சாலைகளை மூடும் விஷயத்தில் னிப்போர்: மக்கள் அவதி

Added : அக் 27, 2021
Share
Advertisement
மைசூரு:சாலைகளை மூடும் விஷயத்தில், மைசூரு மாநகராட்சி மற்றும் 'முடா' எனும் மைசூரு நகர அபிவிருத்தி ஆணையம் இடையே ஏற்பட்டுள்ள பனிப்போரால் பொது மக்கள், வாகன பயணியர் பாதிப்படைந்துள்ளனர்.மைசூரு நகரில், பெரும்பாலான சாலைகள் சீர் குலைந்துள்ளன. சாரதா தேவி நகரில் உள்ள, முன்னாள் முதல்வர் சித்தராமையா இல்லத்துக்கு, இணைப்பு ஏற்படுத்தும் சாலை பாழாகி உள்ளது. புறநகர் பகுதிகளின்

மைசூரு:சாலைகளை மூடும் விஷயத்தில், மைசூரு மாநகராட்சி மற்றும் 'முடா' எனும் மைசூரு நகர அபிவிருத்தி ஆணையம் இடையே ஏற்பட்டுள்ள பனிப்போரால் பொது மக்கள், வாகன பயணியர் பாதிப்படைந்துள்ளனர்.

மைசூரு நகரில், பெரும்பாலான சாலைகள் சீர் குலைந்துள்ளன. சாரதா தேவி நகரில் உள்ள, முன்னாள் முதல்வர் சித்தராமையா இல்லத்துக்கு, இணைப்பு ஏற்படுத்தும் சாலை பாழாகி உள்ளது. புறநகர் பகுதிகளின் சாலைகளும், இதற்கு விதிவிலக்கல்ல. கிராமப்புற சாலைகளில், அக்கறை காண்பிக்கும் எம்.எல்.ஏ.,க்கள், நகர்ப்பகுதி லே -- அவுட்களை பொருட்படுத்துவது இல்லை.
சாலைகளை பள்ளங்களை மூடுவதில், சீர் செய்வதில் மைசூரு மாநகராட்சி, முடா இடையே பனிப்போர் ஏற்பட்டுள்ளது. புறநகர் சாலைகளின் நிர்வகிப்பு பொறுப்பு, இதற்கு முன் முடாவிடம் இருந்தது. சாலைகளுக்கு தார் பூசுவது, பள்ளங்களை மூடிவது போன்ற பணிகளை, முடா மேற்கொண்டது. ஆனால் மாநகராட்சி கட்டுப்பாட்டில் வந்த பின், இப்பணிகள் நடக்கவில்லை. இதுவே பிரச்னைகள் அதிகரிக்க காரணம்.

மைசூரின் சுற்றுப்பகுதி லே -- அவுட்டுகள், சாமுண்டேஸ்வரி தொகுதிக்கு உட்பட்டதாகும். இத்தொகுதி எம்.எல்.ஏ., கிராமப்பகுதி சாலைகளை பழுது பார்க்க, அபிவிருத்தி செய்வதற்கு தரும் முக்கியத்துவத்தை, நகர்ப்பகுதி சாலைகளுக்கு தருவதில்லை. மற்றொரு பக்கம், சாலைகளின் பொறுப்பை மாநகராட்சியிடம் ஒப்படைத்து, முடா கை கழுவிக்கொண்டது. மாநகராட்சியும் தன் கடமையை, சரியாக செய்யாததால், வாகன பயணியர், பொது மக்கள் அவதிப்படுகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X