பொது செய்தி

இந்தியா

இதே நாளில் அன்று

Added : அக் 27, 2021
Share
Advertisement
அக்., 28, 1997கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள கத்தாவல்லி என்ற கிராமத்தில், 1920 ஆக., 11ம் தேதி பிறந்தவர் வி.துரைசுவாமி. இசைக் குடும்பத்தில் பிறந்ததால், இயல்பாகவே இசைஞானம் பெற்றிருந்தார். தன் 12-வது வயதில் மைசூர் மகாராஜா முன்னிலையில் கச்சேரி செய்தார். வீணை வித்வான் வேங்கட கிரியப்பாவிடம் 15 ஆண்டுகள் இசை கற்றார். தானாகவே புல்லாங்குழலும் இசைக்க கற்றுக் கொண்டார். மைசூர்
 இதே நாளில் அன்று

அக்., 28, 1997
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் உள்ள கத்தாவல்லி என்ற கிராமத்தில், 1920 ஆக., 11ம் தேதி பிறந்தவர் வி.துரைசுவாமி. இசைக் குடும்பத்தில் பிறந்ததால், இயல்பாகவே இசைஞானம் பெற்றிருந்தார். தன் 12-வது வயதில் மைசூர் மகாராஜா முன்னிலையில் கச்சேரி செய்தார். வீணை வித்வான் வேங்கட கிரியப்பாவிடம் 15 ஆண்டுகள் இசை கற்றார். தானாகவே புல்லாங்குழலும் இசைக்க கற்றுக் கொண்டார். மைசூர் மகாராஜா அரண்மனை வாத்தியக் குழுவில் இணைந்தார். பெங்களூரு அகில இந்திய வானொலி நிலையத்தின் இசை இயக்குனர் பதவியை ஏற்றார். இவர் வீணை இசைக்கும் பாணி, 'மைசூர் பாணி' எனக் குறிப்பிடப்பட்டது. பாலக்காடு மணி, லால்குடி ஜெயராமன், உஸ்தாத் அலி அக்பர் கான், அம்ஜத் அலிகான் உள்ளிட்ட பிரபல கலைஞர்களுடன், இசை நிகழ்ச்சிகளையும் நடத்திஉள்ளார். ஈரான், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளில் நடந்த சர்வதேச இசை விழாக்களில் பங்கேற்றார். சில கன்னட படங்களுக்கு இசை அமைத்துள்ளார். 'பத்மபூஷண், சங்கீத கலாநிதி' உட்பட ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். 1997 அக்., 28ல் தன் 77வது வயதில் காற்றில் கலந்தார்.வீணை இசைக் கலைஞர் மைசூர் வி.துரைசுவாமி, காலமான தினம் இன்று!

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X