தமிழ்நாடு

கோவையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகும் அதிகாரிகள்!

Updated : அக் 28, 2021 | Added : அக் 27, 2021
Share
Advertisement
கோவை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு, அதிகாரிகள் தயாராகி வருகின்றனர். இதற்கென மாநில தேர்தல் ஆணையர் தலைமையில் ஆலோசனை கூட்டம், கோவையில் இன்று நடக்கிறது.உச்சநீதிமன்ற உத்தரவுபடி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகளை, மாநில தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம்,
 கோவையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு தயாராகும் அதிகாரிகள்!

கோவை: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற்கு, அதிகாரிகள் தயாராகி வருகின்றனர். இதற்கென மாநில தேர்தல் ஆணையர் தலைமையில் ஆலோசனை கூட்டம், கோவையில் இன்று நடக்கிறது.

உச்சநீதிமன்ற உத்தரவுபடி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஏற்பாடுகளை, மாநில தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் பங்கேற்கும் ஆலோசனை கூட்டம், கோவை பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லுாரி ஆடிட்டோரியத்தில் இன்று மாலை 4:00 மணிக்கு நடக்கிறது.

இதில் கோவை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களை சேர்ந்த கலெக்டர்கள், போலீஸ் கமிஷனர்கள், எஸ்.பி.,க்கள், மாநகராட்சி கமிஷனர்கள், நகராட்சி கமிஷனர்கள், பேரூராட்சி செயல் அலுவலர்கள் பங்கேற்கின்றனர். நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக, மாநில ஆணையம் நடத்தும் முதல் ஆலோசனை கூட்டம் என்பதால், இதில் முக்கிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் கருதுகின்றனர்.

கோவை மாவட்டத்தை பொறுத்தவரை ஒரு மாநகராட்சி, ஏழு நகராட்சிகள், 33 பேரூராட்சிகள் உள்ளன. மாநகராட்சி, நகராட்சிகளில் அவற்றின் ஆணையர்களும், பேரூராட்சிகளில் செயல் அலுவலர்களும் தேர்தல் அதிகாரிகளாக இருப்பர்.பேரூராட்சியாக இருந்து தரம் உயர்த்தப்பட்ட மதுக்கரை, கருமத்தம்பட்டி, கூடலுார், காரமடை ஆகிய நான்கு உள்ளாட்சிகளும் நகராட்சியாக முதல் தேர்தலை சந்திக்க உள்ளன.

மத்திய தேர்தல் ஆணையம் நவ.,1ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுகிறது. அதை அடிப்படையாக கொண்டு, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வார்டு வாரியான வாக்காளர் பட்டியல் தயாரிக்க, மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. இந்த தேர்தலில் பயன்படுத்தப்பட உள்ள மின்னணு இயந்திரங்களை பரிசோதித்து பார்க்கும் பணியில் பொறியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

எம்.பி.,- எம்.எல்.ஏ., தேர்தல்களில் பயன்படுத்தும் மின்னணு இயந்திரங்களுடன், வி.வி.பேட் எனப்படும் ஓட்டு சரிபார்க்கும் இயந்திரம் இணைக்கப்பட்டிருக்கும்.உள்ளாட்சி தேர்தலுக்கு பயன்படுத்தும் மின்னணு ஓட்டு இயந்திரங்களில், வி.வி.பேட் இருக்காது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X