பொது செய்தி

இந்தியா

நவ., 1 முதல்வீட்டு வாசலுக்கு ரேஷன் உணவு பொருட்கள் வழங்கும் திட்டம்

Added : அக் 27, 2021
Share
Advertisement
பெங்களூரு:பெங்களூரின், 28 சட்டசபை தொகுதிகளில், வீட்டு வாசலுக்கு ரேஷன் உணவு பொருட்கள் வழங்கும் திட்டம், நவம்பர் 1 முதல் அமல்படுத்தும் வகையில் மும்முரமாக ஏற்பாடுகள் நடக்கிறது.ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன்ரெட்டி ஆட்சிக்கு வந்த பின், 50 குடும்பங்களுக்கு ஒரு செயல்வீரரை நியமித்து, மக்களின் வீடுகளுக்கே ரேஷன் உணவு பொருட்கள் நேரடியாக கொண்டு சென்று

பெங்களூரு:பெங்களூரின், 28 சட்டசபை தொகுதிகளில், வீட்டு வாசலுக்கு ரேஷன் உணவு பொருட்கள் வழங்கும் திட்டம், நவம்பர் 1 முதல் அமல்படுத்தும் வகையில் மும்முரமாக ஏற்பாடுகள் நடக்கிறது.

ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன்ரெட்டி ஆட்சிக்கு வந்த பின், 50 குடும்பங்களுக்கு ஒரு செயல்வீரரை நியமித்து, மக்களின் வீடுகளுக்கே ரேஷன் உணவு பொருட்கள் நேரடியாக கொண்டு சென்று வினியோகிக்கப்படுகிறது.அது போன்று, கர்நாடகாவிலும் வீடு தோறும் ரேஷன் உணவு பொருட்கள் வினியோகிக்க திட்டமிட்டிருப்பதாக, முதல்வர் பசவராஜ் பொம்மை சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கர்நாடக உதய நாளான, வரும் நவம்பர் 1ல், பெங்களூரில் பரிசோதனை முறையில், வீட்டு வாசலுக்கு உணவு பொருட்கள் திட்டம் அமல்படுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.இது குறித்து, உணவு மற்றும் பொது வினியோக துறை அமைச்சர் உமேஷ் கத்தி, உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

பெங்களூரின் 28 சட்டசபை தொகுதிகளில், 700 ரேஷன் கடைகள் உள்ளன. அதன்படி, ஒவ்வொரு ரேஷன் கடைக்கும் ஒரு வாகனம் வாங்க ஆலோசிக்கப்பட்டுள்ளது.வாகனம் வாங்க ஆகும் செலவு, டீசல் செலவு, ஓட்டுநர் சம்பளம் போன்றவை குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டு உள்ளது.மேலும், ரேஷன் கடை உரிமையாளரே அந்த வாகனம் வாங்கினால், ஜி.எஸ்.டி., உட்பட வாகனம் வாங்க ஆகும் செலவில், 30 சதவீதம் நிதியுதவி வழங்கவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. வாகனம் வாங்க, ஆண்டுக்கு 4 சதவீதம் வட்டி விகிதத்தில், ஆறு ஆண்டுகளில் திரும்ப செலுத்தும் வசதியும் செயல்படுத்தப்படவுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X