பொது செய்தி

இந்தியா

காந்திய சிந்தனையாளர் சுப்பா ராவ் காலமானார்

Added : அக் 27, 2021
Share
Advertisement
ஜெய்ப்பூர்:காந்திய சிந்தனையாளர் சுப்பா ராவ் உடல்நலக்குறைவால் காலமானார். இவருக்கு வயது, 92.ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் வசித்து வந்த சுப்பா ராவுக்கு, சில தினங்களுக்கு முன் வயது முதிர்வு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, இங்கு உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.இந்நிலையில், அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. டாக்டர்கள்
 காந்திய சிந்தனையாளர் சுப்பா ராவ் காலமானார்

ஜெய்ப்பூர்:காந்திய சிந்தனையாளர் சுப்பா ராவ் உடல்நலக்குறைவால் காலமானார். இவருக்கு வயது, 92.
ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் வசித்து வந்த சுப்பா ராவுக்கு, சில தினங்களுக்கு முன் வயது முதிர்வு காரணமாக உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, இங்கு உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.இந்நிலையில், அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது. டாக்டர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனளிக்காததால் அவர் உயிர் பிரிந்தது.சுப்பா ராவ் மறைவுக்கு, ராஜஸ்தான் கவர்னர் கல்ராஜ் மிஷ்ரா, முதல்வர் அசோக் கெலாட் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

கடந்த, 1929ம் ஆண்டு, கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் பிறந்த சேலம் நஞ்சுண்டையா சுப்பா ராவ் என்ற எஸ்.என்.சுப்பா ராவ், 'வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தில் பங்கேற்றதால், தன், 13வது வயதில் கைது செய்யப்பட்டார். மஹாத்மா காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்ட இவர், மத்திய பிரதேசத்தின் மொரேனா மாவட்டத்தில் உள்ள சம்பல் பள்ளத்தாக்கில் காந்தியின் பெயரில் ஆசிரமம் ஒன்றை அமைத்தார்.

பள்ளத்தாக்கில், கொள்ளையர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் நோக்கத்தில், சரணடையும் கொள்ளையர்களுக்கான மறுவாழ்வு முகாமாக அந்த ஆசிரமம் செயல்பட்டது. சுப்பா ராவின் இந்த முயற்சி, அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. இந்த செயலுக்காக, மத்திய அரசு இவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X