பொது செய்தி

தமிழ்நாடு

உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி; 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

Updated : அக் 27, 2021 | Added : அக் 27, 2021
Share
Advertisement
சென்னை: தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக பாலச்சந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தெற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில்
Weather, HeavyRain, IMD, Chennai, கனமழை, வானிலை, காற்றழுத்த தாழ்வு பகுதி

சென்னை: தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதால் திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பாலச்சந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தெற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக,

இன்று (அக்.,27): திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய 3 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், இதர தென் மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், கடலோர மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.


latest tamil news


அக்.,28: ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும், தென் மாவட்டங்கள், கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும். கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி, காயல்பட்டினம் (தூத்துக்குடி), பட்டுக்கோட்டை (தஞ்சாவூர்) கோபிசெட்டிபாளையம் (ஈரோடு), ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி) தலா 4 செ.மீ மழைப் பதிவானது.


latest tamil news



மீனவர்களுக்கான எச்சரிக்கை:



வங்க கடல் பகுதிகள்


அக்.,27: தென்மெற்கு வங்க கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும் அவ்வப்போது 60 கி.மீ வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும்.
அக்.,28 முதல் 30: தென்மேற்கு வங்க கடல் மற்றும் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும் அவ்வப்போது 60 கி.மீ வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும்.
அக்.,29 முதல் 31: குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும் அவ்வப்போது 60 கி.மீ வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும்.


அரபிக்கடல் பகுதிகள்


அக்.,29 முதல் 31: கேரள கடலோரப் பகுதி, தென்கிழக்கு அரபிக்கடல், மாலத்தீவு மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்திலும் அவ்வப்போது 60 கி.மீ வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும்.
மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தபடுகிறார்கள். இவ்வாறு பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X