பொது செய்தி

இந்தியா

புதிய கட்சி துவக்குவது உறுதி அமரீந்தர் சிங் அறிவிப்பு

Added : அக் 27, 2021
Share
Advertisement
சண்டிகர்:''புதிய கட்சி துவக்குவது உறுதி. தேர்தல் கமிஷன் அனுமதி கிடைத்ததும், கட்சியின் பெயர், சின்னத்தை வெளியிடுவேன்,'' என, பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.காங்., ஆளும் பஞ்சாபில் கட்சியில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில், மூத்த தலைவர் அமரீந்தர் சிங், முதல்வர் பதவியில் இருந்து விலகினார். அவரைத் தொடர்ந்து சரண்ஜித் சிங் சன்னி முதல்வரானார். கட்சியில்

சண்டிகர்:''புதிய கட்சி துவக்குவது உறுதி. தேர்தல் கமிஷன் அனுமதி கிடைத்ததும், கட்சியின் பெயர், சின்னத்தை வெளியிடுவேன்,'' என, பஞ்சாப் முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

காங்., ஆளும் பஞ்சாபில் கட்சியில் ஏற்பட்ட கோஷ்டி மோதலில், மூத்த தலைவர் அமரீந்தர் சிங், முதல்வர் பதவியில் இருந்து விலகினார். அவரைத் தொடர்ந்து சரண்ஜித் சிங் சன்னி முதல்வரானார். கட்சியில் இருந்து விலகிய அமரீந்தர் சிங், புதிய கட்சி துவக்கப் போவதாக தெரிவித்துஇருந்தார்.


பாதுகாப்பு பிரச்னை

இந்நிலையில், அவர் கூறியுள்ளதாவது:நான் புதிய கட்சியை துவக்குவது உறுதி. மாநில சட்டசபைக்கு அடுத்தஆண்டு துவக்கத்தில் தேர்தல் நடக்க உள்ளது. அதில், 117 தொகுதிகளிலும் நாங்கள் போட்டியிடுவோம்.கட்சியின் பெயர் மற்றும் சின்னம் ஒதுக்கக் கோரி விண்ணப்பித்துள்ளோம். தேர்தல் கமிஷன் அனுமதி கிடைத்ததும், அது குறித்து தெரிவிக்கப்படும்.

பா.ஜ.,வுடன் கூட்டணி அமைக்கப் போவதாக கூறுகிறார்கள். நான் கூறியதை சரியாக புரிந்து கொள்ளவில்லை. வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்தில் நல்ல முடிவு ஏற்பட்டால், தொகுதி பங்கீடு குறித்து பா.ஜ.,வுடன் பேசத் தயாராக உள்ளதாக கூறினேன்.

அகாலி தளம், ஆம் ஆத்மி, காங்.,கிடம் இருந்து பஞ்சாபை காப்பாற்ற வேண்டும். அதற்காக ஒத்த கருத்து உள்ள கட்சிகளுடன் கூட்டணி அமைக்க தயார். கடந்த தேர்தலின் -போது அளித்த வாக்குறுதிகளில், 92 சதவீதத்தை, கடந்த, 4.5 ஆண்டுகளில் நிறைவேற்றிஉள்ளேன்.

பி.எஸ்.எப்., எனப்படும் எல்லை பாதுகாப்புப் படைக்கான அதிகார எல்லை விரிவுபடுத்தப்பட்டு உள்ளது தொடர்பாக பொய் தகவல்களை கூறி வருகிறார்கள். மாநிலத்தின் அதிகாரம் பறிக்கப் படுவதாக கூறுகிறார்கள்.எல்லையில் பாதுகாப்பு பிரச்னை உள்ளது. மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கவே, படையின் அதிகார எல்லை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் காங்., தலைவர்களும் பொறுப்பில்லாமல் பேசுவது வருத்தம்அளிக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.


எதிர்மறை சக்தி

புதிய கட்சி துவக்கும் அமரீந்தர் சிங்கின் முடிவு குறித்து, அவரை தொடர்ந்து விமர்சித்து வரும் பஞ்சாப் காங்., தலைவர் நவ்ஜோத் சிங் சித்து கூறியுள்ளதாவது:அமரீந்தர் சிங் தன் சொந்த நலனுக்காக மாநிலத்தின் நலனை அடகு வைத்துவிட்டார். பஞ்சாபில் நீதி மற்றும் வளர்ச்சிக்கு தடையாக இருந்த எதிர்மறை சக்தி அவர். பா.ஜ.,வின் கட்டுப்பாட்டில் உள்ள அவரை, மக்கள் மன்னிக்க மாட்டர்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X