கடல் உரிமைகளை பாதுகாக்க இந்தியா உறுதி| Dinamalar

'கடல் உரிமைகளை பாதுகாக்க இந்தியா உறுதி'

Updated : அக் 27, 2021 | Added : அக் 27, 2021 | கருத்துகள் (2)
Share
புதுடில்லி :''தன் கடற்பகுதிக்குள் உள்ள சட்டப்பூர்வமான உரிமைகளை பாதுகாக்க, இந்தியா உறுதி கொண்டுள்ளது,'' என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.இந்தோ - பசிபிக் பிராந்திய மாநாட்டில் அவர் பேசியதாவது:இந்தோ - பசிபிக் பிராந்தியம், பல சவால்களை எதிர்கொண்டு வருகிறது. இவற்றை சமாளிக்க ஒற்றுமை தேவை. தன் கடற்பகுதிக்குள் உள்ள சட்டபூர்வமான உரிமைகளை பாதுகாக்க, இந்தியா
 
'கடல் உரிமைகளை பாதுகாக்க இந்தியா உறுதி'

புதுடில்லி :''தன் கடற்பகுதிக்குள் உள்ள சட்டப்பூர்வமான உரிமைகளை பாதுகாக்க, இந்தியா உறுதி கொண்டுள்ளது,'' என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.
இந்தோ - பசிபிக் பிராந்திய மாநாட்டில் அவர் பேசியதாவது:


இந்தோ - பசிபிக் பிராந்தியம், பல சவால்களை எதிர்கொண்டு வருகிறது. இவற்றை சமாளிக்க ஒற்றுமை தேவை. தன் கடற்பகுதிக்குள் உள்ள சட்டபூர்வமான உரிமைகளை பாதுகாக்க, இந்தியா உறுதி கொண்டுள்ளது. அதே நேரத்தில் மற்ற நாடுகளின் உரிமைகளை, இந்தியா எப்போதும் மதிக்கும். இந்தியா ஒரு போதும் மற்று நாடுகளின் எல்லைகளில் அத்துமீறியதில்லை; அத்துமீறவும் செய்யாது. சில நாடுகள் எல்லைகளை விரிவுப்படுத்தும் நோக்கில் செயல்படுவது, அமைதிக்கு எதிரானது.


latest tamil news



எல்லைகளை பாதுகாக்க அனைத்து நாடுகளுக்கும் உரிமையுள்ளது. அடுத்த நாடுகளின் எல்லைகளில் அத்துமீறுவது ஜனநாயக விரோதமானது. இந்தியாவில் தோன்றிய புத்தமதம், இலங்கைக்கு சென்று, அங்கிருந்து, கொரியா வரை உள்ள கிழக்காசிய நாடுகளில் பரவியுள்ளது. இதற்கு கடல் வழி இணைப்பு தான் பெரிதும் காரணம். இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X