பொது செய்தி

தமிழ்நாடு

'இல்லம் தேடி கல்வி' திட்டம் மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றும்: முதல்வர்

Updated : அக் 27, 2021 | Added : அக் 27, 2021 | கருத்துகள் (14)
Share
Advertisement
சென்னை: 'இல்லம் தேடி கல்வி' திட்டம் மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் 'இல்லம் தேடி கல்வி' திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். முதல்கட்டமாக, கடலூர், திண்டுக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.இந்த திட்டத்தை துவக்கி வைத்த பின்னர் ஸ்டாலின் பேசியதாவது:
இல்லம்தேடிகல்வி, முதல்வர்,ஸ்டாலின், ஆய்வு

சென்னை: 'இல்லம் தேடி கல்வி' திட்டம் மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்றும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் 'இல்லம் தேடி கல்வி' திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். முதல்கட்டமாக, கடலூர், திண்டுக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்த திட்டத்தை துவக்கி வைத்த பின்னர் ஸ்டாலின் பேசியதாவது: கோவிட் நெருக்கடியில் உருவானதுதான் இல்லம் தேடி கல்வி திட்டம். இதற்காக ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. கல்வியில், தமிழகம் முன்னோடி என்ற நிலையில், இந்த திட்டம் மேலும் சிறப்பு சேர்க்கும். இந்த திட்டம், லட்சக்கணக்கான மாணவர்கள் வாழ்வில் ஒளியேற்றும். பள்ளி நேரம் போலவே பள்ளி போன்று உருவாக்கப்பட்டது. கோவிட் காலத்தில் மாணவர்கள் தான் அதிகமாக பாதிக்கப்பட்டனர். மாணவர்களின் கற்றல் இடைவெளியை சரி செய்ய பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மீண்டும் பள்ளிக்கு வரும் மாணவர்களை ஆசிரியர்கள் இனிமையாக நடத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.


latest tamil news




அரசுப்பள்ளியில் ஆய்வு



இந்த திட்டத்தை துவக்கி வைப்பதற்காக விழுப்புரம் வரும் வழியில், செங்கல்பட்டு மாவட்டம் கடப்பாக்கத்தில் உள்ள திரு.பெ.கிருஷ்ணா அரசு மேல்நிலை பள்ளிக்கு நேரில் சென்று பார்வையிட்டார். வகுப்பறைகளுக்குச் சென்ற ஸ்டாலின், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்துரையாடினார். மதிய உணவு குறித்தும் ஆய்வு செய்தார்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathyanarayanan Subramanian - Tambaram,இந்தியா
28-அக்-202103:45:09 IST Report Abuse
Sathyanarayanan Subramanian முதல்வரின் முயற்சி வரவேற்கிறோம். மாணவ மாணவிகள் வாழ்வில் இல்லம் தேடி கல்வி சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்
Rate this:
Cancel
Rajan - chennai,இந்தியா
28-அக்-202102:15:22 IST Report Abuse
Rajan எல்லாம் மாணவர்களுக்கும் ஐபோன் வழங்கப்படும்....
Rate this:
Cancel
Milirvan - AKL,நியூ சிலாந்து
28-அக்-202100:15:42 IST Report Abuse
Milirvan ///மீண்டும் பள்ளிக்கு வரும் மாணவர்களை ஆசிரியர்கள் இனிமையாக நடத்த வேண்டும். /// எதையாவது பேச வேண்டியது.. வேண்டாவெறுப்புக்கு புள்ள'ய பெத்துட்டு காண்டாமிருகம்'னு பேர் வச்சானாம்'ங்குறது போல..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X