மாநிலத்தில் உரம் பற்றாக்குறை இல்லை: அமைச்சர்

Added : அக் 27, 2021
Share
Advertisement
பெங்களூரு:மாநிலத்தில் உரம் பற்றாக்குறை இல்லை. நவம்பர் இறுதி வரை, விவசாயிகளின் தேவைக்கேற்ற படி, உரம் சேமிப்பில் உள்ளது," என மத்திய உரம், ரசாயனத்துறை இணை அமைச்சர் பகவந்த் கூபா தெரிவித்தார்.பெங்களூரில், அவர் கூறியதாவது:நவம்பர் இறுதி வரை, கர்நாடகாவுக்கு 2.10 லட்சம் டன் உரம் தேவைப்படுகிறது. அதே அளவில் உரம் இருப்பில் உள்ளது. யூரியா உரத்துக்கும் பற்றாக்குறை இல்லை. இயற்கை

பெங்களூரு:மாநிலத்தில் உரம் பற்றாக்குறை இல்லை. நவம்பர் இறுதி வரை, விவசாயிகளின் தேவைக்கேற்ற படி, உரம் சேமிப்பில் உள்ளது," என மத்திய உரம், ரசாயனத்துறை இணை அமைச்சர் பகவந்த் கூபா தெரிவித்தார்.

பெங்களூரில், அவர் கூறியதாவது:நவம்பர் இறுதி வரை, கர்நாடகாவுக்கு 2.10 லட்சம் டன் உரம் தேவைப்படுகிறது. அதே அளவில் உரம் இருப்பில் உள்ளது. யூரியா உரத்துக்கும் பற்றாக்குறை இல்லை. இயற்கை உரமும் கூட, பெருமளவில் உள்ளது. யூரியாவுக்கு பதில், இயற்கை உரத்தை பயன்படுத்தலாம்.உரங்களின் விலை அதிகரிக்கவில்லை.

காங்கிரசார் அரசியல் நோக்கில், உரம் பற்றாக்குறை ஏற்பட்டதாக குற்றம்சாட்டுகின்றனர். உரங்களின் விலை உயர்ந்துள்ளதாக, பொய்யை பரப்புகின்றனர்.மத்தியில் 2008ல், காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. அப்போது உரத்துக்கு பற்றாக்குறை ஏற்பட்டிருந்தது. காங்கிரசார் துப்பாக்கி சூடு பற்றி மட்டும் பேசுகின்றனர். அன்றைய மத்திய அரசு, உரம் வழங்குவதில் தோல்வியடைந்தது குறித்து ஏன் பேசவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X