பொது செய்தி

இந்தியா

அமைச்சர் மாலிக்குக்கு எதிரான மனு: அவசர வழக்காக விசாரிக்க மறுப்பு

Updated : அக் 29, 2021 | Added : அக் 27, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
மும்பை:மஹாராஷ்டிரா அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான நவாப் மாலிக், போதைப் பொருள் தடுப்பு படை குறித்து கருத்து தெரிவிக்க தடை கோரிய மனுவை, அவசர வழக்காக விசாரிக்க மும்பை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.குற்றச்சாட்டுஇங்கு மும்பையை
அமைச்சர் மாலிக், மனு, விசாரிக்க மறுப்பு

மும்பை:மஹாராஷ்டிரா அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான நவாப் மாலிக், போதைப் பொருள் தடுப்பு படை குறித்து கருத்து தெரிவிக்க தடை கோரிய மனுவை, அவசர வழக்காக விசாரிக்க மும்பை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.


குற்றச்சாட்டு

இங்கு மும்பையை சேர்ந்த, 'பாலிவுட்' நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கானை போதைப் பொருள் தடுப்பு படையினர் சமீபத்தில் கைது செய்தனர்.

மும்பையில் உள்ள ஆர்தர் சாலை சிறையில் இவர் அடைக்கப்பட்டுஉள்ளார்.இந்நிலையில், ஆர்யன் கானை கைது செய்த போதைப் பொருள் தடுப்பு படையின் உயர் அதிகாரி சமீர் வான்கடே மற்றும் போதைப் பொருள் தடுப்பு படை குறித்து, தேசியவாத காங்.,கைச் சேர்ந்த அமைச்சர் நவாப் மாலிக் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.

போதைப் பொருள் தடுப்பு படையினர் நடத்திய சோதனை போலியானது என்றும், அதிகாரி சமீர் வான்கடே சட்டவிரோதமாக தொலைபேசி உரையாடல்களை ஒட்டு கேட்பதாகவும் நவாப் மாலிக் குற்றஞ்சாட்டி உள்ளார்.

இந்நிலையில், போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களை மீட்டு மறுவாழ்வு அளித்து வரும் மும்பையை சேர்ந்த கவுசர் அலி என்பவர், மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதன் விபரம்:போலீஸ் அதிகாரி சமீர் வான்கடேவின் தலைமையில் போதைப் பொருள் தடுப்பு படை முன் எப்போதும் இல்லாத வகையில் மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.


உத்தரவுஆனால், போதைப் பொருள் தடுப்பு படை மற்றும் அதிகாரி சமீர் வான்கடே குறித்து அமைச்சர் நவாப் மாலிக் அவதுாறான கருத்துகளை தெரிவித்து வருகிறார். இது விசாரணை அமைப்பின் மதிப்பை கெடுக்கும் விதமாக உள்ளது. இது போன்ற கருத்துகள் போதைப் பொருள் பயன்படுத்துவோரை ஊக்குவிப்பதை போல அமைந்துவிடும்.

எனவே, ஆர்யன் கான் வழக்கை விசாரித்து வரும் விசாரணை அமைப்புகள் குறித்து கருத்து தெரிவிக்க, அமைச்சர் நவாப் மாலிக்குக்கு தடை விதிக்க வேண்டும். இந்த வழக்கை அவசர வழக்காக கருதி உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:இந்த வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள முடியாது. தேவைப்பட்டால் அடுத்த வாரம் கூட உள்ள விடுமுறை கால அமர்வை மனுதாரர் நாடலாம் அல்லது தீபாவளி பண்டிகைக்கு பின் வழக்கமான நீதிமன்ற பணிகள் துவங்கும் வரை காத்திருக்கலாம்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


ராஜினாமா செய்ய தயார்

மஹாராஷ்டிரா அமைச்சரும், தேசியவாத காங்.,கைச் சேர்ந்தவருமான நவாப் மாலிக் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:'கார்டிலியா' சொகுசு கப்பலில் விருந்துக்கு ஏற்பாடு செய்தவர்கள், மஹாராஷ்டிரா உள்துறை அமைச்சகத்திடம் அனுமதி பெறவில்லை. டில்லியில் உள்ள மத்திய கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கப்பல் போக்குவரத்து துறை இயக்குனரகத்திடம் அவர்கள் நேரடியாக அனுமதி பெற்றுள்ளனர்.

விருந்து நடந்த கப்பலில் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த முக்கிய நபர் இருந்துள்ளார். அவர் கப்பலில் சுதந்திரமாக சுற்றி வரும் காட்சிகள் உள்ளன. அவரை விட்டு விட்டு மற்ற சிலரை மட்டும் கைது செய்தது ஏன்?டில்லியை சேர்ந்த போதைப் பொருள் தடுப்பு படையின் உயர் அதிகாரிகள் மும்பை வந்துள்ளனர்.

அவர்கள் சமீர் வான்கடே, கே.பி.கோசாவி, பிரபாகர் செய்ல், வான்கடேவின் கார் ஓட்டுனர் மானே ஆகியோரது, 'மொபைல் போன்' அழைப்பு விபரங்களை சோதனையிட்டாலே உண்மை வெளிச்சத்துக்கு வரும்.சமீர் வான்கடே போலி ஆவணங்கள் கொடுத்து பணியில் சேர்ந்தார் என்ற என் குற்றச்சாட்டை பொய் என நிரூபித்தால், அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, அரசியலில் இருந்தே ஓய்வு பெற தயார்.

ஒருவேளை என் குற்றச்சாட்டு உண்மை என்பது தெரியவந்தால் என்னிடமும், என் குடும்பத்தினரிடமும் வான்கடே மன்னிப்பு கேட்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
28-அக்-202117:26:14 IST Report Abuse
Sriram V Mumbai court will take cases as urgent only for Shah Rukh Khan
Rate this:
Cancel
elakkumanan - Naifaru,மாலத்தீவு
28-அக்-202110:31:29 IST Report Abuse
elakkumanan யோவ், உனக்கெல்லாம் எதுக்குய்யா இந்த மாதிரி கேவலமான பிழைப்பு... இதுக்கு ஒரு மந்திரி பதவி வேற...மதம் உன்னை இப்பிடியெல்லாம் பேச வைக்கிறது...அந்த அதிகாரி தவறுதலாக பணியில் சேர்ந்து, பணியில் இருப்பது தெரிந்து இத்தனை வருமா .ஏன்ன டேஸ் பண்ணிக்கிட்டுட் இருந்தீங்க அய்யா... உன்னயெல்லாம் தேர்ந்தெடுத்த அந்த மக்களை சொல்லணும்.. அந்த அதிகாரி தவறு செய்தால், கோர்ட்டில் சொல்லு....எதுக்கு மீடியாவில்.. அப்போ, அவரது நடத்தை குறித்த சந்தேகத்தை கிளப்பி, அதன் மூலம், யோக்கியன் பட்டம் வாங்கித்தர இந்த ஏற்பாடு... நீயெல்லாம் என்ன ஜென்மமோ......
Rate this:
Cancel
sridhar - Chennai,இந்தியா
28-அக்-202107:32:22 IST Report Abuse
sridhar ஒரு இஸ்லாமியன் என்ன செய்தாலும் கைது செய்ய கூடாது . இது தான் சமூக நீதி , செகுலரிஸ்ம் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X