புதிய கட்சிக்கான பெயர், சின்னம் விரைவில் அறிவிப்பு; அமரீந்தர் சிங்

Updated : அக் 27, 2021 | Added : அக் 27, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
சண்டிகர்: பஞ்சாப் முன்னாள் முதல்வர் புதிய கட்சி துவங்க உள்ளதாக அறிவித்துள்ளார். மேலும், கட்சிக்கான பெயர், சின்னம் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.பஞ்சாப் முதல்வராக இருந்த அமரீந்தர் சிங் சமீபத்தில் ராஜினாமா செய்ததை அடுத்து புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி பொறுப்பேற்றார். பின்னர், அமரீந்தர் சிங், மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்ததை அடுத்து
Punjab, Amarinder Singh, New Party, Launch, Soon, பஞ்சாப், அமரீந்தர் சிங், புதிய கட்சி, விரைவில் அறிவிப்பு

சண்டிகர்: பஞ்சாப் முன்னாள் முதல்வர் புதிய கட்சி துவங்க உள்ளதாக அறிவித்துள்ளார். மேலும், கட்சிக்கான பெயர், சின்னம் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

பஞ்சாப் முதல்வராக இருந்த அமரீந்தர் சிங் சமீபத்தில் ராஜினாமா செய்ததை அடுத்து புதிய முதல்வராக சரண்ஜித் சிங் சன்னி பொறுப்பேற்றார். பின்னர், அமரீந்தர் சிங், மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்தித்ததை அடுத்து அவர் பா.ஜ.,வில் இணைப்போவதாக கூறப்பட்டது. ஆனால், அமிரீந்தர்சிங் தனிக்கட்சி துவங்கிடவும், தேர்தலில் பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்து சட்டசபை தேர்தலை சந்திப்பது எனவும் முடிவு செய்துள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் செய்திகள் வெளியானது.


latest tamil news


இந்நிலையில் இன்று (அக்.,27) செய்தியாளர்களை சந்தித்து அமரீந்தர் சிங் கூறியதாவது: நான் முதல்வராக இருந்த நான்கரை ஆண்டுகளில் 92 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளேன். நாங்கள் வெளியிட்ட வாக்குறுதியும், நிறைவேற்றிய திட்டங்கள் குறித்த அறிக்கையும் என்னிடம் உள்ளன. பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பியபோது என்னை கேலி செய்தார்கள். நான் ராணுவத்தில் 10 ஆண்டுகள் சேவை செய்துள்ளேன். அதேபோல், 9.5 ஆண்டுகள் பஞ்சாப் உள்துறை அமைச்சராக இருந்துள்ளேன். ஆனால், ஒரு மாதம் உள்துறை அமைச்சராக இருந்த ஒருவர், என்னை விட தனக்கு அதிகம் தெரியும் என்று கூறுகிறார்.

பஞ்சாபில் நாம் மிகவும் கடினமான காலங்களை கடந்துள்ளோம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பஞ்சாபில் நாங்கள் துவங்கிய திட்டங்களே இன்னும் தொடர்கிறது. சட்டசபை தேர்தல் குறித்து நம்பிக்கையுடன் உள்ளோம். நான் புதிய கட்சியை துவங்க உள்ளேன். தேர்தல் ஆணையம் அனுமதித்த பின், அதற்கான பெயர் மற்றும் சின்னம் விரைவில் அறிவிக்கப்படும். எனது வழக்கறிஞர்கள் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vbs manian - hyderabad,இந்தியா
27-அக்-202120:21:49 IST Report Abuse
vbs manian ஆந்திராவில் நடந்தது இப்போது பஞ்சாபில் நடக்கிறது.
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
27-அக்-202119:05:04 IST Report Abuse
sankaseshan நக்கல் கமெண்டு போடுபவர்கள் தேர்தல் முடிவு வரை காத்திருங்கள் பதில் கிடைக்கும் ,சித்து எங்கு போட்டியிட்டாலும் எதிர்த்து நிற்பேன் என்றிருக்கிறார் ராணுவத்தில் பணியாற்றியவர் பாடியலாவின் முன்னாள் மன்னர், கடந்த தேர்தலில் காங்கிரஸ் ஜெயித்தது இவரால்தான் கோமாளி பப்பு பிரச்சாரத்துக்கு வரக்கூடாது என்று தீர்மானமாக சொன்னவர் 80 வயசில் தூங்கு மூஞ்சி கவுடா பிரதமர் ஆனார்
Rate this:
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
27-அக்-202117:17:10 IST Report Abuse
மலரின் மகள் அகாலி பாரதிய ஜனதா பார்ட்டியா? பஞ்சாப் காங்கிரஸ் பாரதிய ஜனதா பார்ட்டியா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X