பொது செய்தி

இந்தியா

கர்நாடகாவில் 2 பேருக்கு ‛ஏஒய். 4.2' உருமாறிய கொரோனா

Updated : அக் 27, 2021 | Added : அக் 27, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி: ‛‛கர்நாடகாவில் இரண்டு பேருக்கு ஏஒய். 4.2 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் பாதித்துள்ளது,'' என்று தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.ஐரோப்பிய நாடுகள், இஸ்ரேல் மற்றும் ரஷ்யாவில் ஏஒய். 4.2 எனப்படும் டெல்டா பிளஸ் பாதிப்பு அதிகம் உள்ளது. தற்போது ஏஒய். 4.2 என்ற புதிய உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருகிறது. நம் நாட்டில் மத்திய பிரதேசம் இந்துாரில் இரண்டு ராணுவ
கர்நாடகா, ஏஒய்4.2, உருமாறிய கொரோனா, 2 பேர் பாதிப்பு, தேசியநோய், கட்டுப்பாட்டு மையம், அறிவிப்பு,

புதுடில்லி: ‛‛கர்நாடகாவில் இரண்டு பேருக்கு ஏஒய். 4.2 என்ற உருமாறிய கொரோனா வைரஸ் பாதித்துள்ளது,'' என்று தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய நாடுகள், இஸ்ரேல் மற்றும் ரஷ்யாவில் ஏஒய். 4.2 எனப்படும் டெல்டா பிளஸ் பாதிப்பு அதிகம் உள்ளது. தற்போது ஏஒய். 4.2 என்ற புதிய உருமாறிய கொரோனா வைரஸ் பரவி வருகிறது. நம் நாட்டில் மத்திய பிரதேசம் இந்துாரில் இரண்டு ராணுவ அதிகாரிகள் உட்பட ஏழு பேருக்கு, இந்த புதிய தொற்று உறுதியாகி உள்ளது.


latest tamil news


இந்த டெல்டா வகை வைரஸ் அடிப்படையில், 55 புதிய உருமாறிய வைரஸ்கள் இருப்பதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. அதில், ஒன்றான ஏஒய். 4.2 என்ற வைரஸ் தற்போது தென்பட்டுள்ளதாக தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது. அண்மையில் புதிய தொற்று ஏற்பட்டவர்களிடம் எடுக்கப்பட்ட மாதிரிகளை ஆய்வு செய்தபோது இந்த புதிய வகை தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. இந்த புதிய வகை உருமாறிய வைரஸ் எவ்வளவு வேகமாக பரவக்கூடியது என்பது உள்ளிட்ட ஆய்வுகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், கர்நாடகாவில் இருந்து சேகரிக்கப்பட்ட இரண்டு மாதிரிகள் உருமாறிய ஏஒய். 4.2 கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இருப்பினும் இப்போது பீதி அடைய தேவையில்லை என்று தேசிய நோய் கட்டுப்பாட்டு மைய அதிகாரிகள், மரபணு நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.


Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
27-அக்-202122:00:40 IST Report Abuse
அப்புசாமி நாம பீதியடையத் தேவையில்லை. கைதட்டி, விளக்கேத்தி, மக்களை அடிச்சு முடக்கி வீடியோ கான்ஃபரன்ஸ் ல மோடி ஐயா பேசும்போது பீதியடைய்லாம்.
Rate this:
Cancel
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
27-அக்-202119:30:47 IST Report Abuse
A.George Alphonse பீதியை கிளப்பும் செய்தியை கூறிவிட்டு பீதி அடையவேண்டாம் என்று சொல்வது பிள்ளையை கிள்ளிவிட்டு தொட்டிலை ஆட்டுவது போல் நகைப்புக்குரியது.
Rate this:
Cancel
தியாகு - கன்னியாகுமரி ,இந்தியா
27-அக்-202119:02:15 IST Report Abuse
தியாகு நல்லவேளை, திருட்டு திமுகவின் கட்டுமரம் கருணாநிதி காலத்தில் கொரோனா இல்லை, இல்லனா அதை வைத்து ஒரு ஆயிரம் கோடிகளை அசால்ட்டாக ஆட்டையை போட்டு கோபாலபுரத்திற்கு சொத்து சேர்த்திருப்பார்.
Rate this:
elakkumanan - Naifaru,மாலத்தீவு
27-அக்-202122:37:03 IST Report Abuse
elakkumananஎனது தானை தமிழ் கடை குடிகளின் தலைவனின் திறமையை குறைத்து மதிப்பிடுவது உண்மையிலேயே உங்களது குறுகிய உள்ளத்தை காட்டுவதாக அமைகிறது நண்பா.. முதலை வச்சே இருநூறு கொடிகள்... டீ குடிக்கவே இருபத்தொன்பது கொடிகள் ...அதாவது எண்பத்தைந்து வாக்கில், வசூல் செய்த தேர்தல் நிதிக்கு தலை சொன்ன விளக்கம்தான் அது நண்பா....அதுதான் நமக்கும் தலைவனுக்கும் உள்ள வித்யாசம். தலை அப்போவே ரெண்டாயிரத்து நூறாம் ஆண்டு வரைக்கும் கணக்கு போட்ட மகான்.....நாம், இன்னும் வளரனும் நண்பா....................
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X