பெண்ணிடம் அத்துமீறல் 15 வயது கேரள சிறுவன் கைது

Added : அக் 27, 2021
Share
Advertisement
மலப்புரம்,:கேரளாவில், 23 வயது பெண்ணை பலவந்தமாக இழுத்து சென்று தாக்கி, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற, 15 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கொன்டோட்டி என்ற இடத்தை சேர்ந்த 23 வயது பெண், கடந்த 25ம் தேதி இரவு தன் வீட்டின் அருகே உள்ள வயல் வரப்பு வழியே கணினி வகுப்புக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த 15 வயது

மலப்புரம்,:கேரளாவில், 23 வயது பெண்ணை பலவந்தமாக இழுத்து சென்று தாக்கி, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற, 15 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.

கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் உள்ள கொன்டோட்டி என்ற இடத்தை சேர்ந்த 23 வயது பெண், கடந்த 25ம் தேதி இரவு தன் வீட்டின் அருகே உள்ள வயல் வரப்பு வழியே கணினி வகுப்புக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.அப்போது அவரை பின் தொடர்ந்து வந்த 15 வயது சிறுவன், அந்த பெண்ணை பின்பக்கமாக வந்து கட்டிப்பிடித்தார். அவனது பிடியில் இருந்து தப்பிக்க முயன்ற பெண்ணை பலவந்தமாக இழுத்து சென்ற சிறுவன், பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.

அவனிடம் இருந்து தப்பிக்க அந்த பெண் கடுமையாக போராடி உள்ளார்.இதையடுத்து, அருகில் கிடந்த கல்லால் பெண்ணின் முகத்தில் தாக்கினார். ஒருகட்டத்தில் தப்பி ஓடிய பெண், அருகிலிருந்த வீட்டில் தஞ்சம் அடைந்தார். அந்த வீட்டில் இருந்த பெண், உதவி கேட்டு கூக்குரல் எழுப்பியதை அடுத்து, அப்பகுதி கவுன்சிலர் உமர் பரூக் என்பவர் சம்பவ இடத்துக்கு வந்தார்.

இதையடுத்து அந்த சிறுவன் தப்பி சென்றான். சிறுவனின் அங்க அடையாளங்கள் குறித்து பெண் சொன்ன தகவல்களின் அடிப்படையில் போலீசார் கைது செய்தனர்.கொன்டோட்டியை சேர்ந்த அந்த சிறுவன் 10ம் வகுப்பு படித்து வருகிறான். மாநில அளவிலான ஜூடோ சாம்பியன்ஷிப் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளான்.

சிறுவன் மீது பாலியல் பலாத்காரம், கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X