பொது செய்தி

தமிழ்நாடு

உள்ளாட்சி தேர்தல் அதிகாரி கிருஷ்ணகிரிக்கு இடமாற்றம்

Added : அக் 27, 2021
Share
Advertisement
- நமது நிருபர் -கோவை மாவட்டத்தில், உள்ளாட்சித்தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வசம் உள்ளது.உதவி இயக்குனர் நிலையிலான இந்த பணியிடத்தில் கோவை மாவட்டத்தில் பணியாற்றி வந்த சந்தானம், தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.அம்மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராக (சத்துணவு திட்டம்) மாற்றப்பட்டுள்ளார்.கோவை

- நமது நிருபர் -

கோவை மாவட்டத்தில், உள்ளாட்சித்தேர்தல் பணிகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் வசம் உள்ளது.உதவி இயக்குனர் நிலையிலான இந்த பணியிடத்தில் கோவை மாவட்டத்தில் பணியாற்றி வந்த சந்தானம், தற்போது கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார்.அம்மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளராக (சத்துணவு திட்டம்) மாற்றப்பட்டுள்ளார்.கோவை மாநகராட்சி, ஏழு நகராட்சிகள், 33 பேரூராட்சிகளுக்கு விரைவில் தேர்தல் நடக்கும் நிலையில், இந்த இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.இவர் தவிர, உதவி இயக்குனர் நிலையில்,மேலும்,27 அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.பவானி சாகர் மண்டல ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி நிறுவனத்தின் உதவி இயக்குனர் ராணி, கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உதவி திட்ட அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார்.அந்த பணியில் இருந்த தேவராஜ், நீலகிரி மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்க உதவி திட்ட அலுவலராக மாற்றப்பட்டுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X