து ஆய்வு செய்து, நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்கிறோம்' என, தெரிவித்தது.


விசாரணை
latest tamil news
இதைக் கேட்ட நீதிபதிகள், 'இந்த விவகாரம் குறித்து விசாரிக்க, தொழில்நுட்ப நிபுணர் குழு அமைக்கப்படும்.'தனி அதிகாரம் படைத்த அமைப்பு விசாரணை நடத்துவது குறித்து விரைவில் தீர்ப்பு வழங்கப்படும்' என, சமீபத்தில் உத்தரவிட்டது.


தனிநபர் உரிமை முக்கியம்இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் இன்று வழங்கிய இடைக்கால தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளதாவது: பெகாசஸ் விவகாரத்தில் முன் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் மிகவும் முக்கியமானவை. குடிமக்களின் தனிநபர் உரிமையும் முக்கியம். தொழில்நுட்ப காலத்தில் அதனை பாதுகாப்பதும் முக்கியம். தொழில்நுட்பம் எவ்வளவு முக்கியமோ அதேயளவு தனிநபர் உரிமையும் பாதுகாப்பது அவசியம். தேசநலன் எனக்கூறி, தனிநபர் உரிமையை பறிக்கக்கூடாது.


நீதிமன்றம் கண்காணிக்கும்இந்த விவகாரத்தில், மத்திய அரசு குறிப்பிட்டு எதையும் மறுக்கவில்லை. இதனால், மனுதாரர்களின் குற்றச்சாட்டுகளை ஏற்பதை தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. இதனால், புகார் குறித்து விசாரிக்க 3 பேர் கொண்ட நிபுணர் குழுவை அமைக்கிறோம். அதனை, உச்சநீதிமன்றம் கண்காணிக்கும். புகாரில் உள்ள பொய்யை விசாரிக்கவும், உண்மையை கண்டறியவும் இந்த குழு அமைக்கப்படுகிறது. சிறந்த நிபுணர்கள் இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ரவீந்திரன் தலைமையிலான இந்த குழுவில், அலோக் ஜோஷி, சந்தீப் ஒபராய் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவினர், குற்றச்சாட்டுகளை முழுமையாக விசாரித்து, நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்வார்கள் என உத்தரவிட்டு, வழக்கை 8 வாரத்திற்கு ஒத்தி வைத்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (28+ 2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
27-அக்-202117:07:04 IST Report Abuse
M S RAGHUNATHAN ஏன் advanced technology உள்ள கைப் பேசியை வைத்துக் கொள்ள வேண்டும். திரு மன் மோகன் சிங் கைப்பேசியை பயன் படுத்த வில்லை. சாதாரண தொலை பேசியை பயன் படுத்தவும். எந்த மாநில அரசும், எந்த Madhya அரசும் இதுவரை தொலை பேசியை ஒட்டுக் கேட்கவில்லை என்று உச்ச நீதி மன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யுமா ? இம்மாதிரி விஷயங்களில் நீதி மன்றங்கள் தலையிட்டால் விபரீதமாக முடியும். தனி நபர் சுதந்திரம் என்றால் என்ன ? ஒரு வங்கியில் ஒரு கணக்கு துவங்க வேண்டும் என்றால் அவர்கள் கேட்கும் அனைத்து தகவல்களும் தர வேண்டும். இல்லை என்றால் கணக்கு துவங்க முடியாது. ஒரு கைப்பேசி வாங்க வேண்டும் என்றால் அனைத்து தகவல்களும் தர வேண்டும். ஏன் இந்த உச்ச நீதி மன்றத்தில் ஒரு வழக்கு தொடர வேண்டும் என்றால் மனுதாரர் அவருடைய அனைத்து தகவல்களும் தர வேண்டும். அப்பா யார், அம்மா யார், எங்கு வேலை செய்கிறோம், எவ்வளவு சம்பளம், வயது, முகவரி எல்லாம் தர வேண்டும். ஏன் உச்ச நீதிமன்றம் எல்லா தகவல்களையும் கெடுக்கிறது. இந்த மாதிரி சுதந்திரம் என்பதெல்லாம் சும்மா புருடா. அதே போல் மூடி வைக்கப்பட்ட கவரில் பதில் கேட்பது என்ன வழக்கு. எனக்கு இந்த வழக்கில் என்ன நடக்கிறது என்று அறிய சுதந்திரம் வேண்டாமா? நாம் நாட்டின் முன்னேற்றத்திற்கு இவைகளே தடைகள்.
Rate this:
Cancel
27-அக்-202116:29:09 IST Report Abuse
அப்புசாமி மூணு பேர் நியமனத்துக்கு மூண் மாசம். அவிங்க விசாரிச்சு முடிவு சொல்ல ஒரு மூணு வருஷம். அதுக்கப்புறம் இவிங்க அதை படிச்சு விசாரிச்சு கருத்து சொல்ல ஒரு மூணு வருஷம். இப்பிடி பல நாள் ஓட்டிறலாம். நீதி கிடைச்சுடும்.
Rate this:
Cancel
Suri - Chennai,இந்தியா
27-அக்-202116:16:49 IST Report Abuse
Suri 10 ஐபோன் உபயோகிப்போருடைய தொலைக்கேசியை ஒட்டு கேட்க ஒன்றிய அரசு பேகசஸ் நிறுவனத்துக்கு $ 650,000 கட்டணமாக செலுத்தவேண்டும். அதாவது சுமார் ஐந்து கோடி ருபாய். அதாவது ஒரு தொலைபேசிக்கு கிட்டத்தட்ட ஐம்பது லட்சம் ருபாய். இது அத்தனையும் மக்கள் வரிப்பணம். உள்கட்சி விவகாரத்தை தீர்த்துக்கொள்ள எதிர்க்கருத்து கொண்டோரை உளவு பார்க்க அரசு வரிப்பணத்தை செலவு செய்வது நியாயமா? இதில் கொடுமை ஒன்று நடந்துள்ளது. ஒரு ஆளை உளவு பார்க்க முடிவு செய்தால் அந்த வீட்டில் உள்ள வேலைக்காரர்கள், தோட்டக்காரர்கள் முதற்கொண்டு அனைவரின் தொலைபேசிகள் ஒட்டு கேட்கப்பட்டுள்ள. மேலும் ஒரு கொடுமை. ஒரு பள்ளிக்கூட மாணவன் தொலைபேசி கூட ஒட்டுகேட்கப்பட்டுள்ளது அவனுடைய அப்பாவின் செய்லகளை கண்காணிக்க, அதுவும் அவனுடைய அப்பா தொலைபேசி அல்லாமல். இது தான் தேசத்தின் பாதுகாப்புக்கு செய்யப்படும் செயலா? அரசு பணம் எத்தனை கோடிகள் சுயலாபத்துக்காக பயன்டுத்தப்பட்டுள்ளது? இது என்ன மாதிரி அரசு?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X