சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆரணி கூட்டுறவு வங்கியில் ரூ.2.51 கோடி நகைக்கடன் மோசடி: 3 பேர் சஸ்பெண்ட்

Updated : அக் 27, 2021 | Added : அக் 27, 2021 | கருத்துகள் (20)
Share
Advertisement
ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகர கூட்டுறவு வங்கியில் 2 கோடியே, 51 லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவத்தில் வங்கி ஊழியர்கள் சரவணன், லிங்கப்பா ஜெகதீசன் மூன்று நபர்களையும், இணைப்பதிவாளர் ராஜ்குமார் உத்தரவின்பேரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.ஆரணி கூட்டுறவு நகர வங்கியில் சுமார் ரூ.2.39 கோடி அளவில் போலி நகைக்கடன் வழங்கப்பட்டுள்ளன என கூட்டுறவுத்துறைக்கு தகவல்
நகைக்கடன், மோசடி, சஸ்பெண்ட், திருவண்ணாமலை, ஆரணி, கூட்டுறவு வங்கி, ஊழியர்கள்

ஆரணி: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகர கூட்டுறவு வங்கியில் 2 கோடியே, 51 லட்சம் ரூபாய் மோசடி செய்த சம்பவத்தில் வங்கி ஊழியர்கள் சரவணன், லிங்கப்பா ஜெகதீசன் மூன்று நபர்களையும், இணைப்பதிவாளர் ராஜ்குமார் உத்தரவின்பேரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.


latest tamil news



ஆரணி கூட்டுறவு நகர வங்கியில் சுமார் ரூ.2.39 கோடி அளவில் போலி நகைக்கடன் வழங்கப்பட்டுள்ளன என கூட்டுறவுத்துறைக்கு தகவல் வந்தது. போலி நகைக்கடன் வழங்க உறுதுணையாக இருந்த வங்கி பணியாளர்கள், நிர்வாக குழு உறுப்பினர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. 77 நபர்களுக்கு போலி நகைக்கடன்கள் வழங்கப்பட்டதாகவும், குறைவான எடையுள்ள நகைக்கு அதிக எடை போல் காண்பித்து அதிகளவில் பணம் வழங்கியதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

நகைக்கடன் வழங்கியதில் மோசடி செய்தது உறுதியானதால் ஆரணி வங்கி பணியாளர்கள் 3 பேர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh - chennai,இந்தியா
27-அக்-202121:09:02 IST Report Abuse
Ramesh கூட்டுறவு திருட்டு உறவு..தமிழினம் அழிந்து விட்டது.திருட்டு இனம் இப்போது.கொரோனா தான் இவர்களை உருமாறி திருத்த வேண்டும்.
Rate this:
Cancel
27-அக்-202120:26:03 IST Report Abuse
தர்மராஜ் தங்கரத்தினம் BJP துண்டு போடு ஏமாற்றிய ஹெலிகாப்டர் சகோதரர்கள் மீதான நிதி நிறுவன மோசடி வழக்கின் விசாரணை திருப்தியாக நடைபெறவில்லை என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. ''இந்த வழக்கின் விசாரணை நிலுவையில் இருக்கும்போது, முக்கியக் குற்றவாளியின் மனைவி அகிலாண்டம் கீழமை நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றுள்ளார். கீழமை நீதிமன்றத்தில் முறையான வாதங்களை முன்வைக்காதது ஏன்? ஜாமீன் பெற்றவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ள நிலையில், அவரை ஜாமீனில் விட்டால் சொத்துகளை எப்படிப் பறிமுதல் செய்ய முடியும்? பாதிக்கப்பட்டவர்களுக்கு எவ்வாறு பணத்தைத் திரும்ப வழங்குவது? இவற்றைக் கருத்தில் கொள்ளாததது ஏன்? மேலும் முக்கியக் குற்றவாளியின் மனைவி ஒரு வழக்கில்தான் ஜாமீன் பெற்றுள்ளார். ஆனால், அவர் மீது பல வழக்குகள் உள்ளன. அந்த வழக்குகளில் அவரைக் கைது செய்யாதது ஏன்? விசாரணை முறையாக நடைபெற்றால் மட்டுமே பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க முடியும்.
Rate this:
Cancel
Dhurvesh - TAMILANADU ,இந்தியா
27-அக்-202119:47:31 IST Report Abuse
Dhurvesh எல்லாம் மோடி மேற்பார்வையில் நடந்த ஆட்சி தான் , ஆகவே திருட்டு க்கு துணை போவதும் குற்றம் தான் விடாதீர்கள
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X