பல கோடி ரூபாய் மோசடி வழக்கு: சித்தராமையா மீது குமாரசாமி குற்றச்சாட்டு

Added : அக் 27, 2021
Share
Advertisement
ராம்நகர்:ஐ.எம்.ஏ., நிறுவனத்தின் பல கோடி ரூபாய் மோசடி வழக்கிலிருந்து, தன் வலது கையான ஜமிர் அகமது கானை காப்பாற்றும்படி, சித்தராமையா என்னிடம் அனுப்பி வைத்தார்," என ம.ஜ.த., முன்னாள் முதல்வர் குமாரசாமி குற்றம்சாட்டினார்.ராம்நகர் பிடதியின், தன் இல்லத்தில் அவர் நேற்று கூறியதாவது:ஐ.எம்.ஏ., மோசடி வழக்கில், ஜமீரை காப்பாற்றுங்கள் என கூறி, அவரை என்னிடம் அனுப்பியதை, சித்தராமையா
பல கோடி ரூபாய் மோசடி வழக்கு: சித்தராமையா மீது குமாரசாமி குற்றச்சாட்டு

ராம்நகர்:ஐ.எம்.ஏ., நிறுவனத்தின் பல கோடி ரூபாய் மோசடி வழக்கிலிருந்து, தன் வலது கையான ஜமிர் அகமது கானை காப்பாற்றும்படி, சித்தராமையா என்னிடம் அனுப்பி வைத்தார்," என ம.ஜ.த., முன்னாள் முதல்வர் குமாரசாமி குற்றம்சாட்டினார்.
ராம்நகர் பிடதியின், தன் இல்லத்தில் அவர் நேற்று கூறியதாவது:ஐ.எம்.ஏ., மோசடி வழக்கில், ஜமீரை காப்பாற்றுங்கள் என கூறி, அவரை என்னிடம் அனுப்பியதை, சித்தராமையா நினைவு கூற வேண்டும். தரம்சிங் அரசை கவிழ்த்தது யார் என்பதை, நினைத்து பார்க்க வேண்டும்.


அதிகார அரசியல்

சித்தராமையாவுடையது, அதிகார அரசியல். மக்களின் முன்னேற்றம் அவருக்கு தேவை இல்லை. மதியம் வீட்டுக்கு சென்று, மாலை வரை உறங்கி, 6:00 மணிக்கு எழுந்து, எங்கு செல்வார் என்பது எனக்கு தெரியும். அப்போதும் பிற்படுத்தப்பட்டோர், தலித், சிறுபான்மையானர் பெயரில் அரசியல் செய்வது, அதிகாரத்துக்காக மட்டுமே; மக்களுக்காக இல்லை.

சித்தராமையா ம.ஜ.த.,வில் இருந்த போது, இதே வேலையை செய்து, கட்சியை பலவீனப்படுத்தினார். தற்போது காங்கிரசில் இருந்தும், அந்த வேலையைத்தான் செய்து, அக்கட்சியை பலவீனமாக்குகிறார். இவரிடமிருந்து, அரசியல் குறித்து பாடம் கற்க வேண்டிய அவசியமில்லை.மாண்டியாவில் நிகிலை தோற்கடிக்க, அனைவரும் சேர்ந்து அமைத்த சக்கிரவியூகம் எங்களுக்கும் தெரியும்.

ம.ஜ.த., பலவீனமாக உள்ளதா, வலுவாக உள்ளதா என்ற கவலை, சித்தராமையாவுக்கு ஏன்?எங்களை அவ்வப்போது சீண்டாதீர்கள். உங்களின் வண்டவாளம் எனக்கு தெரியும். அதை பகிரங்கப்படுத்த வேண்டி வரும். இவரது தயவால் நான் அரசியலுக்கு வரவில்லை. கடந்த, 1985ல் சாத்தனுாரில் தேவகவுடா தேர்தலில் நின்ற போது, சாதாரண தொண்டனாக உழைத்தேன். 1994ல் கட்சியை பலப்படுத்தினேன். பல எம்.எல்.ஏ.,க்களுக்கு, சக்தியூட்டினேன்.

ம.ஜ.த.,வில் இருந்த போது, இரண்டு முறை தோற்ற இவரை, அரசியல் ரீதியில் மேலேற்றியது தேவகவுடா தான். பணத்தை செலவிட்டு, வெற்றி பெற வைத்தது யார்?வீட்டுக்கு தீ தன் சுயநலத்துக்காக, காங்கிரசுக்கு சித்தராமையா குழி தோண்டுகிறார். இக்கட்சியினரின் வீட்டுக்கு தீ மூட்டுவதே இவர் தான். சிவகுமார் முதல்வராக, சித்தராமையா நிச்சயமாக விடமாட்டார்.

ஜாதி கணக்கெடுப்பு விஷயத்தில், சித்தராமையா இரட்டை வேடம் போடுகிறார். உங்களின் அரசியலை, நாங்கள் புரிந்து கொண்டோம்.ஆனால் அவரைப்போன்று, நான் ஜாலியாக பொழுது போக்கவில்லை. காலை முதல் இரவு வரை, கிருஷ்ணா அலுவலகத்தில் பணியாற்றினேன்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X