புதுடில்லி : தமிழகத்தின் திருச்சி உட்பட நாடு முழுதும் 13 விமான நிலையங்களை பராமரிக்கும் பொறுப்பை தனியாரிடம் குத்தகைக்கு அளிப்பதற்கான ஏல நடைமுறைகள் துவங்கி உள்ளன.
அடுத்தாண்டு மார்ச்சுக்குள் இந்த விமான நிலையங்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டமிடப்பட்டுள்ளது.இந்திய விமான நிலைய ஆணைய தலைவர் சஞ்சீவ் குமார் கூறியதாவது:அடுத்தாண்டு மார்ச்சுக்குள் 13 விமான நிலையங்களின் பராமரிப்பு மற்றும் நிர்வகிக்கும் பணியை தனியாருக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.இதற்கான விமான நிலையங்களின் பட்டியலை இந்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சகத்துக்கு அனுப்பியுள்ளோம்.
இந்த திட்டத்தின்படி, ஏழு சிறிய விமான நிலையங்களை ஆறு பெரிய விமான நிலையங்களுடன் இணைக்க முடிவு செய்துள்ளோம். வாரணாசியுடன் குஷி நகர் மற்றும் கயா, அமிர்தசரஸ் - கங்க்ரா, புவனேஸ்வர் - திருப்பதி, ராய்ப்பூர் - அவுரங்காபாத், இந்தூர் - ஜபல்பூர் மற்றும் திருச்சி - ஹூப்பள்ளி ஆகியவற்றை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த விமான நிலையங்கள் தான் தனியாரிடம் ஒப்படைக்கப்பட உள்ளன. இதற்கான ஏல நடவடிக்கைகள் துவங்கியுள்ளன.
தேசிய பணமாக்குதல் திட்டத்தின் ஒரு பகுதியாக அடுத்த நான்கு ஆண்டுகளில் 25 விமான நிலையங்களை தனியாருக்கு குத்தகைக்கு விட தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன் முதல் கட்டமாகவே தற்போது 13 விமான நிலையங்கள் குத்தகைக்கு விடப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE