சென்னை : தமிழக சட்ட பல்கலையில் பிஎச்.டி., படிக்க, கம்பெனி செக்ரட்ரிஷிப் படிப்பை அங்கீகரித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்திய கம்பெனி செக்ரட்ரிஷிப் அமைப்பும், தமிழக சட்ட பல்கலையும் இணைந்து மேற்கொண்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கூறியிருப்பதாவது:
தமிழக அம்பேத்கர் சட்ட பல்கலையில், மேலாண்மை, வணிகவியல் மற்றும் அவை சார்ந்த பாடப் பிரிவுகளில், பிஎச்.டி., சேர்க்கைக்கு, சி.எஸ்., என்ற கம்பெனி செக்ரட்ரிஷிப் படிப்பு, முதுநிலை பட்ட படிப்புக்கு சமமாக கருதப்படும்.இந்திய கம்பெனி செக்ரட்ரிஷிப் அமைப்புடன் இணைந்து, அம்பேத்கர் சட்ட பல்கலை மற்றும் அதன் கல்லுாரிகளில் பயிற்சி அரங்கம், களப்பயிற்சி, கருத்தரங்கம், கல்வி நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
அம்பேத்கர் சட்ட பல்கலையில், பி.காம்., - எல்.எல்.பி., ஐந்து ஆண்டு படிப்பில், முதல் மாணவருக்கு, ஐ.சி.எஸ்.ஐ., சார்பில், சிக்னேச்சர் விருது, தங்க பதக்கம் மற்றும் மெரிட் சான்றிதழ் வழங்கப்படும்.மேலும், முதல் மூன்று முன்னிலை மாணவர்களுக்கு, சி.எஸ்., எக்ஸ்க்யூட்டிவ் படிப்பில் சேர பதிவு கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படும்.
இவ்வாறு ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது.
நிகழ்ச்சியில், அம்பேத்கர் சட்ட பல்கலை துணைவேந்தர் சந்தோஷ் குமார், பொறுப்பு பதிவாளர் ரஞ்சித் ஆபிரஹாம், இயக்குனர் ஹரிதா தேவி, ஐ.சி.எஸ்.ஐ., சார்பில், தென் மண்டல தலைவர் பாலசுப்ரமணியம், மண்டல இயக்குனர் சர்மா, தென் மண்டல முன்னாள் தலைவர் மோகன்குமார் பங்கேற்றனர்.ஐ.சி.எஸ்.ஐ., துணை தலைவர் தேவேந்திர வசந்த் தேஷ்பாண்டே ஆன்லைன் வழியில் பங்கேற்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE