சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

விடை தெரியா கேள்விகள்!

Added : அக் 27, 2021
Share
Advertisement
விடை தெரியா கேள்விகள்!கபிலன், திண்டுக்கல்லிலிருந்து எழுதுகிறார்: தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின், கோவில்களுக்கு சொந்தமான 1,000 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான, 300 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு; மதுரை பரவை


விடை தெரியா கேள்விகள்!கபிலன், திண்டுக்கல்லிலிருந்து எழுதுகிறார்: தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின், கோவில்களுக்கு சொந்தமான 1,000 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலங்கள் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான, 300 கோடி ரூபாய் மதிப்புள்ள ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு; மதுரை பரவை கருப்பண்ணசுவாமி கோவிலுக்கு சொந்தமான 1 ஏக்கர் 60 சென்ட் நஞ்சை நிலம் மீட்பு... என, செய்திகள் வந்தபடியே இருக்கின்றன.கோவிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பாளர் பிடியில் இருந்து மீட்கும் நடவடிக்கை பாராட்டத்தக்கது தான். ஆனால், ஆக்கிரமிப்பாளர் மீது குற்றவியல் நடவடிக்கை ஏதும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லையே!கோவில் நிலத்தை ஆக்கிரமித்திருந்த நபர்களிடம், இழப்பீடு தொகை ஏதேனும் வசூலிக்கப்பட்டதா? மீட்கப்பட்ட நிலங்களை, தொடர்ந்து கண்காணிப்பதற்கு குழு ஏதும் அமைக்கப்பட்டுள்ளதா?கோவில் நிலம் மீட்பு விஷயத்தில், பல கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.நீதிமன்ற உத்தரவிற்காக, கண் துடைப்பு நாடகம் நடத்துகிறதோ தி.மு.க., அரசு?கோவில் பராமரிப்பில், பாதுகாப்பில் உண்மையான அக்கறை செலுத்துமா அறநிலையத் துறை?


முறைகேடுக்கு சட்டம் பாதுகாப்பு!எஸ்.ராமசுப்பிரமணியன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அரசு நல்ல நோக்கத்தோடு அறிமுகப்படுத்தும் சட்டங்கள், நடைமுறைக்கு வரும் போது, ஒரு சிலருக்கே பயனளிக்கின்றன.உதாரணமாக, மத்திய - மாநில அரசு பணிகளில் பட்டியல் ஜாதியினர் மற்றும் பழங்குடியினருக்காக குறிப்பிட்ட சதவீதம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.மேற்படி, பட்டியல் மற்றும் பழங்குடி இனத்தில், 500க்கும் மேற்பட்ட ஜாதிகள் உள்ளன.இடஒதுக்கீடு செய்துள்ள அந்த அரசு பணியானது, அந்த 500 ஜாதிகளுக்கும் சென்று சேர்கிறதா என்றால், இல்லை என்பதே நிதர்சனம். அதில், 20 - 30 ஜாதிகள் மட்டும் தான், அந்த இடஒதுக்கீட்டுக்கான பலனை அனுபவித்து வருகின்றன.மீதியுள்ள, பட்டியல் இனத்தில் அடங்கியுள்ள 480 ஜாதியினருக்கு, தங்களுக்கு அப்படி ஒரு சலுகை இருப்பதே தெரியாது. அப்படி தெரியாதவாறு, இடஒதுக்கீடு பலனை அனுபவிக்கும் ஜாதியினர் கவனமாக பார்த்துக் கொள்கின்றனர்.அதுபோல, இந்த பட்டியல் மற்றும் பழங்குடியின அரசு அலுவலர்களை, மற்ற ஜாதி உயர் அதிகாரிகள் யாரும் கொடுமைப்படுத்தாமல் இருக்க, பாதுகாப்புக்காக சிறப்பு சட்டம் ஒன்றையும் இயற்றி வைத்திருக்கிறது.இது, எந்த பிரச்னையில் இருந்தும் தங்களை பாதுகாக்கும் என்ற தைரியத்தில், அவர்களில் சிலர் துணிச்சலாக ஊழலிலும், முறைகேடுகளிலும் ஈடுபடுகின்றனர்.அதாவது நீர்நிலை, புறம்போக்கு நிலத்திற்கு போலி ஆவணம் தயார் செய்து, அதை வைத்து பத்திரப்பதிவு செய்கின்றனராம். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முயன்றால், அந்த சிறப்பு சட்டத்தை காட்டி, உயரதிகாரிகளையே மிரட்டுகின்றனராம்.
நடக்கும் இந்த சம்பவங்களை பார்க்கும் போது, 30 ஆண்டுகளுக்கு முன், 'தினமலர் - வாரமலர்' இதழில் வெளியாகி இருந்த, 'அறுவை சிகிச்சை' என்ற சிறுகதை தான் நினைவுக்கு வருகிறது.அரசு அலுவலர் ஒருவர், தான் வாங்கியிருக்கும் கடன் தொல்லைகளில் இருந்து விடுபட, மருத்துவ சான்றிதழ் மூலம் பணி ஓய்வு பெறுவார். மேலும், தன் மனைவியை அந்த பணியில் சேர்த்து விடுவார்.அவரது மனைவியோ, 'அலுவலக பணி பற்றி எனக்கு எதுவுமே தெரியாதே... நான் எப்படி அங்கு வேலை செய்வேன்' என தயங்குவார்.அதற்கு அந்த கணவன், 'நீ ஒண்ணும் கவலைப்படாதே... ஆபீஸ்ல எவனாவது, நீ வேலை சரியா செய்யலைன்னு சொன்னா, என் கையை புடிச்சி இஸ்தான்னு கம்ப்ளெயின்ட் பண்ணிருவேன்னு எடுத்து உடு. ஒரு பய, உன்னை வேலை செய்ய சொல்ல மாட்டான்' என, ஐடியா கொடுத்து அனுப்பி
வைப்பான்.தங்களுக்கு பாதுகாப்பாக அரசு இயற்றி இருக்கும் சிறப்பு சட்டங்களையே, பாதுகாப்பு கேடயமாக மாற்றி, ஊழலிலும், முறைகேடுகளிலும் ஈடுபடுகின்றனர். நோக்கம் திசை மாறும் சட்டத்தை, நடைமுறையிலிருந்து விலக்கிக் கொள்வதே சாலச் சிறந்தது.அரசு ஆலோசிக்குமா?


சமரசத்திற்கு இடம் இல்லை!கே.நாகலட்சுமி, விழுப்புரத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பாகிஸ்தான் மற்றும் வங்கதேசத்துடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் பஞ்சாப், குஜராத், மேற்கு வங்க மாநிலத்தில் எல்லை பாதுகாப்பு படை போலீசாரின் அதிகார வரம்பு 15 கி.மீ.,யில் இருந்து 50 கி.மீ.,யாக அதிகரிக்கப்பட்டுள்ளது; இது வரவேற்கத்தக்க நடவடிக்கை.பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் ஊடுருவி, நம் நாட்டில் சதிச் செயல் புரிகின்றனர். அவர்களுக்கு, நம் நாட்டில் உள்ள சில விஷமிகளும் துணை போகின்றனர் என்பது வேதனையான உண்மை.நம் சர்வதேச எல்லைப் பகுதியை பாதுகாக்கும் பணியில், பி.எஸ்.எப்., படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்களுக்கு 15 கி.மீ., வரை மட்டுமே அதிகார வரம்பு அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேற்பட்ட பகுதிகளில், உள்ளூர் போலீசாரின் அனுமதி இன்றி, இவர்களால் எந்த நடவடிக்கையிலும் ஈடுபட
அதிகாரம் இல்லை.இந்த அதிகார வரம்பை 50 கி.மீ., ஆக உயர்த்தியுள்ளது மத்திய அரசு.'எல்லைப் பகுதியில், 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா சிறிய ரக விமானங்கள் வாயிலாக, ஆயுதங்கள் கடத்தப்படும் சம்பவங்கள் அதிகரிக்கத் துவங்கி உள்ளன. இதை கண்காணித்து கட்டுப்படுத்தவே, பி.எஸ்.எப்., அதிகார வரம்பை அதிகரித்துள்ளோம்' என, மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.மேகாலயா, நாகாலாந்து, மிசோரம், திரிபுரா, மணிப்பூர் மாநிலங்களிலும், ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களிலும், பி.எஸ்.எப்., வீரர்களுக்கு அதிகார வரம்பு நிர்ணயிக்கப்படவில்லை. எங்கு வேண்டுமானாலும் அவர்கள் சோதனை நடத்தலாம்.பஞ்சாப், குஜராத், மேற்கு வங்க மாநிலங்களில், வெறும் 50 கி.மீ.,க்கு தான் அதிகாரம் அளிக்கப்பட்டு உள்ளது.இந்த முடிவுக்கு பஞ்சாப் மற்றும் மேற்கு வங்க அரசுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. மடியில் கனம் இருந்தால் தான் வழியில் பயம். நம் நாட்டின் பாதுகாப்பில் சமரசத்திற்கு இடம் கொடுக்க கூடாது. நாட்டின் நலனை விட, பதவி அரசியலே முக்கியம் என நினைக்கும் கட்சிகளை, மக்கள் புறக்கணிக்க வேண்டும்.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X