சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நிலுவை சம்பளம் வழங்க கோரி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Added : அக் 27, 2021
Share
Advertisement
உடுமலை : உடுமலை ஒன்றிய அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க ஒன்றியச்செயலாளர் ரங்கராஜ் தலைமை வகித்தார். ஒன்றியப்பொருளாளர் முத்துசாமி, ஒன்றிய கமிட்டி நிர்வாகிகள் ரமேஷ், சுந்தரம் முன்னிலை வகித்தனர். மாவட்டச்செயலாளர் பஞ்சலிங்கம் கோரிக்கைகளை வலியுறுத்திப்பேசினார். ஆர்ப்பாட்டத்தில், 'உடுமலை ஒன்றிய ஊராட்சிகளில், வேலை உறுதியளிப்பு

உடுமலை : உடுமலை ஒன்றிய அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க ஒன்றியச்செயலாளர் ரங்கராஜ் தலைமை வகித்தார்.
ஒன்றியப்பொருளாளர் முத்துசாமி, ஒன்றிய கமிட்டி நிர்வாகிகள் ரமேஷ், சுந்தரம் முன்னிலை வகித்தனர். மாவட்டச்செயலாளர் பஞ்சலிங்கம் கோரிக்கைகளை வலியுறுத்திப்பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில், 'உடுமலை ஒன்றிய ஊராட்சிகளில், வேலை உறுதியளிப்பு திட்டத்தில், பல வாரங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால், தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.''உடனடியாக சம்பளம் வழங்க வேண்டும். வேலை நாட்களை, 150 நாட்களாக உயர்த்த வேண்டும். கொரோனா கால நிவாரண நிதியை தொழிலாளர்கள் குடும்பத்துக்கு வழங்க வேண்டும்,' உட்பட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. பின்னர், உடுமலை ஒன்றிய அதிகாரிகளிடம், தொழிலாளர்கள் மனு கொடுத்தனர். குடிமங்கலம்குடிமங்கலம் ஒன்றிய அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் தம்புராஜ் தலைமை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி, கோஷங்கள் எழுப்பப்பட்டன. தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் மதுசூதனன், ஸ்ரீதர் உட்பட பலர் பேசினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X