பொது செய்தி

இந்தியா

'கடல் உரிமைகளை பாதுகாக்க இந்தியா உறுதி'

Added : அக் 27, 2021
Share
Advertisement
புதுடில்லி:''தன் கடற்பகுதிக்குள் உள்ள சட்டப்பூர்வமான உரிமைகளை பாதுகாக்க, இந்தியா உறுதி கொண்டுள்ளது,'' என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.இந்தோ - பசிபிக் பிராந்திய மாநாட்டில் அவர் பேசியதாவது:இந்தோ - பசிபிக் பிராந்தியம், பல சவால்களை எதிர்கொண்டு வருகிறது. இவற்றை சமாளிக்க ஒற்றுமை தேவை. தன் கடற்பகுதிக்குள் உள்ள சட்டபூர்வமான உரிமைகளை பாதுகாக்க, இந்தியா

புதுடில்லி:''தன் கடற்பகுதிக்குள் உள்ள சட்டப்பூர்வமான உரிமைகளை பாதுகாக்க, இந்தியா உறுதி கொண்டுள்ளது,'' என, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

இந்தோ - பசிபிக் பிராந்திய மாநாட்டில் அவர் பேசியதாவது:இந்தோ - பசிபிக் பிராந்தியம், பல சவால்களை எதிர்கொண்டு வருகிறது. இவற்றை சமாளிக்க ஒற்றுமை தேவை. தன் கடற்பகுதிக்குள் உள்ள சட்டபூர்வமான உரிமைகளை பாதுகாக்க, இந்தியா உறுதி கொண்டு உள்ளது. அதே நேரத்தில் மற்ற நாடுகளின் உரிமைகளை, இந்தியா எப்போதும் மதிக்கும். இந்தியா ஒரு போதும் மற்ற நாடுகளின் எல்லைகளில் அத்துமீறியதில்லை; அத்துமீறவும் செய்யாது.

சில நாடுகள் எல்லைகளை விரிவுப்படுத்தும் நோக்கில் செயல்படுவது, அமைதிக்கு எதிரானது. எல்லைகளை பாதுகாக்க அனைத்து நாடுகளுக்கும் உரிமையுள்ளது. அடுத்த நாடுகளின் எல்லைகளில் அத்துமீறுவது ஜனநாயக விரோதமானது. அது அமைதியை சீரழிக்கும்.முந்தைய காலத்தில் கடல்வழி வர்த்தகத்தால், கலாசாரம் பரவியது. இந்தியாவில் தோன்றிய புத்தமதம், இலங்கைக்கு சென்று, அங்கிருந்து, கொரியா வரை உள்ள கிழக்காசிய நாடுகளில் பரவி உள்ளது. இதற்கு கடல் வழி இணைப்பு தான் பெரிதும் காரணம்.

இந்தியாவின் காவியங்களான ராமாயணம், மஹாபாரதம் ஆகியவை தெற்காசிய நாடுகளின் கலாசாரத்தில் பரவியுள்ளது. இதற்கும் கடல்வழி இணைப்பு தான் காரணம்.இவ்வாறு ராஜ்நாத் சிங் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X