பொது செய்தி

தமிழ்நாடு

தீபாவளிக்கு அடுத்த சனியன்று விடுமுறை கேட்டு கோரிக்கை

Added : அக் 27, 2021
Share
Advertisement
கோவை: தீபாவளி பண்டிகையை தொடர்ந்து, வரும் சனிக்கிழமையன்று விடுப்பு அளிக்க வேண்டும் என்று ரேஷன்கடை பணியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர்கள் கூறியுள்ளதாவது:ரேஷன் கார்டுதாரர்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு, ரேஷனில் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களை முன்கூட்டியே இருப்பு வைத்து, காலை 8:00 முதல் இரவு 7:00 மணி வரை விற்பனை

கோவை: தீபாவளி பண்டிகையை தொடர்ந்து, வரும் சனிக்கிழமையன்று விடுப்பு அளிக்க வேண்டும் என்று ரேஷன்கடை பணியாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் அவர்கள் கூறியுள்ளதாவது:ரேஷன் கார்டுதாரர்களுக்கு தீபாவளி பண்டிகைக்கு, ரேஷனில் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களை முன்கூட்டியே இருப்பு வைத்து, காலை 8:00 முதல் இரவு 7:00 மணி வரை விற்பனை செய்யவும், குறைந்த விலையில் பட்டாசுகளை விற்பனை செய்யவும், வழங்கல் மற்றும் கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது.அதன்படி நாங்கள் பணிபுரிகிறோம். இது குறித்த சுற்றறிக்கைகளையும், அறிவிப்புகளையும், உத்தரவுகளையும் பிறப்பிக்கும் தமிழக அரசு, எங்களுக்கென்று தீபாவளியை தொடர்ந்து வரும் சனிக்கிழமை தினத்தை, விடுப்பாக எடுத்துக்கொள்ள அனுமதி வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X