சிறப்பு பகுதிகள்

அறிவியல் ஆயிரம்

அறிவியல் ஆயிரம்

Added : அக் 27, 2021
Share
Advertisement
அறிவியல் ஆயிரம்'பைக்'கில் பறக்கலாம்ஜப்பானின் எக்ஸ்டூரிஸ்மோ நிறுவனம் பறக்கும் வகையிலான 'பைக்' உருவாக்கியுள்ளனர். இதன் சோதனை ஓட்டமும் சமீபத்தில் நிறைவடைந்தது. இதன் விலை ரூ.5.16 கோடி. இதன் வேகம் மணிக்கு 96 கி.மீ. இது 40 நிமிடம் வரை தொடர்ந்து இயங்கும். இதன் எடை 300 கிலோ. முதல்கட்டமாக அடுத்தாண்டு துவக்கத்தில் 200 பறக்கும் 'பைக்' தயாரித்து வெளியிட அந்நிறுவனம் திட்டமிட்டு

அறிவியல் ஆயிரம்
'பைக்'கில் பறக்கலாம்
ஜப்பானின் எக்ஸ்டூரிஸ்மோ நிறுவனம் பறக்கும் வகையிலான 'பைக்' உருவாக்கியுள்ளனர். இதன் சோதனை ஓட்டமும் சமீபத்தில் நிறைவடைந்தது. இதன் விலை ரூ.5.16 கோடி. இதன் வேகம் மணிக்கு 96 கி.மீ. இது 40 நிமிடம் வரை தொடர்ந்து இயங்கும். இதன் எடை 300 கிலோ. முதல்கட்டமாக அடுத்தாண்டு துவக்கத்தில் 200 பறக்கும் 'பைக்' தயாரித்து வெளியிட அந்நிறுவனம் திட்டமிட்டு உள்ளது. கடல் பகுதிகளில் விபத்துகளில் சிக்குபவர்களை மீட்பதற்கு இந்த வாகனம் பெரிதும் உதவும். போக்குவரத்து நெருக்கடியில் இருந்தும் தப்பலாம்.

தகவல் சுரங்கம்
அனிமேஷன் தினம்
அனிமேஷனின் முக்கியத்துவம், அழகை ஒவ்வொரு நாளும் 'டிவி'யில் காண்கிறோம். அசையும் படங்களை கொண்டு உருவாக்கப்படும் அனிமேஷன் திரைப் படங்கள் தற்போது குழந்தைகளை மட்டுமல்லாமல் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்துள்ளது. அனிமேஷனின் பயன் 'டிவி', இசை, மீடியா, இன்டர்நெட், விளையாட்டு துறைகளில் பயன்படுகிறது. பிரான்சின் சார்லெஸ் எமிலி ரொனால்ட், 1892 அக். 28ல் உலகின் முதல் அனிமேஷன் திரைப்படத்தை வெளியிட்டார். இச்சாதனையை நினைவுகூறும் விதமாக 2002ல் இத்தினத்தை சர்வதேச அனிமேஷன் சங்கம் துவக்கியது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X