கூட்டணி உடைவதை தடுக்க லாலுவுடன் சோனியா பேச்சு

Updated : அக் 29, 2021 | Added : அக் 27, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி:பீஹாரில், 'மெகா' கூட்டணி உடைவதை தடுக்கும் நோக்கில், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவை டெலிபோனில் தொடர்பு கொண்டு, காங்., தலைவர் சோனியா பேசினார்.பீஹாரில், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைமையிலான மெகா கூட்டணியில், காங்கிரஸ் ௧௦ ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது.ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்ற லாலு பிரசாத் யாதவ், மூன்றாண்டு
கூட்டணி, லாலு, சோனியா பேச்சு

புதுடில்லி:பீஹாரில், 'மெகா' கூட்டணி உடைவதை தடுக்கும் நோக்கில், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவை டெலிபோனில் தொடர்பு கொண்டு, காங்., தலைவர் சோனியா பேசினார்.

பீஹாரில், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைமையிலான மெகா கூட்டணியில், காங்கிரஸ் ௧௦ ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகிறது.ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்ற லாலு பிரசாத் யாதவ், மூன்றாண்டு கால சிறை வாசம், மருத்துவ சிகிச்சைக்கு பின், பீஹார் அரசியலுக்கு திரும்பியுள்ளார்.

பீஹாரில் தாராப்பூர், குஷேஷ்வர் சட்டசபை தொகுதிகளுக்கு, வரும் ௩௦ல் இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தொகுதிகளில் ஒன்றை கூட காங்கிரசுக்கு ஒதுக்காமல், இரண்டிலும் ராஷ்ட்ரீய ஜனதா தளம் போட்டியிடுகிறது. இந்த இரண்டு தொகுதிகளில் காங்கிரசும் தனித்து களம் காண்கிறது. காங்கிரசை லாலு பிரசாத் யாதவ் ஒதுக்கியது, அக்கட்சியினருக்கு, குறிப்பாக பீஹார் மாநில காங்கிரஸ் கட்சியினருக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால், லாலுவை கடுமையாக விமர்சித்தனர்.

இதற்கு லாலு பதில் அளிக்கையில், 'காங்கிரசுடன் வைத்த கூட்டணியால், ராஷ்ட்ரீய ஜனதா தளத்துக்கு என்ன லாபம் கிடைத்தது. தேர்தலில் தோல்விகளை சந்தித்தது தான் மிச்சம். இடைத்தேர்தல் நடக்கும் இரண்டு தொகுதிகளில் ஒன்றை, காங்கிரசுக்கு ஒதுக்கியிருந்தால், அதில் டிபாசிட் கூட கிடைக்காது' என்றார்.

ஆனால், காங்கிரஸ் தலைவர் சோனியா, லாலுவுடனான கூட்டணி தொடர வேண்டும் என விரும்புகிறார். இதையடுத்து, அவர் லாலு பிரசாத் யாதவை டெலிபோனில் தொடர்பு கொண்டு நேற்று பேசினார். லாலுவிடம் அவரது உடல் நலம் பற்றியும், கூட்டணி தொடர்ந்து நீடிப்பது பற்றியும் சோனியா பேசியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
28-அக்-202121:44:58 IST Report Abuse
sankaseshan லாலு and சூனிய இருவரும் வெட்கம் கெட்டவர்கள் பீகாரில் 2 சீட்டாவது ஜெயிக்க முடியுமா என்ற நைப்பாசை இத்தாலிகாரிக்கு
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
28-அக்-202106:36:03 IST Report Abuse
Kasimani Baskaran பல மாநிலங்களில் புறமுதுகு காட்டி ஓடி தப்பிய காங்கிரஸ் சிறையில் இருக்கும் ஒரு குற்றாவாளியை கூட்டு வைத்து பாஜகவை எதிர்க்கும் நிலை மிகப்மிகப்பரிதாபமானது. இப்படி ஆகும் என்பது தெரிந்துதான் மணிசங்கர் ஐயர் பாக்கிஸ்தானில் சென்று ஒப்பாரி வைத்தாரோ என்று நினைக்கத்தோன்றுகிறது.
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
28-அக்-202106:30:27 IST Report Abuse
 Muruga Vel லாலுவுக்கு சோனியா பேசுவது புரியாது சோனியாவுக்கு லாலு பேசுவது புரியாது ..யார் என்னத்த புரிஞ்சுக்கிட்டாங்களோ ..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X