பொது செய்தி

தமிழ்நாடு

ராமர் பாத ரதம்: அ.தி.மு.க., அலுவலகம் வந்ததால் பரபரப்பு

Updated : அக் 27, 2021 | Added : அக் 27, 2021
Share
Advertisement
சேலம்: அயோத்திக்கு ராமர் பாதம் அடங்கிய ரதம் சேலம் அ.தி.மு.க., அலுவலகத்துக்கு அனுமதியின்றி வந்ததாக கூறி போலீஸார் திருப்பி அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.காஞ்சி சங்கர மடத்தில் இருந்து அயோத்திக்கு கொண்டு செல்லப்படும் ராமர் பாதம் அடங்கிய ரதம் சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அ.தி.மு.க., கட்சி அலுவலகத்திற்கு இன்று வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அனுமதியின்றி வந்த அந்தக்
ராமர் பாத ரதம்: அ.தி.மு.க., அலுவலகம் வந்ததால் பரபரப்பு

சேலம்: அயோத்திக்கு ராமர் பாதம் அடங்கிய ரதம் சேலம் அ.தி.மு.க., அலுவலகத்துக்கு அனுமதியின்றி வந்ததாக கூறி போலீஸார் திருப்பி அனுப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

காஞ்சி சங்கர மடத்தில் இருந்து அயோத்திக்கு கொண்டு செல்லப்படும் ராமர் பாதம் அடங்கிய ரதம் சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள அ.தி.மு.க., கட்சி அலுவலகத்திற்கு இன்று வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அனுமதியின்றி வந்த அந்தக் குழுவினரை போலீசார் கட்சி அலுவலகத்துக்குள் அனுமதிக்கவில்லை.

சட்டசபை எதிர்க்கட்சித் தலைவரான பழனிச்சாமியை சந்திக்க வந்ததாக ராமர் பாதம் கொண்டு செல்லும் குழுவினர் தெரிவித்தனர். முன்அனுமதி இல்லாமல் அனுமதிக்க முடியாது என போலீஸார் திருப்பி அனுப்பினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X