சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

ஆளுங்கட்சியினரின் தங்க சுரங்கமான 'டாஸ்மாக்!'

Added : அக் 27, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
ஆளுங்கட்சியினரின் தங்க சுரங்கமான 'டாஸ்மாக்!'ஏலக்காய் டீயை பருகியபடியே, ''ஆளுங்கட்சி கோஷ்டி பூசல்ல அதிகாரியை துாக்கி அடிச்சுட்டாங்க பா...'' என்றபடியே, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் அன்வர்பாய்.''எந்த ஊருலங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.''நீலகிரி மாவட்டம், தேவர்சோலை பேரூராட்சியில சில மாதங்களுக்கு முன் நியமிக்கப்பட்ட அதிகாரியை, திடீர்னு விருதுநகர்

 டீ கடை பெஞ்ச்


ஆளுங்கட்சியினரின் தங்க சுரங்கமான 'டாஸ்மாக்!'



ஏலக்காய் டீயை பருகியபடியே, ''ஆளுங்கட்சி கோஷ்டி பூசல்ல அதிகாரியை துாக்கி அடிச்சுட்டாங்க பா...'' என்றபடியே, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் அன்வர்பாய்.

''எந்த ஊருலங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.

''நீலகிரி மாவட்டம், தேவர்சோலை பேரூராட்சியில சில மாதங்களுக்கு முன் நியமிக்கப்பட்ட அதிகாரியை, திடீர்னு விருதுநகர் மாவட்டத்துக்கு துாக்கி அடிச்சாங்க... நிர்வாக காரணத்துக்காக மாத்திட்டதா, மற்ற அதிகாரிகள் சொன்னாங்க...

''ஆனா, சமீபத்துல வளர்ச்சி பணிகள் தொடர்பா 'டெண்டர்' விட்டதுல, விதிகளை மீறி, உள்ளூர் அமைச்சர் ஆதரவாளர் ஒருவருக்கு ஆதரவா அதிகாரி செயல்பட்டிருக்கார்...

''இது சம்பந்தமா, பாதிக்கப்பட்ட கான்ட்ராக்டர்கள் புகாரால அதிகாரியை மாத்திட்டாங்களாம்... அதிகாரி மாற்றத்துல, அமைச்சரின் எதிர் கோஷ்டிக்கு பங்கு இருக்குன்னும் சொல்றாங்க பா...''
என்றார் அன்வர்பாய்.

''வேணுகோபால் இங்கன உட்காரும்...'' என, நண்பரை அழைத்த அண்ணாச்சியே, ''கட்சி கூண்டோடு காலியாயிட்டு இருக்கு வே...'' என, அடுத்த மேட்டருக்கு மாறினார்.

''எந்தக் கட்சியைச் சொல்றேள்...'' எனக் கேட்டார் குப்பண்ணா.

''பெரம்பலுார் மாவட்ட தே.மு.தி.க., செயலரா இருந்தவர் துரை காமராஜ்... இவர், மாவட்ட பொருளாளர் கண்ணுசாமி, துணை செயலர் புகழேந்தி ஆகியோருடன்,
சமீபத்துல முதல்வர் ஸ்டாலின் முன்னி லையில தி.மு.க.,வுல சேர்ந்துட்டாரு வே...

''பின்னாடியே, மாவட்ட வர்த்தக அணி செயலர் குமார், செயற்குழு உறுப்பினர் தர்மலிங்கம்னு மேலும் பலரும் தி.மு.க.,வுல சேர்ந்துட்டாவ... இன்னும் நிறைய பேரும் கட்சியை விட்டு ஓட்டம் பிடிக்க முடிவு பண்ணிட்டாவ வே...

''சீக்கிரமே நடக்கப் போற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்ல வாய்ப்பு தர்றதா துாண்டில் வீசியே, மாவட்டத்துல கொஞ்சம் நஞ்சம் இருக்கிற தே.மு.தி.க.,வினரையும் தி.மு.க.,வினர் இழுத்து போட்டுட்டு இருக்காவ வே...'' என்றார்
அண்ணாச்சி.

''டாஸ்மாக் கடைகளும், ஆளுங்கட்சியினருக்கு தங்கச் சுரங்கமாயிடுத்து ஓய்...'' என, மேட்டரின் இறுதிக்கு வந்தார் குப்பண்ணா.

''விளக்கமா சொல்லுங்க பா...'' என்றார் அன்வர்பாய்.

''திருப்பூர் மாவட்டம், உடுமலை பகுதி டாஸ்மாக் கடைகள்ல, மது பாட்டில்களுக்கு கூடுதல் விலை வச்சு வித்துண்டு இருந்தா... கடை ஊழியர்களை உள்ளூர் தி.மு.க., நிர்வாகிகள் கூப்பிட்டு, 'பாட்டிலுக்கு 3 ரூபாய் தந்துடுங்கோ'ன்னு பேரம் பேசியிருக்கா ஓய்...

''தராத கடைகள் முன்னாடி போய் நின்னு, 'அரசு நிர்ணயித்த விலைக்கு 'பில்' போட்டு விற்பனை பண்ணுங்கோ'ன்னு தகராறு பண்ணியிருக்கா...

''முதலுக்கே மோசம் வந்துடும்னு பயந்து போன கடை ஊழியர்கள், இறங்கி வந்தா ஓய்...

''கடைசியா, கடைகளின் விற்பனைக்கு ஏற்ப, மாதாந்திர மாமூல் தந்துடறதுன்னு பேசி முடிவாகிடுத்து... இப்ப, பாட்டிலுக்கு 10 ரூபாய் ஏத்தி வித்துண்டு இருக்கா ஓய்...

''இதே மாதிரி, கோவை, தொண்டாமுத்துார் தொகுதியில இருக்கற பார்கள்ல,தி.மு.க., ஒன்றிய நிர்வாகிகள், மாசா மாசம் 10ம் தேதி, தலா 50 ஆயிரம் ரூபாய் வசூல் பண்ணிண்டு இருக்கா...

''அடுத்த மாசம் 4ம் தேதி தீபாவளிங்கறதால, வழக்கமா 10ம் தேதி தர மாமூலை, 1ம் தேதியே தந்துடணும்னு உத்தரவு போட்டுட்டு போயிருக்கா ஓய்...'' என, முடித்தார் குப்பண்ணா.
அரட்டை முடிய, அனைவரும் கிளம்பினர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
28-அக்-202118:25:55 IST Report Abuse
D.Ambujavalli அரசு மட்டும்தான் டாஸ்மாக் விற்பனைக்கு டார்கெட் வைக்குமா? அதிகாரிகளின் பங்குக்கும் டார்கெட் வைத்து சம்பாதிக்கிறார்கள்
Rate this:
Cancel
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
28-அக்-202109:32:20 IST Report Abuse
R.RAMACHANDRAN போதை பொருட்கள் மீது எவ்வளவு கூடுதல் விலை வைத்து விற்றாலும் வாங்க தயாராக இருக்கிறார்கள் இந்த நாட்டில்.இதை வைத்து சிலர் கோடிகளில் புரள்கிறார்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X