மேலிட தகவலால் முதல்வர் அதிர்ச்சி

Added : அக் 27, 2021
Share
Advertisement
பெங்களூரு:ஹனகல், சிந்தகி இடைத்தேர்தல் நெருங்கும் நிலையில், பா.ஜ., மேலிடத்திலிருந்து வந்த தகவலால், முதல்வர் பசவராஜ் பொம்மை அதிர்ச்சியடைந்துள்ளார்.பா.ஜ., - எம்.எல்.ஏ., உதாசியின் மறைவால், காலியான ஹாவேரியின் ஹனகல்லுக்கும், ம.ஜ.த., - எம்.எல்.ஏ., மனகோலியின் மறைவால், விஜயபுராவின் சிந்தகிக்கும், அக்டோபர் 30ல் இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. வேட்பாளர்களின் வெற்றிக்காக, பா.ஜ., காங்கிரஸ், ம.ஜ.த.,

பெங்களூரு:ஹனகல், சிந்தகி இடைத்தேர்தல் நெருங்கும் நிலையில், பா.ஜ., மேலிடத்திலிருந்து வந்த தகவலால், முதல்வர் பசவராஜ் பொம்மை அதிர்ச்சியடைந்துள்ளார்.

பா.ஜ., - எம்.எல்.ஏ., உதாசியின் மறைவால், காலியான ஹாவேரியின் ஹனகல்லுக்கும், ம.ஜ.த., - எம்.எல்.ஏ., மனகோலியின் மறைவால், விஜயபுராவின் சிந்தகிக்கும், அக்டோபர் 30ல் இடைத்தேர்தல் நடக்கவுள்ளது. வேட்பாளர்களின் வெற்றிக்காக, பா.ஜ., காங்கிரஸ், ம.ஜ.த., தலைவர்கள் போராடுகின்றனர்.


தீவிர பிரசாரம்


முதல்வர் பசவராஜ் பொம்மை, முன்னாள் முதல்வர் எடியூரப்பா, அமைச்சர்கள் கோவிந்த் கார்ஜோள், சோமண்ணா, அசோக், பி.சி.பாட்டீல், சோமசேகர், பைரதி பசவராஜ், கோபாலய்யா உட்பட, பெரும்பாலான அமைச்சர்கள், தலைவர்கள், தொகுதியில் முகாமிட்டு தீவிர பிரசாரம் செய்தனர்.

எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா, மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார் உட்பட, இக்கட்சியின் தலைவர்களும் பிரசாரம் செய்தனர். அதேபோன்று ம.ஜ.த.,வின் தேவகவுடா, குமாரசாமி, பன்டப்பா காஷம்பூர், மாநில ம.ஜ.த., தலைவர் எச்.கே.குமாரசாமி என, பலரும் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஓட்டு சேகரித்தனர்.


மும்முனை போட்டி

மூன்று கட்சிகளுக்கும், இடைத்தேர்தல் வெற்றி மிகவும் முக்கியமாக உள்ளது. மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. ஒரு தொகுதியையாவது கைப்பற்றுவதன் மூலம், ஆளுங்கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்த வேண்டும் என, எதிர்க்கட்சிகள் நினைக்கின்றன.மக்கள் மனதில் இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்று, அரசு மற்றும் கட்சியின் இமேஜை அதிகரித்து, மக்களின் மனதில் இடம் பிடிக்க, ஆளுங்கட்சியான பா.ஜ.,வும் முயற்சிக்கிறது.

இடைத்தேர்தலுக்கு, பகிரங்க பிரசாரம் முடிவடைந்தது. அனைத்து கட்சிகளின் தலைவர்களும் தொகுதியை விட்டு வெளியேற வேண்டும். இனி, அந்தந்த வேட்பாளர்கள், வீடு,வீடாக சென்று ஓட்டு கேட்க வாய்ப்புள்ளது.


அதிர்ச்சி

இந்நிலையில், பா.ஜ., மேலிடத்திலிருந்து வந்த தகவல், முதல்வர் பசவராஜ் பொம்மை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.கர்நாடக பா.ஜ., பொறுப்பாளர் அருண் சிங், முதல்வர் பசவராஜ் பொம்மையை, தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அருண் சிங் கூறியதாவது:இடைத்தேர்தல் நடக்கும், இரண்டு தொகுதிகளிலும், பா.ஜ., வெற்றி பெறும் என, ஆய்வறிக்கை கூறியுள்ளது என்றாலும், அலட்சியமாக இருக்கக்கூடாது.

இறுதி வினாடியில், ஹனகல் தொகுதி கை நழுவும் வாய்ப்புள்ளது. எக்காரணத்தை கொண்டும், பா.ஜ.,வுக்கு பின்னடைவு ஏற்படக்கூடாது. எம்.பி., சிவகுமார் உதாசியுடன் ஆலோசியுங்கள். மடாதிபதிகளின் நம்பிக்கையை பெறுங்கள். வாக்காளர்களை கவர்ந்து, வெற்றிக்கு முயற்சியுங்கள்.பகிரங்க பிரசாரத்தின் இறுதி கட்டத்தில், முக்கிய தலைவர்கள் பங்கேற்க வேண்டும்.


கவலை

இடைத்தேர்தல் முடிவு வெளியான பின், நீங்கள் டில்லிக்கு வந்தால் போதும்.இவ்வாறு கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.அருண் சிங்கின் எச்சரிக்கையால், முதல்வர் பசவராஜ் பொம்மை கவலையடைந்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X