பொது செய்தி

தமிழ்நாடு

வடவள்ளியில் ரவுண்டானா அமைக்கும் பணி துவக்கம்

Added : அக் 27, 2021
Share
Advertisement
வடவள்ளி: வடவள்ளியில், மூன்று ஆண்டுகளாக இழுபறியில் இருந்த, ரவுண்டானா அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது.கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், வேகமாக வளர்ந்து வரும் பகுதியாக வடவள்ளி பகுதி உள்ளது. இப்பகுதியில், மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில், பாரதியார் பல்கலை., அண்ணா பல்கலை., சட்டக்கல்லுாரி, தொழிற்சாலைகள் என முக்கிய இடங்கள் உள்ளதால், மருதமலை சாலையில் நாள்தோறும்

வடவள்ளி: வடவள்ளியில், மூன்று ஆண்டுகளாக இழுபறியில் இருந்த, ரவுண்டானா அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது.கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், வேகமாக வளர்ந்து வரும் பகுதியாக வடவள்ளி பகுதி உள்ளது. இப்பகுதியில், மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில், பாரதியார் பல்கலை., அண்ணா பல்கலை., சட்டக்கல்லுாரி, தொழிற்சாலைகள் என முக்கிய இடங்கள் உள்ளதால், மருதமலை சாலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.இதனால், வடவள்ளி பழைய பஸ் ஸ்டாண்ட் பகுதியில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதனை தவிர்க்க, நெடுஞ்சாலைத் துறையினர் சார்பில், ரவுண்டானா அமைக்கும் பணி துவங்கப்பட்டுள்ளது.நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'வடவள்ளியில், பல கட்ட சோதனைக்கு பிறகு, ரவுண்டானா திட்டம் ஒப்புதல் பெறப்பட்டது. தற்போது, 4 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில், ரவுண்டானா அமைக்கும் பணி துவங்கப்பட்டு உள்ளது. ரவுண்டானாவில், பூங்கா அமைப்பதா அல்லது சிலைகள் அமைப்பதா என்பது குறித்து மாநகராட்சியுடன் ஆலோசித்து வருகிறோம்' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X