பொது செய்தி

தமிழ்நாடு

பிரதமரை சந்தித்து வாழ்த்து பெற்றதில் மகிழ்ச்சி: ரஜினி

Updated : அக் 27, 2021 | Added : அக் 27, 2021 | கருத்துகள் (38)
Share
Advertisement
சென்னை: ''ஜனாதிபதியையும் ,பிரதமரையும் சந்தித்தது மகிழ்ச்சி,'' என தாதா சாகேப் பால்கே விருது பெற்ற நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.டில்லியில் நேற்று முன்தினம் நடந்த 67வது தேசிய விருது வழங்கும் விழாவில், நடிகர் ரஜினிகாந்துக்கு 'தாதா சாகேப் பால்கே' விருதை வழங்கி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கவுரவித்தார். '' இந்த விருதை என் குருவும், வழிகாட்டியுமான
Rajinikanth, Rajini, primeminister, Narendramodi, Modi, Pmmodi, Primeministermodi, primeministernarendramodi, PmNarendramodi, President Ramnathkovind, Ramnathkovind, President, President Ramnath, dada sakeb balke award, award, ரஜினி, ரஜினிகாந்த், பிரதமர், மோடி, நரேந்திரமோடி, பிரதமர் நரேந்திரமோடி, ஜனாதிபதி, ராம்நாத், ராம்நாத்கோவிந்த், ஜனாதிபதிராம்நாத்,  தாதாசாகேப்பால்கே, விருது,

சென்னை: ''ஜனாதிபதியையும் ,பிரதமரையும் சந்தித்தது மகிழ்ச்சி,'' என தாதா சாகேப் பால்கே விருது பெற்ற நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.

டில்லியில் நேற்று முன்தினம் நடந்த 67வது தேசிய விருது வழங்கும் விழாவில், நடிகர் ரஜினிகாந்துக்கு 'தாதா சாகேப் பால்கே' விருதை வழங்கி, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கவுரவித்தார். '' இந்த விருதை என் குருவும், வழிகாட்டியுமான பாலச்சந்தருக்கு சமர்ப்பிக்கிறேன்,'' என ரஜினி தெரிவித்திருந்தார்.

விருது வாங்கிய பின்னர், ஜனாதிபதி மாளிகை சென்ற நடிகர் ரஜினிகாந்த், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து வாழ்த்து பெற்றார். இதனை தொடர்ந்து, ரஜினியை தொலைபேசியில் அழைத்து, பிரதமர் நரேந்திர மோடியும் வாழ்த்து தெரிவித்ததாக தகவல் வெளியானது. தமிழக கவர்னர் ரவி, தெலுங்கானா கவர்னர் தமிழிசை, முதல்வர் ஸ்டாலின், அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.


latest tamil news




இந்நிலையில், ரஜினி டுவிட்டரில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: மதிப்பிற்குரிய ஜனாதிபதியையும், பிரதமரையும் சந்தித்து வாழ்த்து பெற்றதில் பெரும் மகிழ்ச்சி '' என தெரிவித்துள்ளார்.


latest tamil news





Advertisement




வாசகர் கருத்து (38)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-அக்-202107:49:55 IST Report Abuse
ravi chandran உலகத்தில் மிகவும் பெரிய டுபாக்கூர், தகுதி இல்லாதவர்களுக்கு வருது. இந்த டுபாக்கூர் விருதை வைத்து நாட்டின் அரசின் லட்சத்தை தெரிந்து கொள்ளலாம்.
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
28-அக்-202106:17:46 IST Report Abuse
Mani . V அந்த விருதுக்கு தகுதியானவர் தானா இவர்? (சரி அந்த பள்ளி வாடகை பாக்கி, ஆசிரியர்கள் சம்பளப் பாக்கி?)
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
28-அக்-202104:36:37 IST Report Abuse
J.V. Iyer முதுகெலும்பு இல்லாத சுயநலக்காரர்கள் சினிமா வெற்றிக்காக அரசியலை கையில் எடுத்தது எல்லோருக்கும் தெரிந்ததே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X