நீட் ஓ.எம்.ஆர்., தாளில் முறைகேடா? விசாரணை நடத்த கேரள ஐகோர்ட் உத்தரவு| Dinamalar

நீட் ஓ.எம்.ஆர்., தாளில் முறைகேடா? விசாரணை நடத்த கேரள ஐகோர்ட் உத்தரவு

Updated : அக் 27, 2021 | Added : அக் 27, 2021 | கருத்துகள் (3)
Share
கொச்சி: நீட் தேர்வெழுதிய மாணவி ஒருவர் தான் விடையெழுதி சமர்பித்த ஓ.எம்.ஆர்., தாளுக்கும், தனது பெயரில் தேசிய தேர்வு முகமை அனுப்பிய ஓ.எம்.ஆர்., நகலுக்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பதாக கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக தேசிய தேர்வு முகமை விசாரணை நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் தேர்வு முடிவுகள் வெளியாவதில் மேலும் தாமதம்
High Court,NEET exam,kerala,medical entrance test, ஐகோர்ட்,கேரளா,நீட்

கொச்சி: நீட் தேர்வெழுதிய மாணவி ஒருவர் தான் விடையெழுதி சமர்பித்த ஓ.எம்.ஆர்., தாளுக்கும், தனது பெயரில் தேசிய தேர்வு முகமை அனுப்பிய ஓ.எம்.ஆர்., நகலுக்கும் நிறைய வேறுபாடுகள் இருப்பதாக கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது தொடர்பாக தேசிய தேர்வு முகமை விசாரணை நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் தேர்வு முடிவுகள் வெளியாவதில் மேலும் தாமதம் ஏற்படக்கூடும்.

செப்டம்பர் 12-ல் இந்தியா முழுவதும் எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புகளில் சேர நீட் தேர்வு நடைபெற்றது. தேர்வு முடிந்து 45 நாட்கள் ஆகும் நிலையில், இன்னமும் முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. 2020-ல் இந்தாண்டைப் போலவே கொரோனா பாதிப்புக்கு இடையே செப்., 13-ல் தேர்வு நடந்தது. ஒரு மாதம் கழித்து அக்., 16-ல் முடிவு அறிவிக்கப்பட்டுவிட்டது. நவம்பர் மத்தியில் கவுன்சிலிங் முடிந்தது.

இம்முறை ஓ.எம்.ஆர்., தாளில் குளறுபடி, சில மாநிலங்களில் மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்டது போன்றவற்றால் முடிவுகள் தள்ளிப்போகின்றன.

மும்பை உயர் நீதிமன்றம் ஓ.எம்.ஆர்., தாள் மாற்றித் தரப்பட்ட இருவருக்கு சிறப்பு தேர்வு நடத்த உத்தரவிட்டிருப்பதும் தாமதத்துக்கு காரணம்.

இந்நிலையில், கேரளாவின் திரிச்சூரைச் சேர்ந்த ரிது சிமி எனும் மாணவி அம்மாநில உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.


latest tamil news




அதில் கூறியுள்ளதாவது: நான் சமர்பித்த ஓ.எம்.ஆர்., தாளும், தேசிய தேர்வு முகமை எனது பெயரில் வெளியிட்டிருக்கும் ஓ.எம்.ஆர்., தாளும் வெவ்வேறானவை. நீட் தேர்வின் போது ஓ.எம்.ஆர்., தாளில் எனது கைரேகை மற்றும் பெற்றோரின் பெயர் உட்பட தனிப்பட்ட விவரங்களைப் பதிவு செய்தேன். ஆனால், எனது பெயரில் தேர்வு முகமை வெளியிட்டுள்ள ஓ.எம்.ஆர்., தாளில் வேறு ஒருவரின் கையெழுத்தில் எனது பெற்றோர் பெயர் எழுதப்பட்டுள்ளது. கைரேகையும் பொருந்தவில்லை. இவ்வாறு மனுவில் தெரிவித்தார்.

இம்மனுவை நேற்று (அக்., 26) விசாரித்த நீதிபதி நாகரேஷ், இது தொடர்பாக விசாரணை நடத்தும் படி நீட் தேர்வு உட்பட போட்டித் தேர்வுகளை நடத்தும் தேசிய தேர்வு முகமைக்கு உத்தரவுப் பிறப்பித்துள்ளார். இதனால் நீட் தேர்வு முடிவுகள் வெளியாக மேலும் காலதாமதமாக வாய்ப்புள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X