பொது செய்தி

தமிழ்நாடு

ராணுவ கல்லுாரி நுழைவு தேர்வு மாணவியரும் எழுதலாம்!

Added : அக் 27, 2021
Share
Advertisement
சென்னை : இந்திய ராணுவ கல்லுாரியில் சேருவதற்கான நுழைவு தேர்வுக்கு, இந்த ஆண்டு முதல் மாணவியரும் அனுமதிக்கப்படுகின்றனர். அதனால் விண்ணப்பிக்க, நவ., 15 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில், ராஷ்ட்ரீய இந்திய ராணுவ கல்லுாரி உள்ளது. இதில், ௭ம் வகுப்பு படிக்கும் அல்லது முடித்துள்ள, பதினொன்றரை வயது முதல் 13 வயது வரையான மாணவர்கள் மட்டுமே சேர முடியும்.

சென்னை : இந்திய ராணுவ கல்லுாரியில் சேருவதற்கான நுழைவு தேர்வுக்கு, இந்த ஆண்டு முதல் மாணவியரும் அனுமதிக்கப்படுகின்றனர். அதனால் விண்ணப்பிக்க, நவ., 15 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

உத்தரகண்ட் மாநிலம் டேராடூனில், ராஷ்ட்ரீய இந்திய ராணுவ கல்லுாரி உள்ளது. இதில், ௭ம் வகுப்பு படிக்கும் அல்லது முடித்துள்ள, பதினொன்றரை வயது முதல் 13 வயது வரையான மாணவர்கள் மட்டுமே சேர முடியும். அதற்கான நுழைவு தேர்வு எழுத மாணவியர் அனுமதிக்கப்படுவதில்லை.அதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் ஒரு மாணவி வழக்கு தொடர்ந்தார். விசாரணையின் போது, தேசிய ராணுவ அகடமியில் மாணவியரை சேர்க்க தயாராக உள்ளதாக மத்திய அரசு தெரிவித்தது.

இந்நிலையில், அடுத்த ஆண்டு ஜூலையில் ராணுவ கல்லுாரியில் சேர்வதற்கு வசதியாக, டிசம்பரில் நடக்கும் நுழைவுத் தேர்வுக்கு மாணவியரை அனுமதிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.இதை தொடர்ந்து, மாணவியர் விண்ணப்பிக்க வசதியாக, தேர்வுக்கான விண்ணப்ப அவகாசத்தை, இந்திய ராணுவ கல்லுாரி நீட்டித்துள்ளது. தமிழகத்தில் ராணுவ கல்லுாரியின் விண்ணப்பங்களை பெறும் நிறுவனமாக, அரசு பணியாளர் தேர்வாணையம் செயல்படுகிறது.

தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பு:
அடுத்த ஆண்டு ஜூலையில் படிப்பில் சேர்வதற்கான நுழைவு தேர்வு, டிச., 18ல் நடக்கிறது. தேர்வு எழுத உள்ளவர்கள், 2009 ஜூலை 2 முதல் 2011 ஜன., 1க்குள் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். இதில் வயது தளர்வு கிடையாது. தமிழக மாணவர்களுக்கு சென்னையில் மையம் அமைக்கப்படும்.ஆங்கிலம், கணிதம் மற்றும் பொது அறிவு தொடர்பான மூன்று தாள்களுக்கு தேர்வு நடக்கும். ஆங்கிலம் தவிர்த்த இரண்டு தேர்வுகளும், ஆங்கிலம், ஹிந்தியில் மட்டுமே நடக்கும்.
தேர்வில் பங்கேற்க விரும்பும் மாணவ, மாணவியர், தபால் வழியே விண்ணப்பம் மற்றும் அதற்கான கையேடு பெற்று கொள்ளலாம். டி.என்.பி.எஸ்.சி.,யில் விண்ணப்பம் வழங்கப்படாது. வேறு நகல் எடுக்கப்பட்ட விண்ணப்பம் செல்லாது. ராணுவ கல்லுாரியின், www.rimc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்ப கட்டணமாக, 600 ரூபாய் செலுத்த வேண்டும்.தமிழக மாணவ, மாணவியர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப நகலுடன், நவ., 15க்குள் அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி அலுவலகத்தை அணுக வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X