பெகாசஸ் விவகாரம் குறித்து பார்லிமென்டில் விவாதம்: ராகுல் வலியுறுத்தல்

Updated : அக் 27, 2021 | Added : அக் 27, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி: ‛‛பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவுபார்க்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, பார்லிமென்டில் விவாதம் நடத்த வேண்டும் என மீண்டும் வலியுறுத்துவோம்,'' என, காங்கிரஸ் எம்.பி., ராகுல் தெரிவித்துள்ளார்.பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, 3 பேர் கொண்ட சிறப்பு வல்லுநர் குழு மூலம் விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக
Congress,Rahul,Rahul Gandhi,காங்கிரஸ்,ராகுல்,ராகுல் காந்தி

புதுடில்லி: ‛‛பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவுபார்க்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, பார்லிமென்டில் விவாதம் நடத்த வேண்டும் என மீண்டும் வலியுறுத்துவோம்,'' என, காங்கிரஸ் எம்.பி., ராகுல் தெரிவித்துள்ளார்.

பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, 3 பேர் கொண்ட சிறப்பு வல்லுநர் குழு மூலம் விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


latest tamil news


இது தொடர்பாக நிருபர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பி., ராகுல் கூறியதாவது: பெகாசஸ் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்கிறோம். நாங்கள் எழுப்பிய கவலையை நீதிபதிகளும் எழுப்பி உள்ளதால், எதிர்க்கட்சிகளின் நிலை தெளிவாக உள்ளது. நாங்கள் போராட்டம் நடத்தினோம். பதில் கிடைக்கவில்லை. பார்லிமென்டை முடக்கியும் இதுவரை பதில் வரவில்லை. தற்போது எங்களது நிலை தெளிவாகி உள்ளது. எனவே, எங்களின் அதே கேள்வி தான் எங்களிடம் உள்ளது.
எதிர்க்கட்சிகள் 3 அடிப்படை கேள்விகளை முன்வைக்கின்றன.பெகாசசிற்கு யார் ஒப்புதல் வழங்கினார்கள்; அதனை யார் வாங்கினார்கள்? யாரெல்லாம் உளவுபார்க்கப்பட்டார்கள்?நமது நாட்டு மக்களின் தகவல்கள் வேறு நாட்டில் உள்ளதா? என்ன மாதிரியான தகவல்கள் உள்ளன?

நமது நாட்டு பிரதமர் மற்ற நாட்டுடன் இணைந்து, நீதிபதிகள், முன்னாள் பிரதமர்கள், முதல்வர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் உள்ளிட்ட தனது நாட்டு மக்கள் மீது நடத்திய தாக்குதல் தேசத்தின் மீதான தாக்குதல். உளவு பார்க்கப்பட்ட தகவல்கள் வேறு நாட்டில் உள்ளதா? இது முக்கியமான கேள்வி; பிரதமர் அலுவலக மேஜையில் இந்த தகவல்கள் இருந்தாலும், அது கிரிமினல் குற்றம். அதற்கு எதிராக போராட்டம் நடத்துவோம்.

இந்த விவகாரத்தில் மீண்டும் விவாதம் நடத்த பா.ஜ., விரும்பாது. ஆனால், நாங்கள் மீண்டும் வலியுறுத்துவோம். இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. நீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. இருப்பினும், இது குறித்து பார்லிமென்டில் விவாதம் நடத்த வலியுறுத்துவோம். இவ்வாறு அவர் கூறினார்.


latest tamil news



தொடர்ந்து டுவிட்டரில் அவர் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: பெகாசஸ் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை வரவேற்கிறோம். இது அரசியல் சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல. இது நாட்டின் ஜனநாயக கட்டமைப்பு, மக்கள் மற்றும் சுதந்திரத்தின் மீதான தாக்குதல், இந்த தாக்குதலை இரண்டு பேர் மட்டுமே நடத்த முடியும். ஆனால், உண்மை வெளியே வரும்போது அவர்களிடம் பதில் இருக்காது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
28-அக்-202106:54:12 IST Report Abuse
அப்புசாமி அதான் உச்ச நீதி மன்றம் விசாரிச்சு, மேலும் விசாரிக்க ஒரு நிபுணர் குழுவைப் போட்டிருக்கில்லே... அவிங்க அறிக்கையைப் பாத்துட்டு பார்லிமெண்ட்டில் விவாதியுங்க. எதுவும் எங்கேயும் போயிடாது.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
28-அக்-202106:37:43 IST Report Abuse
Kasimani Baskaran மத்திய அரசுக்கு இது ஒரு நல்ல சந்தர்ப்பம். இராகுல் யாராடுடனெல்லாம் தொடர்பில் இருந்தார் என்பதை வெளியிட்டு வின்சியில் சுயரூபத்தை பொது மக்களுக்குக் காட்டலாம்.
Rate this:
Cancel
N S Sankaran - Chennai,இந்தியா
27-அக்-202119:21:27 IST Report Abuse
N S Sankaran உன்னை ஒரு நிமிடம் பேச விட்டால் போதும் அப்பா. ஒளிவு மறைவின்றி எல்லாம் தெரிந்து விடுகின்றது. உளவு வேறு பார்க்க வேண்டுமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X