திருநெல்வேலி: திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் தடை செய்யப்பட்ட அமைப்பு சார்பில் நடந்த கருத்தரங்கில் ஹிந்து அமைப்பினர் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் சமூக விலக்கல் மற்றும் உட்கொணர்வு ஆய்வு மையம் மற்றும் சமூக வியல் துறை சார்பில், இன்று(அக்.,27)'' பெரியாரும் இஸ்லாமும்'' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. அதில், ரியாஸ் அஹமது என்பவர் பேச அழைக்கப்பட்டிருந்தார். துறை இயக்குநர் எஸ்.சாமுவேல் ஆசீர் ராஜ் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் 'அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்' என அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கருத்தரங்கில் சர்ச்சைக்குரிய விஷயங்கள் பேசப்படலாம் என்று சந்தேகப்பட்ட பா.ஜ., அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத், ஹிந்து முன்னணி உள்ளிட்ட அமைப்புகள், ஹிந்து முன்னணி மாநில தலைவர் குற்றாலநாதன் தலைமையில் ஒன்று கூடினர். நிகழ்ச்சியை ரத்து செய்ய கோரிய அவர்கள், நாங்களும் பங்கேற்போம் என தெரிவித்தனர்.

ஆனால், மாணவர்களுக்கு மட்டும் தான் அனுமதி எனக்கூறி, உள்ளே செல்ல போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால், அவர்கள் கவர்னரிடம் புகார் அளிக்க உள்ளதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் சர்ச்சையை கிளப்பி உள்ளது. பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். கருத்தரங்கில் என்ன பேசினார்கள்? என்ற தகவல் முழுமையாக வெளியாகவில்லை.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE