வான்கடே மீது பணம் பறிப்பு புகார் வாக்குமூலம் பதிந்த அதிகாரிகள்

Added : அக் 27, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
மும்பை:பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், விசாரணை அதிகாரி சமீர் வான்கடே, 25 கோடி ரூபாய் கேட்டு பேரம் பேசியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக, அவரின் வாக்குமூலத்தை, போதைப் பொருள் தடுப்பு பிரிவின் சிறப்பு விசாரணைக் குழு பதிவு செய்தது.மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி
 வான்கடே மீது பணம் பறிப்பு புகார்  வாக்குமூலம் பதிந்த அதிகாரிகள்

மும்பை:பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், விசாரணை அதிகாரி சமீர் வான்கடே, 25 கோடி ரூபாய் கேட்டு பேரம் பேசியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக, அவரின் வாக்குமூலத்தை, போதைப் பொருள் தடுப்பு பிரிவின் சிறப்பு விசாரணைக் குழு பதிவு செய்தது.

மஹாராஷ்டிராவில் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடக்கிறது.


ஆதாரம்

இங்கு, மும்பையில் சொகுசு கப்பல் ஒன்றில் நடந்த போதை விருந்தில் பங்கேற்றதாக குற்றஞ் சாட்டப்பட்டு, பாலிவுட் நடிகர் ஷாருக் கானின் மகன் ஆர்யன் கான் உட்பட 20பேரை, போதைப் பொருள் தடுப்பு பிரிவின் மும்பை மண்டல இயக்குனர் சமீர் வான்கடே தலைமையிலான அதிகாரிகள் சமீபத்தில் கைது செய்தனர். இந்த வழக்கில், தனியார் துப்பறியும் நிபுணரான கே.பி.கோசாவி, அவரது கார் டிரைவரும், மெய்க்காப்பாளருமான பிரபாகர் செய்ல் உட்பட எட்டு பேர் முக்கிய சாட்சிகளாக சேர்க்கப்பட்டனர்.

முதன்மை சாட்சியான பிரபாகர் செய்ல், போதைப் பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:ஆர்யன் கான் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்ட பின், 10 வெற்று காகிதங்களில் போலீஸ் அதிகாரி சமீர் வான்கடே, என்னிடம் கையெழுத்து வாங்கினார். ஷாருக்கின் மேலாளரை கோசாவி உட்பட இருவர் சந்தித்து பேசி, வழக்கிலிருந்து ஆர்யன் கானை விடுவிக்க 25கோடி ரூபாய் பேரம் பேசினர். இதில் 8 கோடி ரூபாயை வான்கடேவிடம் தர வேண்டும் என, ஷாருக் மேலாளரிடம் கோசாவி தெரிவித்தார். இதற்கான ஆதாரங்கள் உள்ளன.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த புகார் குறித்து விசாரிக்க, டில்லியைச் சேர்ந்த போதைப் பொருள் தடுப்பு பிரிவின் துணை இயக்குனர் ஜெனரலும், லஞ்ச ஒழிப்புத் துறை தலைமை அதிகாரியுமான கியானேஸ்வர் சிங் தலைமையில் ஐந்து அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர்.அதிகாரிகள் ஐந்து பேரும் மும்பைக்கு வந்தனர். தெற்கு மும்பையில் உள்ள போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்துக்கு சென்று, சில முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.


விசாரணை

பின்னர், கியானேஸ்வர் சிங் கூறியதாவது:ஆர்யன் வழக்கில், சாட்சி கூறிய குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையை துவக்கியுள்ளோம். இந்த புகார் தொடர்பாக வான்கடேவின் வாக்குமூலத்தை யும் பதிவு செய்துள்ளோம். மற்ற சாட்சிகளின் வாக்குமூலத்தையும் பதிவு செய்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
yavarum kelir - yadhum vore ,இந்தியா
28-அக்-202113:28:33 IST Report Abuse
yavarum kelir அப்படியே ஆர்யா காண புடிச்சதுக்கு மான நஷ்ட ஈடு கூட கேளுங்களேண்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X