எஸ்-400 ஏவுகணை விவகாரம்: இந்தியாவுக்கு சலுகை அளிக்க அமெரிக்க எம்.பி.,க்கள் வலியுறுத்தல்

Updated : அக் 27, 2021 | Added : அக் 27, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
வாஷிங்டன்: ரஷ்யாவிடம் எஸ்.400 ஏவுகணை வாங்கும் இந்தியாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கூடாது என அமெரிக்க எம்.பி.,க்கள் இருவர், அதிபர் பைடனுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக எம்.பி.,க்கள் மார்க் வார்னர் மற்றும் ஜான் கோர்னின், பைடனுக்கு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது: ரஷ்யாவிடம் அதிகளவு ஆயுதங்கள் வாங்கிய வரலாறு கொண்ட இந்தியா, தற்போது, அதனை
US Senators,Biden, Sanctions, India, Russia,S-400,

வாஷிங்டன்: ரஷ்யாவிடம் எஸ்.400 ஏவுகணை வாங்கும் இந்தியாவிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக்கூடாது என அமெரிக்க எம்.பி.,க்கள் இருவர், அதிபர் பைடனுக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக எம்.பி.,க்கள் மார்க் வார்னர் மற்றும் ஜான் கோர்னின், பைடனுக்கு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டு உள்ளதாவது: ரஷ்யாவிடம் அதிகளவு ஆயுதங்கள் வாங்கிய வரலாறு கொண்ட இந்தியா, தற்போது, அதனை குறைப்பதற்கான பல முக்கிய நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளது. 2016 ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தப்படி, 2018 ல் முறையாக ரஷ்யாவின் எஸ்-400 ஏவுகணையை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டது.

அதனால் , ரஷ்யாவிற்கு எதிரான சிஏஏடிஎஸ்ஏ சட்டப்படி இந்தியா மீது பொருளாதார தடை விதிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது கவலை அளிக்கிறது. எனவே, இந்தியா மீது சிஏஏடிஎஸ்ஏ சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என நாங்கள் வலியுறுத்துகிறோம். இந்த நடவடிக்கை அமெரிக்க தேசிய நலனுக்கு உகந்ததாக இருப்பதுடன், பொருளாதார தடையில் இருந்து விலக்கு அளிக்க அதிபருக்கு கூடுதல் அதிகாரம், அந்த சட்டத்தில் உள்ளது.


latest tamil news




ரஷ்ய ஆயுதங்களை இந்தியா கொள்முதல் செய்வது குறைந்திருந்தாலும் தொடர்ந்து அந்நாட்டு சாதனங்களை பயன்பாடு மற்றும் வாங்குதல் குறித்த உங்களின் கவலைகளை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம். இந்த கவலையை, இந்திய அதிகாரிகளிடம் தெரிவிப்பதற்கும், ரஷ்ய ஆயுதங்களுக்கு மாற்றை பயன்படுத்த ஊக்கம் அளிக்கவும் உங்களுக்கு நாங்கள் துணை நிற்போம். இவ்வாறு அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-அக்-202119:00:31 IST Report Abuse
அப்புசாமி அது சரி... அடிக்கடி ரெண்டு ரஃபல் , மூணு ரஃபல் நு வந்துக்குட்டே இருக்கு. அமெரிக்க அப்பாச்சி ஹெலிகாப்டர் கூட வந்துட்டதா ஆனா, ஒரு ரஷ்ய ஏவுகணை வந்ததா நியூசே வரலியே... பெரிய ராணுவ ரகசியமா இருக்குமோ?
Rate this:
Cancel
radha - tuticorin,இந்தியா
27-அக்-202117:37:56 IST Report Abuse
radha இந்திய தயாரிப்புக்களையே வாங்கி பயன்படுத்த வேண்டும். மோடி ஜீ வேண்டுகோள்
Rate this:
Cancel
John Miller - Hamilton,பெர்முடா
27-அக்-202115:38:14 IST Report Abuse
John Miller ராஜ்நாத்சிங் மிகவும் அதிர்ஷ்டசாலி.
Rate this:
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
27-அக்-202120:56:44 IST Report Abuse
sankarஆமாம் அதிர்ஷ்டசாலிதான். அவருமட்டுமல்ல நாமளும்தான் எல்லயை பிரச்னையில் நல்லவர்கள் கையில் நாடு இருக்கிறது காங்கிரஸ் ஆண்டிருந்தால் அமெரிக்காவும் ரஷ்யாவும் நம்மை மதிக்க கூட செய்திருக்காது. ஏன் என்றால் சோனியா ராகுலின் ஆளுமை அப்புடி. இன்னிவரைக்கும் யாருக்கும் தெரியாது காங்ரஸ் பாரதியும் சீன கம்யூனிஸ்டும் என்ன ஒப்பந்தம் போட்டார்கள் என்று. நிறைய அடிமை சாசனம் கொடுத்திருப்பார்கள். நாம் உண்மையிலேயே அதிர்ஷ்ட சாலிதான்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X