புது டில்லி: பிரதமர் நரேந்திர மோடி சுதந்திர இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான பிரதமர் என்றும், 2014-ல் நாட்டில் ராம ராஜ்ஜியத்தை கொண்டு வந்தவர் என உள்துறை அமைச்சர் அமித்ஷா பாராட்டி பேசியுள்ளார்.
![]()
|
பிரதமர் மோடி ஆட்சித் தலைமையேற்று 20 ஆண்டுகள் நிறைவடைந்ததைக் குறிக்கும் வகையில், அவரது செயல்பாடுகளை மதிப்பாய்வு செய்தல் என்ற தலைப்பில் புது டில்லியில் நடந்த நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியதாவது: நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் என்னிடம், “உங்களை விட மோடியை யாருக்கு நன்றாக தெரியும்” என்றார்கள். அவர்கள் தவறாக நினைக்கிறார்கள். என்னை விட நாட்டு மக்களுக்கு அவரை நன்றாக தெரியும். 1960-களுக்குப் பின் 2014 வரை பல கட்சி அமைப்பு வேலைக்காகுமா என்ற கேள்வி மக்கள் மனதில் இருந்தன. 2014 வரை, ராமராஜ்ஜிய கனவு தகர்ந்திருந்தது.
மக்கள் மிகுந்த பொறுமையுடன் இருந்தனர். பா.ஜ.க.,வுக்கு வாக்களித்தனர். முதல்முறையாக காங்கிரஸ் அல்லாத முழு மெஜாரிட்டியுடன் அரசமைந்தது. 2014ல் நாட்டில் ராமராஜ்ஜியத்தை கொண்டு வந்தவர் மோடி. 2001-ம் ஆண்டில் அவர் குஜராத்தின் முதல்வராக இருப்பார் என்று கட்சி முடிவு செய்தது. அதற்கு முன் அவர் பஞ்சாயத்து தேர்தலில் கூட போட்டியிட்டதில்லை. எம்.ஏ., டிகிரி மட்டும் பெற்றிருந்தார். பெரிய பட்டமும் இல்லை. அவர் முதல்வரான போது குஜராத்தில் நிலைமை சரியாக இல்லை. உண்மையான சீர்திருத்தம் என்பது நிலைமையை மாற்றுவது. வழிமுறையை மாற்றுவது இல்லை. மோடி நிலைமையை மாற்றினார்.
2014-ல் பிரதமரை யாரும் பிரதமராகக் கருதாத வகையிலும், அனைவரும் தங்களையே பிரதமராகக் கருதும் வகையில் ஒரு அரசு இருந்தது. கொள்கை முடக்கம், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல், உச்சத்தில் ஊழல் போன்றவை இருந்தன. மக்கள் கொதிப்படைந்தனர்.
![]()
|
டில்லியில் போராட்டம் நடந்த போது, பிரதமர் மோடியின் பெயர் எழுந்தது. மக்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டது. அவருக்கு வாய்ப்பு தந்து பரிசோதித்து பார்க்க வேண்டும் என மக்கள் நினைத்தனர். தற்போது சுதந்திர இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான பிரதமராக மோடி உள்ளார். இவ்வாறு பேசினார்.
உடனுக்குடன் உண்மை செய்திகளை உங்களது
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE
Advertisement