சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : அக் 27, 2021
Share
Advertisement
நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை: முஸ்லிம் என்பதால், நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் மீது தொடரப்பட்டுள்ள போதைப் பொருள் வழக்கில், அதிகார அத்துமீறல்களும், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதை கண்டிக்கிறோம்.போதைத் தடுப்பு அதிகாரி வான்கடேயை விட, மிகத் துல்லியமாய் புலனாய்வு செய்தவர் போல காட்டிக் கொண்டு அறிக்கை


பேச்சு, பேட்டி, அறிக்கை

நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை: முஸ்லிம் என்பதால், நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் மீது தொடரப்பட்டுள்ள போதைப் பொருள் வழக்கில், அதிகார அத்துமீறல்களும், அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதை கண்டிக்கிறோம்.போதைத் தடுப்பு அதிகாரி வான்கடேயை விட, மிகத் துல்லியமாய் புலனாய்வு செய்தவர் போல காட்டிக் கொண்டு அறிக்கை விடுகிறீர்களே... அந்த புலனாய்வு திறன் இருந்தால், இப்படி மேம்போக்காக ஒரு அறிக்கை வராது என்பது, மக்களுக்கு நல்லா புரியுமே... உங்களுக்குப் புரியலியே!

பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை: அரசு போக்குவரத்துக் கழக பஸ்களில் கடுமையான டயர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. உடனடியாக டயர்கள் வாங்கப்படாவிட்டால், 40 சதவீத பஸ்களை தீபாவளிக்கு இயக்க முடியாது என கூறப்படுகிறது. இது கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும்.சென்னை போன்ற பெருநகரங்கள் தவிர்த்து பிற இடங்களில் ஓடும் அரசு பஸ்கள், காயலான் கடைக்கு கூட தேறாத நிலையில் தான் உள்ளன. டயர்களை விட பஸ்களையே மொத்தமாக மாற்றினால் தான் நல்லது!

புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி அறிக்கை: அண்மை காலமாக, இந்தியாவைச் சுற்றியுள்ள பல்வேறு நாடுகளிலும், ஹிந்துக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடரும் பட்சத்தில், நாளை இந்தியாவிலும், தமிழகத்திலும் வன்முறைகள் நடைபெற வழி வகுத்துவிடும். எனவே, உலக ஹிந்துக்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டிய நேரம் இது.கம்யூ.,க்கள், 'உலக தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்' என சொன்னது போல, ஹிந்துக்கள் அனைவரும் ஒன்றுபட வேண்டிய கட்டாய காலம் இது!


தமிழக சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் பேட்டி:
கவர்னர் பதவி என்பது தீயணைப்பு வாகனம் போன்றது. நெருப்பு இருந்தால் மட்டுமே வந்து அணைக்க வேண்டும். கவர்னர் வரம்பை மீறினால் முதல்வர் பயப்பட மாட்டார். சிறப்பாக செயல்படும் ஆட்சியில் தலையிடுவது குழப்பத்தை ஏற்படுத்தும்.நெருப்பு ஏற்பட்டால், பாதிப்பு கடுமையாக ஆகி விடும். எனவே தான், நெருப்பு ஏற்படும் முன், எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க, கவர்னர் ஆயத்தமாகி விட்டாரோ என்னவோ!


தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலர் பாலகிருஷ்ணன் அறிக்கை:
'நீட்' தேர்வை போல, பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வர்களை ஆசிரியர் தேர்வு வாரியம் அலைக்கழிக்கிறது. தேர்வை ஒத்தி வைத்து, தேர்வர்கள் விண்ணப்பித்த மையத்திலேயே தேர்வு எழுத செய்ய வேண்டும்.கம்யூ.,க்களுக்கு எந்த தேர்வும் நடத்தப்படக் கூடாது. மொத்தமாக எல்லாரையும் அள்ளி,அரசு வேலைகளில் அமர்த்தி விட வேண்டும். பின்பு, அவர்களை வைத்து, 'ஜிந்தாபாத்' கோஷம் போட வேண்டும்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X